செவ்வாய், 27 செப்டம்பர், 2011

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் சில….!காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனையோருடன் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டீர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..


2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா நீங்க  படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது  உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.


7. “நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஆா்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்ன்னு அவங்களுக்கு தெரியணுமில்ல  அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும் ” இந்த ட்ரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

வாழ்த்துக்கள் நண்பா்களே......................................

சனி, 24 செப்டம்பர், 2011

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…!

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?
3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி’ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் “நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க’ன்னா” நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?


5. மெசேஜ்’ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்’க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?6. ஹேய்… உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே “நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு” உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?


7. Loss of Pay’ ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்’ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் “என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா”ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?


10. “உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை”ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்……..அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புதிய வேலை வாய்ப்புகள்-

BHEL நிறுவனத்தில் என்ஜினீயர் பணிகள்


இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் நிறுவனமான பெல் நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: என்ஜினீயரிங் டிரெய்னீ
காலியிடங்கள்: 800 (மெக்கானிக்கல்-550, எலக்ட்ரிக்கல்-175, எலக்ட்ரானிக்ஸ்-75)
வயதுவரம்பு: இளங்கலை பட்டதாரிகள் 27 வயதிற்கு மிகாமலும், முதுகலை பட்டதாரிகள் 29 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கேட்-2012 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011
கேட்-2011 பற்றி தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்பட இதுபற்றி மேலும் தகவல்களைப் பெற http://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கெயில் இந்தியா நிறுவனத்தில் சீனியர் ஆபிசர் பணி

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தி எரிவாயு பொறுப்புக்கழகத்தில் GAIL(Gas Authority of India Limited)  தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, பாய்லர் ஆபரேஷன்ஸ் துறைகளில் அதிகாரியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவியின் பெயர்: சீனியர் ஆபிசர் (எப் அண்டு எஸ்)
காலியிடங்கள்: 18 (பொது-10, ஒபிசி-(என்சிஎல்)-3, எஸ்சி-3,எஸ்டி-2)
2.பதவியின் பெயர்: சீனியர் என்ஜினீயர் (பாய்லர் ஆபரேஷன்)
காலியிடங்கள்: 6 (பொது-2, ஒபிசி--3, எஸ்சி-1)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக் ஷன் துறையில் பணிமத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தி எரிவாயு பொறுப்புக்கழகத்தில் GAIL(Gas Authority of India Limited)  எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக் ஷன் துறையில் அதிகாரியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவியின் பெயர்: சீப் மேனேஜர் (மட் என்ஜினீயரிங்)
காலியிடங்கள்: 1 (பொது)
2.பதவியின் பெயர்: சீப் மேனேஜர் (ரிசர்வோயர்)
காலியிடங்கள்: 1(பொது)
3.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (டிரில்லிங்)
காலியிடங்கள்: 1 (பொது)
4.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (சிமெண்டிங்)
காலியிடங்கள்: 1(பொது)
5.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (இ அண்டு பி)
காலியிடங்கள்: 2 (பொது-1, எஸ்சி-1)
6.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (ஜியோ பிசிக்ஸ்)
காலியிடங்கள்: 2 (பொது-1, ஒபிசி(என்சிஎல்)-1))
7.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (ஜயோலஜி)
காலியிடங்கள்: 1(எஸ்டி)
8.பதவியின் பெயர்: மேனேஜர் (ரிசர்வோயர்)
காலியிடங்கள்: 1(எஸ்சி)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தில் வேலை

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிகளில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் டெக்னிக்கல்
காலியிடங்கள்: 97 (பொது-50, ஒபிசி-26, எஸ்சி-14, எஸ்டி-7) இவை வடக்கு மண்டலம்-4, கிழக்கு மண்டலம் (HQ உள்பட)-14 என்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிபெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கனரக வாகன ஒட்டுநருக்கான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் சிறப்பு.
வயதுவரம்பு: 01.09.2011 அன்று குறைந்தபட்சம் 25 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2011
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை(பிரிணட்-அவுட்) அனுப்ப கடைசி தேதி: 10.10.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.11.2011
இதுபற்றிய மேலும் தகவல்களை அறிய www.airindia.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்வங்கி உதவியாளர் தேர்வு: கட்டணமில்லா பயிற்சி

சைதை சா.துரைசாமி மனிதநேய அறக்கட்டளை சார்பில் அகில இந்திய அளவில் வங்கி உதவியாளர் பணி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படவுள்ளது.  இது குறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி: ஏழை எளிய மக்களின் கல்விக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 27-ந் தேதி அகில இந்திய அளவில் வங்கி உதவியாளர் பணி தேர்வு நடைபெறவுள்ளது.  இத்தேர்வு எழுதுவோர் வசதிக்காக சைதை சா.துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது.  இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்   www.saidais.com  என்ற இணையதள முகவரி அல்லது மையத்துக்கே நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளபவர்களுக்கு பயிற்சி புத்தகம்,குறிப்புகள்,கையேடுகள்,செய்தித்தாள்கள்,நூலகவசதி,இணையதள வசதி ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது.  

 
 என்.டி.பி.சி நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை
  
என்.டி.பி.சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்ப சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்: கிராஜூவேட் என்ஜினீயர்கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற துறைகளில் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.தேர்வுமுறை: விண்ணப்பதாரர்கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் வெறுபவர்கள் ஆன்லைன் மூலம் என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு கேட்-2012 தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.கேட்-2012 தேர்வு பற்றி விவரங்களை அறிய என்ற  iitd.ac.in/gate இணையதளத்தைப் பார்க்கவும். கேட்-2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ET2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு ஆன்லைனில் 06.01.2012 முதல் 26.01.2012-க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயதுவரம்பு உள்ளிட்ட மேலும் பல தகவல்களைப் பெற www.ntpccareers.net இணையதளத்தைப் பார்க்கவும். 


விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-266 dated 10.09.2011

1.பணியின் பெயர்: Technician-B (Post No: 1191)
காலியிடம்: 1(பொது)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ITI/NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 -20,000
2.பணியின் பெயர்: Cook (Post No: 1192)
காலியிடங்கள்: 9 (பொது-6,ஒபிசி-2, எஸ்சி-1)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hotel Management/Catering துறையில் சான்றிதழ் பட்டப்பிடிப்புடன் தேவையான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 -20,200
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:  30.09.2011
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனுடையை பதிவிறக்கம் நகலை தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer, Recruitment  And Review Section, VSSC, ATF Area, ISRO (PO), Tiruvananthapuram-695022.

இந்தியக் கப்பல் படைக்கு செப்டம்பர் 29, 30-ல் ஆள்சேர்ப்பு
இந்திய கப்பல் படையில் வரும் செப்டம்பர் 29, 30-ம் தேதிகளில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.  இந்தத் தேர்வு சென்னை ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 1991 ஜனவரி 31 மற்றும் 1995 ஜனவரி 30-ம் ஆகிய தேதிகளுக்கு இடையே பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அதற்கு நிகரான தொழில் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். குறிப்பாக கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயப் பாடமாகவும், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாகவும் படித்திருக்க வேண்டும்.  உடல்தகுதி தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து, 20 முறை உட்கார்ந்து எழுதல் வேண்டும். மேலும் 10 தண்டால் எடுக்க வேண்டும்.  விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு நிகரான சான்றிதழ்களுடன் என்.சி.சி. சான்று, வயது சான்று, நன்னடத்தை சான்று, விளையாட்டு சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.  மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை, நகல்களுடன் எடுத்து வர வேண்டும். தேர்வுக்கான பாட ஒழுங்கு விதிமுறைகளை   www.nausena-bharti.nic.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது கல்வி அலுவலகம் ஐ.என்.எஸ். அடையாறு, நேவி அலுவலகம், போர்ட் காம்ப்ளக்ஸ், ராஜாஜி சாலை, சென்னை 600 009 என்ற முகவரிக்குச் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.புதன், 21 செப்டம்பர், 2011

மனமே ரீலாக்ஸ் ப்ளீஸ்

      மனமே ரீலாக்ஸ் ப்ளீஸ் -பாகம்-1, பகுதி-1

        இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை 


     நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும் மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன்  எழுப்புகிற  கேள்வி -  

'ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளைக் கொடுக்க வேண்டும் ,'
     இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் புத்த  மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

     அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது  'என்னைக் காப்பாற்று ! காப்பாற்று !  என்று ஓர் அலறல். ஆற்றொரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. 'உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான்மாட்டேன்  என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன்  என்னைக் காப்பாற்று ' என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. 'பாவி முதலையே ... இது நியாயமா , ' என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... 'அதற்கென்ன செய்வது , இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை  என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. 
     
     சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட  கவலை இல்லை. ஆனால் நன்றி கெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


     முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன் மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் -

      'முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா , இதுதான் வாழ்க்கையா , ' அதற்குப் பறவைகள்  எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி  முட்டையிடுகிறோம் ... ஆனால் அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம்  முதலை சொல்வது சரிதான்


      ஏரிக்கரையில் மெய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தேடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்து போனபோது எனக்குத் தீனி போட  முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை  என்றது கழுதை.


     சிறுவனால் அப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். ' இல்லை  முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது ' என்று முயல்சொல்ல... முதலைக்கு கோபம் வந்து விட்டது. 
       சிறுவனின் காலைக் கவ்வியபடியே  வாதாடத் தொடங்கியது. 'ஊஹீம் சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை' என்றது முயல்.பொரிதாகச் சிரித்த முயல் ' புத்தியில்லாத முதலையே  உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் , சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே என்று நினைவுபடுத்த...முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேச துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து 'நிற்காதே ஓடிவிடு  என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.
       முதலை சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கு ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது  சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னைகையுடன் சொன்னது -
      'புரிந்ததா... இதுதான் உலகம்  இதுதான் வாழ்க்கை  சிறிது நேரத்துக்கெல்லாம் 

      தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தியது... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது.. சிறுவன் பெருமூச்சு விடுகிறான். 'இதுதான் உலகம்  இதுதான் வாழ்க்கை'   என்று சமாதானம் ஆகிறான்.

    வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது  என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.
     பரோடாவில் என்னைச் சந்தித்து கதறிய பெண்ணொருத்தியின் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம்.. ( தொடரும் )

திங்கள், 19 செப்டம்பர், 2011

தொழில் கடன் உதவி
தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

தேவை தெளிவான பார்வை

‘வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.


பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்
பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (ஷிமிஞிஙிமி ) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (  Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

அடமானக் கடன்

(secured loan) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.


எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?

பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் ( Debt Equity Ratio  ) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்

அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

தனிநபர் கடன்

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங்குகிறோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்சம் ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்பதால் எடுத்ததெற்கெல் லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தயார்

வங்கிகள் இப்போது தாராளமாக பர்சனல் லோன் தரக் காத்திருக்கின்றன. பொதுவாக, இந்தக் கடனுக்கு 14 - 22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி போன்றவை 1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி. எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம். பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 1248 மாதங்களில் கடனை திரும்பக் கட்டலாம்.

பேரம் பேசலாம்

உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனைக் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப் பொறுத்தவரையில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத் தொகை, சம்பளம் வாங்குபவரா/தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க

பர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? ( Flat Rate ) அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை ரூ. 4,028ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் ரூ. 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை ரூ. 3,476 ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி ரூ. 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட ரூ. 20,205 குறைவாகக் கட்டினால் போதுமானது.

முன்கூட்டி அடைக்கலாமா?

பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5% ஆக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25% வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்கின்றன. சில வங்கிகள் 612 மாதங்களுக்குப் பிறகே கடனை முன் கூட்டியே மொத்தமாக அடைக்க ஒப்புக் கொள்ளும். இந்த விவரம் லோன் அக்ரிமென்டில் இருக்கும்.நேரம் இருக்கும் பட்சத்தில் ஒன்றுக்கு மூன்று வங்கிகளில் வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, பரிசீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.

கிளீன் லோன்

சில வங்கிகள் தனி நபர் கடனை ‘கிளீன் லோன்’ என்ற பெயரில் வழங்கி வருகின்றன. அரசு மற்றும் பொதுத் துறை பணியாளர்கள், முன்னணி தனியார் நிறுவனங்களின் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் இக்கடனைப் பெற முடியும். கடன் தொகை, 10 மாதச் சம்பளமாக இருந்தால், 60 மாதங்களிலும், 5 மாத சம்பளமாக இருந்தால் 36 மாதங்களிலும் கடனைத் திரும்பக் கட்டலாம். இதற்கு மூன்றாம் நபர் கேரண்டி இருவர் கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகையை சம்பளத்தில் பிடித்துக் கொள்ள தொழில் நிறுவனத்தின் அனுமதி அளிக்கும் கடிதமும் கொடுக்க வேண்டும்.       

திங்கள், 5 செப்டம்பர், 2011

சொத்தை விற்று திருக்குறள்

காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூபி ரெஜினா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், பாடத்தில் இருந்த திருக்குறள்களை மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு, அதிலிருந்த கருத்துச் செறிவுகள் பிடித்துப் போக, ஒட்டுமொத்த நூலையும் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.பள்ளிப் பாடநூலில் இருபது திருக்குறள்கள் இருந்தால், பத்து மனப்பாடப் பகுதியாக இருக்கும். அதைப் படிப்பதற்கே மாணவர்கள் திணறிவிடுவர். இதைக் கருத்தில் கொண்ட ரூபி, "அனைத்து திருக்குறள்களையும் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு' என்று அறிவித்திருக்கிறார். அறிவித்தபடியே திருக்குறள் நூலையும் பரிசளித்திருக்கிறார்.அதற்கடுத்த முயற்சியாக, 100 குறள் சொன்னால் 100 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். மாணவர்களிடையே உற்சாகம் கூட, குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசுத்தொகையையும் உயர்த்தியிருக்கிறார்.

திருக்குறளை மக்களிடமும் சேர்க்க வேண்டுமானால், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்று நினைத்த ரூபி, 2007ல் "உலகப் பொதுமறை மன்றத்தை' தொடங்கியிருக்கிறார்.தான் வாங்கும் சம்பளத்தில், 5,10 புத்தகங்களாக வாங்கி வழங்கிக் கொண்டிருந்த ரூபிக்கு, நிறைய திருக்குறள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.
ரூபி கொடுக்க நினைத்தது, 100, 200 புத்தகங்கள் அல்ல. 1330 குறள்களை 100 மடங்காக்கி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் புத்தகங்கள்(!) வழங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான பொருளாதார வசதியில்லை . இருந்தும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, புறநகர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, 24 லட்சத்திற்கு விற்று, புத்தகங்களை வாங்கிவிட்டார்.

நிலத்தை விற்று திருக்குறள் வாங்கும் அளவிற்கு, திருக்குறள் மீது அப்படி என்ன பற்று என்று கேட்டபோது, ""இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் பின்பற்றக் கூடிய உன்னதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம் எது என்றால் நிச்சயம் அது திருக்குறள் தான்.திருக்குறளை நம் வாழ்விற்கான மையக் கருவாகக் கொண்டு வாழ்ந்தோமானால், அதை விட சிறப்பான வாழ்க்கை எதுவுமில்லை. அக, புற வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும், திருக்குறளில் இருக்கின்றன.ஒவ்வொரு குடிமகனும் திருக்குறளை நெஞ்சில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்தால் உலகில் எவ்விதமான குற்றங்களும் நிகழாது. திருக்குறள் என் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது.இந்தச் சேவையை, என் உறவினர்கள் பலவாறாய் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மனநிறைவைத் தருகிறது'' என்கிறார் ரூபி. இவரின் திருக்குறள் "ஆர்வத்தை' கண்ட பல்வேறு அமைப்புகள், இவருக்கு தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளன.

""கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது, 133 கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மிகவும் சந்தோஷமான தருணம்'' என நெகிழும் ரூபி, சிறைக் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.விடுமுறை நாட்களில், மத்திய சிறைச் சாலைகளுக்குச் செல்லும் ரூபி, திருக்குறள் நூலை வழங்கி, அதிலுள்ள அறிவுரைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார். புத்தகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, பரிசு கொடுப்பதிலும் ரூபி பிரமிப்பூட்டுகிறார். 1330 குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் முதல் 33 பேருக்கு, 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஏழு பேருக்கு வழங்கியும் விட்டார்.திருக்குறளுக்காய் தன்னை அர்பணித்துவிட்ட இப்பெண்மணிக்கு, திருக்குறள் மாமணி, குறள்நெறிச் செல்வி, குறள் அரசி, தமிழ்த்தென்றல் உள்ளிட்ட 44 விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. இந்தச் செலவுகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காத ரூபிக்கு, "திருக்குறள் தியான மண்டபம்' அமைக்கும் ஆசை உள்ளது. இப்பணிக்காக நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். ரூபி நிச்சயம் இதனை செய்து முடிப்பார்.

எப்படி என்பதற்கு விடையாக ஒரு திருக்குறள் சொல்கிறது...
""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்''
ஒரு பொருளை அடைய எண்ணி, அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராய் இருந்தால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.

கூகுளுக்கு நன்றி


  இணையதளம் உருவாக்க வேண்டும் அதைவிட தேடுபொறியில் தேடும் போது சரியான நேரத்தில் மக்களிடம் எடுத்துச் காட்ட வேண்டும் இதைத்தான் SEO என்று சொல்கிறோம். மிகப்பெரிய நிறுவனங்கள் தேடுபொறியில் தங்கள் தளம் முதலிடம் வைப்பதற்காக பெரிய அளவு தொகையை செலவு செய்கின்றது.


நமது வலைபூவுக்கு கூகுள் நல்ல அதரவு வழங்கி உள்ளது கூகுள் சர்ச்  என்ஜின் மூலம் நமது srbc  என டைப் செய்த உடனே 3 வதாக தேடி கொடுக்கிறது

 ஆதரவு அளித்த வலைபூ  நண்பர்களுக்கும் கூகுள்  நிறுவனத்துக்கும்  நன்றி

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

கண்ணோடு இமை சேர்ந்த பந்தம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

என் இதய துடிப்பை நீ அறிவாயோ கண்மணியே

சனி, 20 ஆகஸ்ட், 2011

என் காதலே என்ன செய்வாய் என்னை

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இணையத்தள அரட்டை

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.

இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. …….. ஏன்? என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தகவல் களஞ்சியம்

                                          அதிசய “ டு- இன்- ஒன் ” மருந்து
ஒரே நேரத்தில் இதய நோயையும்  “ டைப் 2” சக்கரை நோயயையும் எதிர்த்துப் போராடும் மருந்தை உறுவாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனா்.

உடம்பில் ” நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும் நோக்கின் அடிப்படையில்  “ டார்சா டிராபி ” என்ற இந்த மருந்து உறுவாக்கபட்டிருக்கிறது. ஆரம்பகட்டச் சோதனைகளில் இது ரத்தத்தில் சக்கரை அளவை நிலைப்படுத்துவதும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதும் உறுதி செய்யபட்டிருக்கின்றன என இம் மருந்தை உறுவாக்கிருக்கும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனா். நமது உடம்புக்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம் அது தான் இரத்த நாளங்கள் தடிமனாவதை தாமதபடுத்துகிறது இதய நோய் பிரட்சனையை குறைக்கிறது  ரத்தத்தில் சக்கரை  அளவை கட்டுப்படுத்துவதற்கு  ஏற்கனவே உட்கொள்ளும் மாத்திரையுடன் புதிய மருந்தையும் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  நோயாளிக்கு உண்மையான பலனை இது கொடுக்கும் என்கிறார்கள். இந்த மருந்துகளின் மருத்துவமனை அளவிலான பரிசோதனைக்கு  45 முதல் 75 க்கு உட்பட்ட 15 ஆயிரம் போ் உட்படுத்தபட்டார்கள். அவா்கள் அனைவரும் மாரடைப்பு , பக்கவாதம் , நெஞ்சுவலி , ரத்தநாள பாதிப்பு . போன்ற பிரட்சனைகளுக்கு உள்ளானவர்கள். அவர்களிடம் மேற் கண்ட மருந்து நல்ல பலனை தந்திருக்கின்றன.
அதே போல் டைப்2 சக்கரை நோய் உள்ளவா்களிடம் நடத்தபட்ட சோதனையில் அவா்களுக்கு ரத்த சக்கரை அளவு கட்டுப்படுவது உறுதியாகியிருக்கிறது.

                எழுத்துக்கள் எத்தனை?

தமிழ் எழுத்துக்கள் - 247 , ஆங்கிலம் - 26 , இத்தாலி - 20 , லத்தீன் - 22 , கிரேக்கம் - 24 , ஜெர்மன் - 26 , பிரெஞ்ச் - 26 , ஸ்பானிஷ்- 27 , அராபிக் - 28 , துருக்கி - 25 , பாராசீகம் - 31 , சமஸ்கிருதம் - 48 , சீனமொழி - 214 .


 

வெள்ளி, 29 ஜூலை, 2011

வாக்குப் புரட்சி!

மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வசிப்பிடமாகிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச மீதான கோபத்தை, இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக உலகுக்கு அறிவித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்சவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளியது என்று கூறியிருப்பது, இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத் தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என்று சந்திரிகா இன்று கூறுவதை, தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள்.அற்றை நாள் முதலாக இலங்கையின் வளர்ச்சி, தமிழர்கள் சார்ந்ததாகவே இருந்துவந்தது. தமிழரின் இந்த ஆற்றல் மீதும், அறிவுப்புலத்தின் மீதும் சிங்களர்கள் கொண்ட பொறாமையின் விதைகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கள பேரினவாதக் கொள்கைக்கு இடமளித்து, இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்தது. இப்போதுதான் அவர்களுக்குப் புரிகிறது, தமிழர்கள் நம்முடன் இருந்திருந்தால் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருப்போம் என்று! இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு இல்லாமல், தமிழர்களைத் தவிர்த்துவிட்டு எந்தவோர் ஆட்சியாளரும் எதையும் செய்துவிட முடியாது. எந்தவொரு கட்சியும் இலங்கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டுமானால் தமிழர் ஆதரவு கட்டாயமாகத் தேவை. அரசியல் சக்தியாக மாறும் முடிவை, தேர்தல் மூலம் ஆளும்கட்சிக்கு நெருக்கடிதரும் அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இறுக்கத்தைத் தளர்த்தி, நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை பல இழப்புகளையும், பின்னடைவையும் தமிழீழப் போராளிகள் தவிர்த்திருக்கக் கூடும் என்கிற சிந்தனைக்கு இடமளித்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். இலங்கைத் தமிழர் இன்று அரசியல் களத்தில் கொள்கையளவில் ஒன்றுபட்டு நின்றபோதிலும் அவர்களை வழிநடத்த பலமான இயக்கமோ, தலைமையோ இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது. தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்தி, சிங்களத் தமிழர் கலப்பினத்தை உருவாக்கி, தமிழர் குரலை ஒடுக்கிவிட முடியும் என்கிற இலங்கை அரசின் எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் மண் விழுந்திருக்கிறது என்பது திண்ணம். இருபது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு, துன்பப்பட்டு மடிந்து மடிந்து ஒரு தஞ்சமும் இல்லாமல் மடியும் நிலைமைக்குத் தள்ளப்பட்டபோதும், மீண்டும் எழுந்துநிற்கும் தமிழர்கள் மத்தியில் ஊடுருவிகளாகக் குடியேற சிங்களர்கள் இனிமேல் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள். இனிமேல் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் தொடர இலங்கை அரசும் துணிவு கொள்ளுமா என்பதேகூட சந்தேகம்தான். இந்த வெற்றியை இலங்கையின் ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியும்கூட தாங்கிக் கொள்ளாது. இந்த வெற்றியைச் சிதைப்பதற்கு தமிழர் மத்தியில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கி, வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். இதற்காக எத்தனை கோடி கொடுத்தும், புதிய தமிழர் அமைப்புகளை உருவாக்க சிங்கள அமைப்புகளும் உதவக்கூடும்.இத்தனை காலம் சிந்திய ரத்தத்தின் நிறம் மாறாத மண்ணுக்காகவும், தாங்கள் இழக்க நேர்ந்த தமிழர் உயிர்களுக்காகவும், இப்போதும்கூட காணாதோர் பட்டியலில் உள்ள 1.40 லட்சம் தமிழர்களைக் கருத்தில் கொண்டும், அந்த மண்ணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி மட்டுமே தனித்து நிற்கவும், அந்த அரசியல் பலத்தின் மூலம் இலங்கைவாழ் தமிழர்கள் தங்களது நியாயமான சம உரிமையைப் பெறவும் உறுதிபூண வேண்டும்.இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்த கட்சிகளுக்கு அதைப்பற்றி யோசிக்கவே நேரமில்லாதபடி காராகிரகக் கவலைகள் இருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையின் வடபகுதியில் குடியமரச் செய்து, தமிழர்களின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?இலங்கையில் குடியரசுத் தலைவர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமுறை அமலில் இருக்கும்வரை, சிறுபான்மைத் தமிழர்களின் நலன் பேணப்படாது. மீண்டும் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே, தமிழர்களுக்கு மரியாதையும், ஆட்சியில் உரிய பங்கும், தமிழர்கள் வாழும் பகுதியில் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். அதற்கு யார் குரல் கொடுக்கப் போவது என்பதுதான் கேள்வி.

திங்கள், 25 ஜூலை, 2011

http://www.linkreferral.com/adwel.pl?oldrefid=337988   இந்த லிங்க் மூலம் இணையும் நண்பா்களுக்கு எமது தளத்தில்  3 மாதங்களுக்கு தங்களுடைய விளம்பரங்களை இலவசமாக வெளியிடும் வாய்ப்பு மேலும் விபரங்களுக்கு  srbc2010@yahoo.in மற்றும் srbc2010@gmail.com முகவரியில் தொடா்பு கொள்ளவும்

வெள்ளி, 1 ஜூலை, 2011

விரைவில் நமக்கான அரசு வேலை வாய்ப்பு திடடம்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட்டில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., ஆட்சியின் போது, வேலை இல்லாத இளைஞர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதற்காக, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யூ.ஒய்.இ.ஜி.பி.,), 2010, ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், உற்பத்தி பிரிவுக்கு, 5 லட்ச ரூபாய், சேவைப் பிரிவுக்கு, 3 லட்ச ரூபாய், வியாபாரத்திற்கு, 1 லட்ச ரூபாய், வங்கியில் கடன் வழங்க வழி செய்யப்பட்டது. அரசு சார்பில், 15 சதவீத மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டம், மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட்டாலும், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதுவரை, 1,200க்கும் மேற்பட்ட பயனாளிகள், மானியத்துடன் கூடிய, வங்கிக் கடன் பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 200க்கும் மேற்பட்டோருக்கு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் தேர்தல் வந்தது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் தொழில் துவங்க, 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்போது நடைமுறையில் உள்ள, "வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற பெயரை, "முதலமைச்சர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டத்தில், ஏற்கனவே வழங்கப்படும் கடன் தொகையின் உச்ச வரம்பை, உற்பத்தி பிரிவுக்கு, 10 லட்ச ரூபாய், சேவைப் பிரிவுக்கு, 5 லட்ச ரூபாய் மற்றும் வியாபாரத்திற்கு, 3 லட்ச ரூபாய் என உயர்த்தி வழங்குவதுடன், மானியத் தொகையை, 25 சதவீதம் உயர்த்தி வழங்கினால், மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்.

தாலிக்கு தங்கம், இலவசமாக, 20 கிலோ அரிசி, முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு, செப்டம்பரில், முதல் கட்டமாக, 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 9 லட்சத்து, 12 ஆயிரம் மாணவர்களுக்கு, இலவச,"லேப்-டாப்' என, தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழக அரசு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்தையும் கொண்டு வர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வியாழன், 30 ஜூன், 2011

பொருளாதாரப் பேதைகள்

விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நாட்டு மக்கள் தாங்கொணாத தவிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். ஆட்சியாளர்களோ சதவீதக் கணக்கைப் போட்டுக்கொண்டு ""ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது, வந்து கொண்டிருக்கிறது, வருவது உறுதி'' என்று கட்டியங்கூறிக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்கள்.விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டால் ""இது சர்வதேசச் சந்தையின் பாதிப்பு, எங்களுடைய சாமர்த்தியத்தால்தான் இது தீவிரமாக உங்களைத் தாக்கவில்லை'' என்று கூறுகிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்க எங்கே சந்தர்ப்பம் என்று அலைபாயும் நம்முடைய ஆட்சியாளர்கள், ""சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டால் இந்த விலைவாசி குறைந்துவிடும்'' என்று புதிதாக ஓத ஆரம்பித்திருக்கிறார்கள்.""விலைவாசி ஒன்றும் அப்படி ஒரேயடியாக உயர்ந்துவிடவில்லை, நம் நாட்டு மக்கள் தாங்கும் அளவுக்குத்தான் இருக்கிறது, நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் பட்டினிச் சாவு நிகழவில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மலிவு விலையிலோ இலவசமாகவோ கோதுமையும் அரிசியும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய களஞ்சியங்களில் அடுக்க இடம் இல்லாமல் வெட்ட வெளியில் தானியங்களை மழைக்கும் வெயிலுக்கும் தீனியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றெல்லாம் இறுமாப்புடன் பதில் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பணவீக்கம் என்ற பகாசுரன் பாமர மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வருவதை ""கிரைசில்'' என்ற தர மதிப்பீட்டு அமைப்பின் சமீபத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 5.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.ஏழைகள், நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுச் செலவை மட்டுமே சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் அரை வயிறு, கால் வயிறு என்று சாப்பிடத் தொடங்கிவிட்டன. ஏழை, நடுத்தர மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.சாப்பாட்டுச்செலவு அதிகமாகிவிட்டதால் மருத்துவச் செலவு, கல்விச் செலவு போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நோய் முற்றி பாயில் விழுந்தால்தான் இனி சிகிச்சை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.2008-09-ம் நிதியாண்டு முதல் 2010-11-ம் நிதியாண்டு வரை பணவீக்க விகிதம் 8% ஆக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது வெறும் 5% ஆகத்தான் இருந்தது.அரிசி, கோதுமை, பருப்பு, இதர தானியங்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு மட்டும் 11.6% ஆக இந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. உணவுப் பொருள் அல்லாத பண்டங்களின் விலை உயர்வோ 5.7% ஆகத்தான் இருந்திருக்கிறது. இதில் இரட்டை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது சாமான்யர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குத் தேவை குறைந்து அவற்றை வாங்குவோர் குறைந்ததால் அவற்றின் விலையை உயர்த்த முடியாமல் குறைத்துவிட்டனர். இதனால் அந்தத் துறையில் வேலை இழப்பும் ஆள் குறைப்பும் ஏற்பட்டிருக்கிறது. விலைவாசியைக் குறைக்க அரசு எடுத்த ஒரே நடவடிக்கை ரிசர்வ் வங்கி மூலம் வட்டி வீதத்தை கால், கால் (0.25) சதவீதமாக பத்து முறை உயர்த்தியதுதான். வீடு கட்டக் கடன் வாங்கியவர்களும் வாகனக்கடன் வாங்கியவர்களும் மேலும் தங்களுடைய பொருளாதாரச் சக்தியை இழந்ததுதான் மிச்சம்.அதனால், வங்கிகளின் புத்தக மதிப்பு லாபம் பல மடங்கு கூடியது; எனவே ஆட்சியாளர்கள் ""தங்களுடைய திறமையால் வங்கிகள் லாபம் ஈட்டி வருவதாக'' தம்பட்டம் அடித்து வருகின்றனர்.""சர்வதேச பண்டச் சந்தையில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், அதிலும் குறிப்பாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விலைவாசி குறையாது, உயர்ந்துகொண்டே போகும்'' என்று ஆரூடம் கூறுகிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை.சமீபத்திய டீசல், சமையல் கேஸ், கெரசின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கை ஜூலையிலேயே தாண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.3 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தன் வருவாயில் வெறும் 14 சதவீதத்தைத்தான் தன்னுடைய செலவுகளுக்காக ஒதுக்கினார். இப்போது அந்தத் தேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டாலும்கூட 17% அளவுக்கு அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் நடுத்தர மக்களிடம் சேமிப்பே இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும்கூட இந்தியாவில் பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு நடுத்தர மக்களின் சேமிப்புதான் அச்சாணியாக இருந்தது. இப்போது அந்த அச்சாணியும் முறியத் தொடங்கியிருக்கிறது.தாங்க முடியாத விலைவாசி உயர்வுதான் தீவிரவாதத்துக்கு அடிப்படைக் காரணமாக அமையும். சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயரும்போது அது சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறிவிடுகிறது. இதுகூடப் புரியாமல் ஆட்சி செய்த பிரெஞ்சு மன்னன் 16}ம் லூயியின் சரித்திரத்தை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.மக்களவை பொதுத் தேர்தலுக்குத்தான் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறதே என்று மெத்தனமாக இராமல் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முழு முனைப்புடன் அரசு செயல்பட வேண்டும். பொருளாதாரம் வளருவது இருக்கட்டும். முதலில் விலைவாசியைக் குறைப்பது பற்றிக் கவலைப்படுவோம். பொருளாதாரம் படித்தால் மட்டும் போதாது. மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

 

என் காதலே என்ன சொல்கிறாய்?
புதன், 29 ஜூன், 2011

என் காதலே என்ன சொல்கிறாய்?


புதன், 22 ஜூன், 2011

வளர்ச்சி நிதியா, விரய நிதியா?நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென தனியாக தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது என்பதே தவறு என்பதுதான் நமது கருத்து. மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பது சட்டம் இயற்றலும், மக்கள் பிரச்னைகளையும் தங்களது தொகுதியைப் பாதிக்கும் பிரச்னைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதுதான். தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களது வேலையை மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்ளும்போது கடமையும் நிதியும் திசை மாறுகிறது. இரட்டை வேலையாக மாறிப்போகிறது. ஆனால், இந்த நடைமுறையை நம்மால் மாற்றிவிட முடியாது என்கிற நிலையில், இதில் முறைகேடு இல்லாமலும், மக்களுக்கு உண்மையாகவே பயன்படும் வகையிலும் இத்திட்ட நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதுதான் நமது கருத்து.

ஆண்டுதோறும் ரூ.5 கோடி வீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி, சுமார் ரூ. 4,000 கோடி முறையாகச் செலவிடப்படுகிறதா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவிக்காலமான 5 ஆண்டுகளில் ரூ.25 கோடி ஒதுக்கீடு பெறவும், அவர் விருப்பம்போல திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளவும் முடியும் என்கிறபோது, இத்திட்டம் மக்கள் விருப்பமாக இருக்கவேண்டுமே தவிர, எம்எல்ஏ அல்லது எம்பியின் சொந்த விருப்பத்துக்காக, சுய விளம்பரத்துக்காகச் செய்யும் செலவுகளாக அமைந்துவிடக்கூடாது.

மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் திட்டங்களை ஆட்சியரும் அதிகாரிகளும் அனுமதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்ற நிலையை மாற்றவும், எந்தெந்தத் திட்டங்களை மட்டும் இத்திட்டத்தில் நிறைவேற்ற முடியும் என்கிற கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகிறது.

தனது பெயரை விளம்பரப்படுத்தும்விதமாக சாலையில் நிழற்குடை கட்டப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், நூறு மீட்டர் தள்ளி புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதைக் காணும்போது, நம் கண்ணெதிரில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுவதைத் தவிர, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, இப்படி ஓராண்டுக்குள் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழும் என்று தெரிந்தால், அதிகாரிகள் இத்தகைய நிழற்குடையை இடம்பெயர்க்க தக்க வடிவமைப்பில் அமைக்கத்தான் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதைப்பற்றி யோசிக்கவும்கூட, உண்மையை அறிந்துகொள்ளவும்கூட நேரமில்லாமல் மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு வழங்கும் திட்டச்செலவு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆக, இதுநாள் வரை இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் திட்டநிதிஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அரசுப் பணத்தை எதற்காக இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்குச் செலவிட வேண்டும்? ரூ.50 லட்சம் என வரையறை செய்வதைவிட இதை முற்றிலுமாக நீக்குவது என்பதே நியாயம்.

ஒரு எம்எல்ஏ, எம்பி என்பவர் தனது தொகுதிக்காக என்ன நன்மை செய்தார் என்பதை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை நம்மிடம் இல்லை. இவர்கள் கட்டித் தரும் கட்டடங்கள் அவர்கள் காலத்திலேயே இடிந்து விழுமெனில் அதன் தரம் குறைந்த கட்டுமானத்துக்காக அவரையும் பொறுப்பேற்கச் செய்யும் விதிமுறைகள் இந்தத் திட்டத்தில் இல்லை. ஆகவே, முறைகேடுகளுக்கு அதிக இடம் அளிப்பதாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடர்கிறது.

இரண்டு லட்சத்துக்கும் குறைவான திட்ட மதிப்பீடு இருப்பின் முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்படும் என்கிற புதியநடைமுறை, அவசியமற்ற சிறுசிறு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும். தொகுதிக்கு வெளியே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஏதாவது ஒரு திட்டத்துக்குச் செலவிடலாம் என்பதும் கண்ணுக்குத் தெரியாத இடத்தில், திட்டத்தைச் செய்ததாகச் சொல்லி பொய்யாகக் கணக்கெழுதவே உதவும்.

ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி வரை செலவிடப்படுவதால், இதில் பாதித் தொகையையாவது தேசிய அளவிலான ஒரு பொதுத்திட்டத்தை வரையறுத்து அதைச் செய்வதற்காக ஒதுக்கீடு செய்தால் மக்களுக்குப் பயன் தருவதாக அமையும்.

உதாரணமாக, 2011-12-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்காகக் கழிப்பறை வசதி, சுத்திகரிப்பு கருவி பொருத்திய தூய்மைக் குடிநீர் வழங்கல் ஆகிய திட்டத்துக்காக மட்டுமே 50 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும், இத்தகைய ஏதேனும் ஒரு பொதுத்திட்டத்துக்குப் பாதி நிதியை ஒதுக்கவும், இதற்காக இடங்களைத் தீர்மானிப்பதில் மட்டுமே எம்பிக்களுக்கு விருப்புரிமை வழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது நாடு தழுவிய ஒரு திட்டம் எம்எல்ஏ அல்லது எம்பியின் நேரடிக் கண்காணிப்பில் முறையாக நிறைவேற்றப்படும்.

மீதமுள்ள 50 விழுக்காடு தொகையை, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்பு நாளில் கிடைக்கும் மனுக்களில் சொல்லப்படும் மக்கள் தேவைகளில், அரசால் உடனடியாகச் செய்ய இயலாத நிலையில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ளப் பரிசீலிக்கலாம்.

இத்தகைய கட்டுப்பாடுகள், இத்திட்டம் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பமாக இல்லாமல் மக்களின் தேவை கருதிய விருப்பமாக இருக்கும். மக்கள் பணம் மக்களுக்கு முறையாகச் செலவிடப்படும்.

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவது தடுக்கப்பட்டு ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது குறிக்கோள் இல்லாமல் வாரி வழங்கப்படும் "எம்பிக்கள் வளர்ச்சிநிதி' என்பதாகத்தான் இருக்கும்.

நன்றி-தினமணி


துாரத்தில் நான் கண்ட உன் முகம் !
நதி தீரத்தில் தேன்கொண்ட என் மனம்!
சுகம் நுாறாகும்காவியமே !
ஒரு சோகத்தின் ஆரம்பமே !
இது உன்னை எண்ணி-  நான் !
பாடும் ராகம் !