மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை
அ
ந்த பெரியவர் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள், சிறுவர்களின் கையில் கிடைக்கும் சிறு கூழாங்கற்கள் அவர் உடலை பதம் பார்ப்பதும் உண்டு, மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம், இடுப்பை மறைக்கும் கிழிந்த சாக்கு. முகத்தை மூடி மறைத்திருக்கும் பெரிய சாடமுடியும். தாடியும். குளித்தே பலவருடமாக அழுக்கில் உரம் ஏறிப்போன உடம்பும். குப்பைகளை வாரி வைத்து முதுகில் தொங்கவிட்டு இருக்கிற பாங்கும் தெருமுனையில் அவர் வந்தவுடன் வீசும் முடைவீச்சும். யாரையும் அவரிடம் அண்ட விடாமல்தான் செய்யும், திடீரென்று அவர் போடுகின்ற கூச்சலும். பாடுகின்ற பாடலும் மூளை பிளந்து போன பரம்பரை பைத்தியம் என்று பறைசாற்றும். ஊரில் இருக்கின்ற குப்பைகளையெல்லாம் பொறுக்கி எடுத்து பையில் திணித்துக் கொள்ளும் அவரின் ஆவேசம் எல்லோரையும் பயமுறுத்தும்.
இப்படிப்பட்ட அந்த பைத்தியத்தை அணுகிய மகாகவி பாரதியார். ஏன் இப்படி குப்பைகளை சுமக்கிறாய் என்று கேட்டாரம், அதற்கு அந்த பைத்தியம் முண்டம் முண்டம் நான் வெளியில் சுமக்கிறேன், நீ உள்ளுக்குள் சுமக்கிறாய் என்று கூறியதாம், அப்போதுதான் பாரதியாருக்கு புரிந்து இருக்கிறது, அவர் ஞானப்பித்தன் என்று வெளியில் தெரியும் கோலத்திற்கும் உள்ளுக்குள் இருக்கும் ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அலங்கரிக்கப்பட்ட பூக்களைப் புரட்டிப் பார்த்தால் புழுக்கள் நெளிவதைப் பார்க்கலாம், கலங்கி நிற்கும் சாக்கடையை துழாவினால் தங்கமும் கிடைக்கலாம்.
நம்மைப்போன்ற சாதாரணர்கள் அலங்காரத்தையும். அழகையும் பார்த்து ஏமாறுகிறோம், கண்முன்னே இருக்கும் அழகான ரோஜா தோட்டத்தை விட்டு விட்டு வானத்திலிருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்கப்போவதாக கனவுகளில் மிதந்து காலத்தை வீணாக்கி கொள்கிறோம், மிக சாதாரண நடப்பில் கூட மிகப்பெரும் விஷயம் அடங்கியிருப்பதை கவனிக்காமல் பல நேரத்தில் ஊதாசினம் செய்து நமது அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோம்,
நான் ஒரு நாயை 2 நாட்களாக கவனித்து வந்தேன், 2 நாட்களாகவே அந்த நாய் எதுவும் சாப்பிடுவதில்லை, வழக்கமான சுறுசுறுப்பு அதனிடம் இல்லை, வாய்விட்டு குரைக்கக் கூட. அது யோசனை செய்து கொண்டிருந்தது, மந்தமாக எதையோ சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு விட்டது போன்று உடலை நெளிப்பதும். வளைப்பதும் சுருண்டு படுப்பதுமாக இருந்தது, 3வது நாள் காலை என்று நினைக்கிறேன் உடைந்த செங்கல்களுக்கு இடையில் முளைத்திருந்த ஏதோ ஒரு செடியை போய் ஆசையுடன் தின்றது, எனக்கு அந்த காட்சி அதிசயமாக இருந்தது, ஆடு. மாடுகள். இலை. தழைகளை தின்பது ஒன்றும் வியப்பல்ல, நாய் தின்பது விந்தையாகவும் விசித்திரமாகவும் இருந்தது, என்ன ஆச்சரியம் சிறிது நேரத்தில் அந்த நாய் வாந்தி எடுத்தது, வாந்தியில் கந்தை சாக்கு பகுதிகளும் வந்து விழுந்தன.
நமக்கு நோய் வந்தால் அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம், நாம்வளர்க்கும் விலங்குகளுக்கும் கூட நாம் வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் தானாக பிறந்து வாழ்ந்து முடிந்து போகும் சாதாரண ஜீவன்களான இவைகளும் நோய் வந்தால் மருந்தை தேடும் அறிவை பெற்றிருப்பது இறைவனின் பெருங்கருணையல்லவாõ இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பதை ஐந்தறிவு ஜீவன்கள்கூட மிக தெளிவாக அறிந்து வைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் தானே.
நாய் தின்ற அந்த செடியை எடுத்து வரச்சொல்லி அதை ஆராய்ந்து பார்த்தேன், அந்த செடியின் பெயர் “தேள் கொடுக்கு இலை” என்பதை புரிந்து கொண்டேன், சாதாரணமாக அந்த தழை கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ள விஷம் சாப்பிட்டவர்களை வாந்தி எடுக்க வைக்க இதைப் பயன்படுத்துவர், நாய்கள் வாந்தி எடுக்க இந்த தழையை மட்டும் பயன்படுத்துவதில்லை, அருகம்புல்லையும் பயன்படுத்தும். பூனை. குரங்கு முதலியவை இத்தழைகளின் சக்தியை அறிந்து வைத்திருக்கின்றன, மிக சாதாரண விலங்குகளே மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை நீக்கி கொள்ளும் போது இறைவனின் உயரிய சிருஷ்டியான மனிதன் எந்த அளவு அறிந்து வைத்திருப்பான் என்று எண்ணி வியந்து போனேன்,
வான வெளியில் சதா சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற ஒலி அலைகளை மந்திரமாக கண்டறிந்து வெளியிட்ட மனிதன் தனது சரீரத்திற்குள் வியாபித்து இருக்கும் “ஓஜஸ்” சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க தெரிந்த மனிதன் மன சக்தியின் மூலம் இயற்கையின் இயக்கங்களையே கட்டுப்படுத் தெரிந்த மனிதன் இறைவனின் வரமாக பூமியில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து கிடக்கும் மூலிகைகளின் சக்தியை அறிந்தும் உள்ளான், பயன்படுத்தியும் வருகிறான்,
ஒரு காலத்தில் நான் மூலிகைகள் மனித உடலின் மருத்துவத்திற்கும் ரசவாதத்திற்கும் மட்டுமே பயன்படக்கூடியது என கருதியிருந்தேன், 1992-ஆம் வருடம் ராபர்ட் வில்சன் என்ற அன்பருக்காக சித்த வைத்தியம் பற்றி அறிந்த அவரின் உறவினர் ஆவி ஒன்றை அழைத்து பேசிக் கொண்டிருந்தோம், அந்த ஆவி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை அனுத்துளுத்தான் தழை என்ற மூலிகையால் தொடும் ஷனத்திலேயே உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று கூறியது,
மேலும் அந்த மூலிகைச் செடி கொல்லி மலை. உதக மண்டலம் போன்ற இடங்களிலும் செஞ்சிக் கோட்டையில் ராஜாக் கோட்டையில் உள்ள சுரங்க வழியில் இந்த மூலிகை உள்ளது என கூறியது, மேலும் அந்த ஆத்மா மூலிகைகளில் மந்திரப் பிரயோகம் பற்றியும் மூலிகைகளால் கிடைக்கும் மந்திர சித்திகளை பற்றியும் மிக விரிவாக கூறியது,
மூலிகைகளில் மந்திர பிரயோகம் என்கிற விஷயம் எனக்கு புதுமையாக இருந்தது, அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வலுத்த வேளையில் ஆவி சொன்ன அனுத்துளுத்தான் தழை உண்மையா அப்படி ஒன்று உண்டா என்ற கேள்வி மண்டைக்குள் பூரான் ஊர்வதைப் போல் உறுத்திக் கொண்டேயிருந்தது,
அந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன், தினமலர் பத்திரிகையை புரட்டி கொண்டிருந்த போது உதக மண்டலத்தில் வெளிநாட்டு நபர் ஒருவரின் அனுபவம் என்ற செய்தி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது, மலைச்சரிவுகளில் அவர் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் எருமைமாடு ஒன்று அவர் தொடையில் முட்டி பெரும்காயத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் செடிகொடிகளுக்கு இடையில் பொறுக்க முடியாத வலியில் நடக்க முயாமல் நடந்து மேலே ஏறுகின்ற போது. திடீரென்று கால்களில் இருந்த வலிமறைந்ததாகவும் வலி என்ன ஆனது என்று காலைப் பார்த்த போது காயம்பட்டதற்கான அடையாளமே இல்லாது மறைந்து விட்டதாகவும் அந்த வெளிநாட்டுக்காரர் கூறி இருந்தார்,
செடிகளுக்கு இடையில் நடந்து வரும் போது பலவிதமான செடி கொடிகள் தமது காயத்தை தொட்டதாகவும் அதில் ஏதோ ஒரு செடியின் வேகம் தான் தனது காயத்தை குணப்படுத்தியிருக்க வேண்டும் என கருதி அந்த செடி என்னவென்று அறிய 4 நாட்கள் தேடியதாகவும். இறுதி வரையில் தனக்கு கிடைக்கவே இல்லையென்று கூறியிருந்தது, மேலே சொன்ன ஆவி கூறியது என்னை நம்ப வைத்தது, அவரை குணப்படுத்தியது அனுத்துளுத்தான் தழையாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக நான் நம்புகிறேன்,
