செவ்வாய், 22 மார்ச், 2011

நண்பரின் கவிதை

                                            

 நமது இணைய மையத்திற்கு அடிக்கடி வருகை தரும் வாடிக்கையாளர்களில் இந்த நண்பரும் ஒருவர் தான் சில கவிதைகள் எழுதி இருப்பதாகவும் அதனை தங்களின் வலைப்பூ வில் வெளியிட் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார் அவரிடம் எத்தனை வருடமாக கவிதை எழுதுகின்றீர்கள் என்று கேட்டததற்கு இது எனது முதல் முயற்சி என்று கூறினார் எனவே அவரின் இந்த கன்னி முயற்சியினை மேன்மைபடுத்தவே அவருடைய கவிதையினை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம் இக்கவிதையில் தவறுகள் இருப்பின் அது அந்த நண்பரையே சாறும் . 




  ஜப்பானியர்களுக்கு மலரஞ்சலி
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு
 சோதனைகள் பல கடந்து சாதனைகள் புரிந்து
எறும்பிற்கு இணையான சுறுசுறுப்பின் சிகரங்களே
 
பூமித்தாயின் சினத்தால் சுனாமி என்ற சூனியக்காரியால் தரித்தரம் பிடித்த
சமுத்திரத்தால் மூன்றாம் யுத்தத்தில்
சுனாமி அரக்கனின் கோரப்பசிக்கு இரையாகிப் போன
உங்களுக்கு எங்கள் கண்ணீரை காணீக்கையாக்குகிறோம்
சுனாமி வைத்த தீயினால் எரிந்தது உங்கள் உடல் மட்டுமா?
எங்கள் இதயமும் தான்
நீங்கள் மடியவில்லை மண்ணுக்குள் ஆயிரமாயிரம்
ஆலமரங்களாய் புதைக்கப்பட்டுள்ளீர்கள்
இமை மூடினால் சுனாமி கனவு
இமை திறந்தாள் ஜப்பானியர்கள் நினைவு








பூமித்தாய் எச்சரிக்கை

சரித்திரம் படைக்காத மானிடகுமே

சமுத்திரத்தால் உங்களுக்கு தரித்திரம் பிடிக்கப் போகிறது
 என்னை சோதனை செய்தால் 
 நீங்கள் வேதனை அடைவீர்கள்
 என் மேல் மரம் நடு உன்னுள் மனித நேயம் வளர்த்திடு
 சமுத்திரத்தில் உறங்கிகொண்டிருக்கும்
 என் பினாமிகள் விழித்துக் கொண்டால் சுனாமி பேரலைகளாய் மாறும்
 நான் சிறிது உடலையைத்தால் பூகம்பம்
 இரு கரங்களில் ஒன்றை மாற்றினால் சுனாமி
 நீங்கள் நினைத்தால் நான் குளிரடைவேன் இல்லையேல்
 நித்தம் நித்தம் வந்து உங்களை தலாட்டுவேன்
 நீங்கள் என்னுள் உறங்குவதற்கு பூகம்பமாய் வந்து
 ஈழத்து வேங்கைகளின் ஆன்மா

 என் தாத்தா பூமியைத் தோண்டும் போது நிறைய தங்கம் கிடைத்தது
 என் தகப்பன் பூமியைத் தோண்டும் போது நிறைய தண்ணீர் கிடைத்தது
 நான் பூமியைத் தோண்டும் போது நிறைய நிலக்கரி கிடைத்தது
என் தனயன்  பூமியைத் தோண்டும் போது நிறைய மனித எலும்பு கூடுகள் தான் கிடைக்கும்
வேண்டாமே யுத்தம் என்றென்றும் சமாதானமாய் இரு

 காவை.எஸ்.மனோகரன்( அலைப்பேசி-91-7871048286)

கவிதை நன்றாக இருப்பின் நமது நண்பரை வாழ்த்தவும்
தவறுகள் இருப்பின் கருத்துரையை அவருக்கு அளிக்கவும்

நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டது உரிமை அவரையே சாறும் 

0 கருத்துகள்: