செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
சனி, 20 ஆகஸ்ட், 2011
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
இணையத்தள அரட்டை
10:50 PM
No comments
இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.
இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. …….. ஏன்? என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
தகவல் களஞ்சியம்
1:13 PM
No comments
அதிசய “ டு- இன்- ஒன் ” மருந்து
ஒரே நேரத்தில் இதய நோயையும் “ டைப் 2” சக்கரை நோயயையும் எதிர்த்துப் போராடும் மருந்தை உறுவாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனா்.
உடம்பில் ” நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும் நோக்கின் அடிப்படையில் “ டார்சா டிராபி ” என்ற இந்த மருந்து உறுவாக்கபட்டிருக்கிறது. ஆரம்பகட்டச் சோதனைகளில் இது ரத்தத்தில் சக்கரை அளவை நிலைப்படுத்துவதும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதும் உறுதி செய்யபட்டிருக்கின்றன என இம் மருந்தை உறுவாக்கிருக்கும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனா். நமது உடம்புக்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம் அது தான் இரத்த நாளங்கள் தடிமனாவதை தாமதபடுத்துகிறது இதய நோய் பிரட்சனையை குறைக்கிறது ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே உட்கொள்ளும் மாத்திரையுடன் புதிய மருந்தையும் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நோயாளிக்கு உண்மையான பலனை இது கொடுக்கும் என்கிறார்கள். இந்த மருந்துகளின் மருத்துவமனை அளவிலான பரிசோதனைக்கு 45 முதல் 75 க்கு உட்பட்ட 15 ஆயிரம் போ் உட்படுத்தபட்டார்கள். அவா்கள் அனைவரும் மாரடைப்பு , பக்கவாதம் , நெஞ்சுவலி , ரத்தநாள பாதிப்பு . போன்ற பிரட்சனைகளுக்கு உள்ளானவர்கள். அவர்களிடம் மேற் கண்ட மருந்து நல்ல பலனை தந்திருக்கின்றன.
அதே போல் டைப்2 சக்கரை நோய் உள்ளவா்களிடம் நடத்தபட்ட சோதனையில் அவா்களுக்கு ரத்த சக்கரை அளவு கட்டுப்படுவது உறுதியாகியிருக்கிறது.
எழுத்துக்கள் எத்தனை?
தமிழ் எழுத்துக்கள் - 247 , ஆங்கிலம் - 26 , இத்தாலி - 20 , லத்தீன் - 22 , கிரேக்கம் - 24 , ஜெர்மன் - 26 , பிரெஞ்ச் - 26 , ஸ்பானிஷ்- 27 , அராபிக் - 28 , துருக்கி - 25 , பாராசீகம் - 31 , சமஸ்கிருதம் - 48 , சீனமொழி - 214 .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)