இந்த விஷயம் மந்திரத்திற்கும் மூலிகைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற என் வேட்கையை மிக அதிகமாக அதிகரித்தது, இதன் அடிப்படையில் பலவித ஆராய்ச்சிகளையும் நான் மேற்கொண்டேன், அதர்வண வேதமந்திர சம்ஹிதை என்கிற சாகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரமல்லி இலையை எடுத்து ஜீவபீஜம் மந்திரத்தை உருஏற்றிய போது எனக்கு கிடைத்த விசேஷமான தேவதைகளின் பிரசன்னம் புது விதமான உத்வேகத்தை தந்தது, அந்த உத்வேகம் மூலம் என் சுய அனுபவமாகவும் பல பழைய கிரகந்தங்ளின் மூலமாகவும் பல அரிய விஷயங்களை அறியப் பெற்றேன், அதை அனைத்தையும் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றையேனும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமó கிடைக்கின்ற பணம் என்றால் யாருமே அதை வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை, புதையலைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்ட சரித்திர வீரர்கள் எத்தனைப் பேரையோ நாம் படித்து இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம், முதலில் புதையலுக்காக போட்டியிட்டு புதைந்து போன சாம்ராஜ்ஜியங்களும் உண்டு, அப்படிப்பட்ட புதையல் எங்கு இருக்கிறது, எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு, புதையல் எங்கு இருக்கிறது என்று காட்டி தரும் ஒரு மூலிகை இருக்கிறது, அதன் பெயர் நிலம் புரண்டி என்பது, புதையல் என்பது அக்கால மன்னர்கள். நிலப் பிரபுக்கள். மிகப் பெரும் கருமித்தனம் கொண்டவர்கள் மற்றும் சேமிப்பில் அக்கறை கொண்டவர்கள் தங்களது செல்வத்தை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க பூமியில் புதைத்து வைப்பதாகும், அவர்கள் அப்படி செய்யும் போது வெறும் நிலத்தை தோண்டி மண்ணைப்போட்டு காசுகளை மூடி விடுவது இல்லை,
அப்பொருளை பாதுகாக்க பல அமானுஷ்ய சக்திகளை மந்திர உச்சாடனம் மூலம் அவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்துவிடுவார்கள், பூதம் புதையலை பாதுகாக்கும் கதையெல்லாம் வெறும் கற்பனைகளஞ்சியங்கள் அல்ல அதிலும் ஓரளவு உண்மைகள் உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,
அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பில் புதையல் இருப்பதால் தான் அதை எல்லோரும் எடுத்து விடுவது கடினமாக இருக்கிறது, இந்த சக்திகளின் பாதுகாப்பில் இருக்கும் புதையல்கள் ஒரே இடத்தில் இருப்பதும் இல்லை, இந்த சக்திகளால் பல இடங்களுக்கு நகர்த்தப்படுவதும் உண்டு, புதையல்களை பாதுகாக்கும் அமானுஷ்ய சக்திகளை அதற்குரிய முறையில் திருப்தி படுத்தினால் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்,
நிலம் புரண்டி மூலிகைச் செடி புதையல் எங்கே இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் ஒரு கருவியே ஆகும், இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான் கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,
இத்தகைய நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்து குழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும், தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும், மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும், காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்
புதையல் மிக ஆழமாக பல நூற்று அடிகளுக்கு கீழே இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீலேகா என்ற மூலிகையை புதைத்து விட்டால் குறைந்தது 6 மாதத்தில் நாம் தோண்டி எடுக்கும் சொற்ப ஆழத்தில் புதையல் மேலே வந்துவிடும், ஸ்ரீ லேகா என்பது 16 வகை மூலிகைகளின் கூட்டு வடிவமாகும், இது இமயமலை சாரல்களில் மட்டுமே கிடைக்கிறது, மூலிகை சாஸ்திரத்திலும். மந்திர சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வைத்து இருப்பார்கள்
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும், இருப்பினும் முறைப்படி காப்பு கட்டி எடுக்கப்பட்ட மூலிகையாக இருந்தால் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்,
ராமாயணத்தில் தசரதன் குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் என்பதை நாம் அறிவோம், அந்த யாகத்தில் கூறப்படும் மிக முக்கியமான புத்திர வர்ஷா என்கிற மந்திரத்தை விபூதி இலை என்ற மூலிகையில் உருஏற்றி அரை மண்டலம் சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புழுக்களை நீக்கியும் ஆண்களுக்கு மலட்டு தன்மைû போக்கியும் புத்திர சந்தானத்தையும் உண்டாக்கும், இம்முறையை இன்றும்கூட பலர் பயன்படுத்தி அற்புதமான பலனை அடைந்து வருகிறார்கள், இதை எம்மிடம் பெற்ற ஒரு அன்பர் கைமேல் பிள்ளையை பெற்றுள்ளார்,
இன்று நமது தமிழகமெங்கும் வறட்சி, அதனால் விவசாயம் பாதிப்பு கிணறுகளில் தண்ணீர் இல்லை, பயிர்கள் பட்டுப்போயின என்ற அழுகுரலும் அங்கலாய்ப்பும் எங்கும் கேட்கிறது, கிணறுகளில் தண்ணீர் ஊர பன்னீர் இலையில் சடாட்சர மந்திரத்தை 1008 முறை உருஏற்றி நீர் இல்லாத கிணற்றில் போட்டால் 9 நாட்களுக்குள் நீர் இல்லாத கிணற்றில் நீர் சுரக்கும், பயிர்களின் மீது பூச்சிகள் பரவினாலும் தென்னை மரங்களில் குருத்துப் புழுக்கள் அதிகரித்தாலும் மா. தென்னை. பலா போன்ற மரங்களில் காய்கள் குறைந்தாலும் ஆடு திண்டாப்பாலையை பஸ்பமாக்கி பிரணவ மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பாதிக்கப்பட்ட மரம். செடி. கொடிகளின் மேல் தெளித்தால் பூச்சிகள் அழிந்து நன்றாக காய்கள் அதிகரிக்கும்
இத்தகைய மூலிகைகளை உயரிய நிலையில் இருக்கும் தெய்வீக ஆத்மாக்களோடு மந்திர பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள், ஆத்மாவை அழைத்துப் பேசும் கலைதெரியாத சாதாரண மக்கள் கூட மன சுத்தியோடும் உடல் சுத்தியோடும் இதை செய்யலாம், அப்படி செய்தாலும் நல்ல பலனை கொடுப்பதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் பயிற்சி பெற்ற நல்ல மனிதர்களை இதைச் செய்தால் கைமேல் பலன் கொடுப்பது கண் கூடான விஷயம்
எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் மிகவும் சுறுசுறுப்பானவர், சதா சர்வகாலமும் ஏதாகினும் ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார், அவர் வேலை செய்யும் வேகம் சாட்டையால் சுழற்றப்பட்ட பம்பரம் ஒன்று அதிவேகமாக சுற்றுவது போல் இருக்கும் அவரைப்பற்றி நான் சிலநேரம் யோசிப்பதுண்டு, இரவில் கூட இவர் ஓய்வாக தூங்குவாரா? இல்லை அப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டுதான் இருப்பாரா? என்ற இறைவன் வேலை செய்வதற்காகவே இவரை படைத்துள்ளாரோ தானும் இவரை போல்தான் சதா வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று காட்டுவதற்காக இவரை பூமியில் நடமாட விட்டிருக்கிறாரோ என்றெல்லாம் எண்ணி வியந்ததுண்டு
இப்படி சுறுசுறுப்பின் இலக்கணமான அந்த இளைஞர் திடீரென்று ஒருநாள் மயங்கி விழுந்து விட்டார், அதன் பின்பு அவரிடம் படிப்படியான சில மாற்றங்களை நான் கவனித்தேன், சோர்ந்து உட்கார்ந்து விடுவதும் வேலையிடத்திலேயே சுருண்டு படுத்துவிடுவதும் உண்டு, நாளடைவில் அவர் கைகால்கள் நரம்புத் தளர்ச்சியால் நடுங்குவதைப் போல் நடுக்ககம் எடுக்க ஆரம்பித்தது, அவரிடம் நான் விசாரித்தேன், உனக்கு என்ன ஆயிற்று என்றுõ அவர் அதற்கு ஒன்றுமே புரியவில்லை, உடல் நடுங்குவதும். நாவறட்சி ஏற்படுவதும் அதற்கு மேல் கண்களின் பார்வை சக்தி குறைந்து விடுவதுமாக இருக்கிறது என்றார், அவர் மீது களிவிரக்கம் ஏற்பட்ட நான் எனது வசமாக இருந்த ஒரு தேவரையை அழைத்து அவருடைய உடலுக்கு என்ன என்று கேட்டேன், அதற்கு அந்த தேவதை அவருடைய மூளை நரம்புகளில் ஒன்றில் சீதளக் கிருமிகள் தாக்கி ரத்த ஓட்டத்திற்கு சிறு தடை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது, அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்ய விரும்பி அவரை ஒரு வாரமாக தேடினேன், கிடைக்கவில்லை,
ஒரு வாரம் சென்று வந்து தான் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும் பரிசோதனையில் தனது மூளை நரம்பில் நோய்த் தொற்று என்கிற பஆ உள்ளதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார், என் மீது தீவிர பக்தியும் அன்பும் கொண்ட அந்த நண்பரை குணமாக்கும்படி வேண்டினார் அவருக்காக சிவ பெருமானின் பரிவாரங்களான 12 ருத்திரர்களில் தலைவரான ஸ்ரீ மாகருத்ரரின் நேரடி அம்சமான ஸ்ரீ பிரபாசன் என்று போற்றுதலுக்குரிய தேவ கனத்தை அழைத்து பேசினோம், அவர் அந்த இளைஞரின் நோய் நீங்கிட சில மூலிகைகளை (அவர் கொடுத்த உத்தரவின்படி அந்த மூலிகைகளின் விபரம் இங்கு தரமுடியாமைக்கு வருந்துகிறோம்) அதர்வண வேத மந்திரங்களால் செறிவூட்டச் சொல்லி 2 மண்டலம் மட்டுமே அவரை சாப்பிடச் சொன்னார், அதன்படி அந்த இளைஞருக்கு செய்து கொடுத்தேன், ஒரு மாதத்தில் அந்த நண்பர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டார், 2 மண்டலத்திற்கு பின்பு அவர் பரிபூரணமாக குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பு அடைந்து விட்டார், இன்று அவர் நல்ல நிலையிலே உள்ளார், இப்படி எத்தனையோ மந்திரமும் மூலிகையும் செய்த மகத்துவத்தை சொல்லிக் கொண்டே செல்லலாம்
இறைவன் இந்த பூமியில் எந்தவொரு சிறிய வஸ்துவையும் காரணமில்லாமல் படைக்கவில்லை, ஒன்றைத்தழுவி ஒன்று இருப்பதைப் போல் தாவர ஜங்கமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பயன்படும் வண்ணமே இறைவன் சிருஷ்டித்துள்ளான், ரிக் வேதத்தில் வரும் பல ஸ்லோகங்கள் தாவரங்கள் சூரியனிடமிருந்து சக்தியை ஜீவர்களுக்கும் கொடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது, அதாவது அண்ட சராசரங்கள் அனைத்திலும் பரவியுள்ள பரமாத்மாவின் பரமசத்தை கிரஹித்து பூமிக்கு வழங்கி கொண்டிருக்கும் அமுத சுரபிகளே விருட்சங்கள் என்று வேதம் சொல்கிறது, விவிலியமும். திரு-கூர்-ஆனும் இதைப்போன்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன,
சுக்ருத சம்ஹிதையில் ஐந்தறிவும் ஆறறிவும் உடைய ஆத்மாக்களின் உடலின் நோயையும் மரங்களிலும் செடி கொடிகளிலும் மண்ணிலும் நோய்க்கான மருந்தையும் பரமான்மா வைத்துள்ளதாக வைரத்தை உடைத்தது போல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சுசருதர் ஒளஷதங்கள் ரசங்களாலும் மந்திரங்களாலும் நிரப்பபட வேண்டும் என்றும் கூறுகிறார்.
அந்தக் கால மருத்துவர்கள் மந்திரங்களிலும் வல்லுநர்களாக இருந்தார்கள், நவீன விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லாது சுசருதர் செய்த பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனைத்திலும் மந்திரங்கள் மூலிகைகளின் உதவிகளாலேயே செய்யப்பட்டதாக பழைய கிரந்தங்கள் கூறுகின்றன
நோய் தீர்க்கும் மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆலயங்கள் கிரேக்க நாட்டில் இருந்துள்ளன, அந்த ஆலயங்களில் படுத்து உறங்குவதனாலேயே நோய்கள் குணமாகி விடுவதாக கிரேகக் நாட்டின் மந்திர நிபுணர் கேலன் கூறியுள்ளார், சீன நாட்டில் கி,மு,450 ஆண்டில் வாழ்ந்த எம்ப்படிடாக்கின்ஸ் மனிதர்களின் தோல் மீதுள்ள துளைகள் வழியாக பல தீய சக்திகள் புகுந்தே நோயை உருவாக்குகிறது என்றும் அதை மந்திரங்களால் தொட்டே குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்
இன்று நடைமுறையில் உள்ள ரெய்கி. பிரானிக்ஹீலிங் என்ற முறைகளும் அண்டத்தில் உள்ள காஸ்மிக் மற்றும் பலவித பிரணவம் சார்ந்த பல கதிர்களை உடலுக்குள் செலுத்தவதே ஆகும், மந்திரங்களும் அண்ட நாதத்தின் மறுவடிவு ஆகும், ஆகவே அண்டசக்தியின் பிம்பங்களுடன் மூலிகைகளும் மந்திரங்களும் இணைந்தால் சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியமாக்கி விடலாம்.
மந்திரங்களில் இரண்டு வகை உண்டு, குட்டிச்சுவரை கோபுரமாக்கும் நல்ல மந்திரங்கள் ஒருவகை சாம்பிராஜ்யங்களை சாம்பல் மேடாக்கும் தீய மந்திரங்களை ஒரு வகை, இத்தகைய இருவகை மந்திரங்கள் உலகெங்கும் நம்மிடையே உள்ளது, தீய மந்திரங்களின் கொடுமையான விளைவுகள் பல குடும்பங்களை நாசமாக்கி இருக்கின்றன, அத்தகைய தீய மந்திரங்களை ஒடுக்குவதற்குரிய மந்திர மூலிகைகள் ஏதேனும் உண்டா? என்று நான் தேடுதலில் ஈடுபட்ட போது ஆன்மீக ரீதியிலும். மற்ற வகையிலும் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியிருக்கும் இன்னொரு உலக வாசிகளான தெய்வீக ஆத்மாக்கள் பலமூலிகைகளை எமக்கு காட்டின அவற்றில் தீவினைகளான பில்லிசூன்யத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சில மூலிகை வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
ஆடு தீண்டாப்பாலை. திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி. ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகள் கலந்து ஸ்ரீ ருத்மூலமந்திரம் ஹோமத்தில் ஆகுதி செய்யப்பட்ட மந்திர ஒளஷத பஸ்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் கொடுத்து வருகிறோம், இந்த மூலிகை பஸ்பத்தை கடல் நீரில் கலந்து சில மந்திர உச்சாடனத்துடன் சூன்யம் இருக்கும். பகுதியில் தெளித்தால் 9 நாட்களிலேயே தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் குடிகொண்டு பல சௌக்ய சௌபாக்கியத்தை தந்து வருவதை இன்றும் நடைமுறையில் பலர் அனுபவித்து வருகிறார்கள்.
இத்தகைய தெய்வீக ஆத்மாக்கள் பூமியின் சுத்திகரிப்புகாகவும் அதாவது “வாஸ்து” நிவர்த்திக்காகவும் பல விதமான மூலிகை பஸ்பங்களை தந்துள்ளார்கள், பல இலட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வாஸ்து நிவர்த்திக்காக இடித்து தரைமட்óடம் ஆக்கப்படுவதை இம்மூலிகை பஸ்பங்கள் தடுத்து வாஸ்து தோஷத்தை முழுமையாக நிவர்த்தி செய்துவிடுகிறது, பல கஷ்டங்களை தாண்டி கட்டப்படும் வீடுகளில் காலம் முழுக்க குடியிருக்க முடியாமல் தேச சஞ்சாரியாக அவதிப்படுபவர்களும். கழுத்தில் தொங்கவிடப்பட்ட கல் கிணற்றுக்குள் ஆழத்தில் அமுக்கி விடுவதைப் போல் கட்டிய வீட்டை விற்க முடியாமல் மூச்சு திணறுபவர்களும் தனது வாழ்நாளில் ஒரு சொந்த விடு கட்டி விடமாட்டோமா என்று ஏங்குபவர்களும் இந்த மூலிகை ஓளதஷதங்களால் நல்ல பயன்களை பெற்று இருப்பதை பார்க்கும் போது தெய்வீக ஆத்மாக்கள் மனித குலத்திற்கு செய்து வரும் மகத்தான சாதனையை எண்ணி நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை
வெந்ததை தின்று வேளை வந்தால் சாவோம் என்று அர்த்தம் அற்ற பாதையில் அவசரகதியாக நமது வாழ்க்கை ரதம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது, நம்மால் எது சரி? எது தவறு? என்று தீர்மானிக்க முடியவில்லை, எதை விடுவது எதை தொடுவது என்ற முடிவுக்கும் வர முடியதில்லை, நுனியில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனைப் போல் பித்து குளித்தனமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நமது அஜாக்கிரதையினாலும். அசட்டையினாலும் இழந்த செல்வங்கள் அது எத்தனையோõ நான் இங்கு குறிப்பிடும் மந்திரங்களும். மூலிகைகளும் நம் கையில் இருந்து நழுவி விடும் சூழலிலேயே இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது, வெளிச்சத்திற்கு வீட்டை கொளுத்தியவன் போல் நிறைய செல்வங்களை நாம் இழந்து விட்டோம்.
இந்த கொஞ்ச நஞ்ச செல்வங்களையாவது இழக்காமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், இன்று நாம் விழித்துக் கொண்டால் இன்னும் ஒரு 1000 ஆண்டிற்கு சுகமாக வாழலாம், இல்லை நான் தூங்கத்தான் செய்வேன் என்று அடம்பிடித்தால் வாழ்ந்ததற்கான அடையாளங்களைகூட பார்வையிட எந்த ஜீவனும் இருக்காது, நம் முன்னோர்கள் நமக்கு தந்து விட்டு சென்ற இந்த அரிய செல்வங்களை நமது அறிவீனத்தால் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சென்று விடகூடாது, இவைகளைப் பாதுகாக்க ரகசியங்களையாவது தெரிந்து வைத்திருக்க உழைப்போமாக!
அல்சர் வந்தால் வாயில் போடு பூட்டு
காபியை பிராமண சாராயம் என்று சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் அந்நியர்களிடம் பணியாளராக சேர்ந்த சில பிராமணர்கள் காபி குடிக்கும் பழக்கத்தை வீடு வரையிலும் கொண்டுவந்து விட்டார்கள். 1967-க்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் நாவல்கள் பலவற்றை படித்தால் பிராமணர்கள் காபியின் மேல் எந்தளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். கும்பகோண வெத்தலையும், சீவல் பாக்கும் போட்டு நாக்கு தடிப்பேறிய தஞ்சாவூர் பிராமணர்கள் கைநிறைய சக்கரை போட்டு கெட்டியான டிக்காஷனில் காபி குடிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும். பிராமண சாராயமாக இருந்த காபி இன்று அக்ரகாரத்தை விட்டு அண்ட சாரசரத்தையே பிடித்து ஆட்டுகிறது எனலாம்.
சுடசுட இட்லியை வெங்காய சாம்பாரில் மிதக்க விட்டு கை பொறுக்காமல் உச்சி கொட்டி வாயில் போட்டு வயிறு நிறைய சாப்பிட்டு கட்டி பாலில் ஆவி பறக்கும் காபியை தொண்டை குழி வரையிலும் சூடேற உறிஞ்சி குடிக்கும் சுகம் இருக்கிறதே அந்த சுகத்திற்காக சொத்தையே எழுதி வைக்கலாம் என்று சொல்லும் எத்தனையோ மனிதர்களை தினசரி காணலாம்.

காபி மோகம் அந்த அளவுக்கு மனிதர்களை பாடாய்படுத்துகிறது. ராத்திரி தூங்காமல் விழித்திருந்து படிக்க வேண்டியது இருக்கிறது, வேலை செய்ய வேண்டியிருக்கிறது, தூக்க களைப்பு வராமல் இருக்க ஒரு கப் காபி நிச்சயம் தேவையிருக்கிறது என்று சொல்வோரும், தினசரி நாலு கப் காபி சாப்பிட்டால் இதய நோய் என்பது வரதாம் இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று காபிக்கு ரத்தின கம்பளம் விரிப்போரும் ஏராளமான பேர்கள்.
இவைகளையெல்லாம் கூட்டிகழித்து பார்க்கும் போது ஒரேயொரு உண்மை நமக்கு தெளிவாக தெரிகிறது. காபியில் தற்காலிக சுறுசுறுப்பை தரும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று. இப்படி நாம் சொன்னவுடன் அந்த மாதிரியான கண்றாவியெல்லாம் கிடையவே கிடையாது. செண்ட் அடித்து கொண்டால் ப்ரஸ்ஷாக இருப்பது போல ஒரு மாய தோற்றம் கிடைக்கும். அப்படி தான் இந்த கதையும் என்கிறார்கள் சிலர்.
சிகரெட் பிடிப்பது கெட்ட பழக்கம் என்று நமக்கு தெரியும். நமது அரசாங்கம் கூட சிகரெட் பிடித்தால் உடம்பு கெட்டு போயிவிடும் என்று அட்டையில் யாரும் படிக்க முடியாத படி சிறிய எழுத்தில் விளம்பரம் செய்வதை நாம் அறிவோம். ஆனாலும் கூட சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும், சிகரெட் கம்பெனிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி தான் வருகிறது. நமது நாட்டை பொறுத்த வரை சிகரெட் பிடிப்பதற்கு நல்ல வேளை இன்று பல பெண்கள் போட்டிக்கு வருவதில்லை அந்த ஒரு பழக்கமாவது ஆண்களுக்கு என்று தனியாக இருக்கட்டும் என கருணை காட்டி விட்டுவிட்டார்கள்.

ஆனாலும் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை விட காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். குழந்தை குட்டிகளிலிருந்து பாட்டன் பாட்டிவரை கணக்கு போட்டால் மலைத்து போய் நமது இதயமே நின்றுவிடும். நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்கிறது. குடிக்க தண்ணீர் வருவதில்லை. மின்சாரம் எப்போ வரும் போவும் என்று தெரியவில்லை, குழந்தைகளின பள்ளி கட்டணமோ தங்கவிலை மாதிரி ஏறி இறங்கி கொண்டிருக்கிறது. இந்த அவஸ்தையில் இருந்து மீள சிறிதளவாவது காபி குடித்து ஜனங்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் காபியால் ஏற்படும் பல கொடுமைகளை அறிந்த போது இத்தனை சங்கடத்தில் இருக்கும் இதுவாலும் சங்கடத்தை அனுபவிக்க வேண்டுமா? என்று மனது துடிப்பதினால் தான் இந்த கட்டுரை.
அல்சர் நோயை பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதன் வலியை அனுபவித்தவர்கள் மிளகாய் புகைச்சலை கூட கஷ்டம் என்று கருதமாட்டார்கள். அல்சர் நோய் முற்றி போய் கேன்சராகி செத்தவர்களும் நிறைய உண்டு. வயிற்று எரிச்சல் தாங்காமல் தற்கொலை செய்தவர்களும் உண்டு வேளாவேளைக்கு தான் சாப்பிடுகிறேன். அதிக காரம் எடுத்து கொள்வதில்லை. அப்படியிருந்தும் அல்சர் வந்துவிட்டது என அங்கலாய்ப்பவர்கள் நிறையபேர் உண்டு. வேலை பளுவால் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டியுள்ளது. அவசர பயணங்களால் பல நேரம் சாப்பிடவே முடிவதில்லை. அதனால் கிடைத்த பரிசு அல்சர். அந்த நோய்க்கும் மருந்து சாப்பிடுகிறேன். வருடங்கள் தான் ஓடுகின்றதே தவிர நோய் குணமானபாடு இல்லை. என்று புலம்புவர்களும் உண்டு.
சரியாக சாப்பிடுபவர்களுக்கும் அல்சர் வருவது ஏன்? சிகிச்சை எடுத்துகொள்ளும் பலருக்கு நோய் குணமாவதில்லையே ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையை தேடி மருத்துவ விஞ்ஞான பக்கம் சென்றால் அங்கு சரியான பதில் நமக்கு காத்திருக்கிறது. அப்படிப்பட்ட நபர்கள் நிச்சயம் அதிகமாக காபி குடிப்பவர்களாக இருப்பார்கள் என்ற அந்த பதில் நமது மனதை உறைய செய்கிறது.

வயிற்றை கெடுக்கும் அப்படி என்ன விஷம் காபியில் இருக்கிறது என பலருக்கு தோன்றலாம். காபியில் உள்ள காஃபின் என்ற விஷமே வயிற்றை புண்ணாக்குகிறது. இந்த உண்மையை முதன்முதலில் கண்டறிந்தவர் எச்.என். உவைட் என்ற ஆராய்ச்சியாளரே ஆவார். இவர் மிக நல்ல ஆரோக்கியத்திலுள்ள மனிதன் ஒருவனை தேடிபிடித்து நான்கு நாட்களுக்கு தினசரி நான்கு காபிகள் கொடுத்து இறுதியில் அவன் குடலை ஆய்வு செய்தார். நான்கு நாட்களுக்கு முன் நன்றாக இருந்த குடல் இப்போது எரிக்கும் அமிலத்தால் அதிகமாக சூழப்பட்டிருப்பதை கண்டார். இந்த அமிலம் நாளுக்கு நாள் அதிகரித்தால் நிச்சயம் குடல் புண்ணை உருவாக்குவதோடு மட்டுமல்ல குடலின் செயல்பாட்டையே நாளடைவில் மந்தபடுத்திவிடும் என்று அவர் சொல்கிறார்.
குடலில் அமில சுரப்பால் ஏற்படும் ஜீரண புண்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சிறு குடலின் மேற்பகுதியில், இரண்டு இரப்பையில் இந்த இரண்டு இடங்களில் புண் ஏற்படுவதை வயிற்றில் மிக கடுமையான வலி ஏற்படும். சூறைகாற்று முதலில் அமைதியாகயிருந்து பிறகு பேரழிவை ஏற்படுத்துவது போல் ஆரம்பகட்ட வயிற்றுவலி தாங்கி கொள்ளும் அளவிற்கு சாதாரணமாக தான் இருக்கும். சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் வலியின் வேகம் அதிகரித்து தாக்கப்பட்ட மனிதன் மிக கொடுமையான தத்தளிப்பை அடைவான். பொதுவாக இந்த வலி காலை வேளைகளில் வராது. மதிய ஆகாரத்திற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். நேரம் செல்ல செல்ல ஆட்டோபாசின் கரம் போல வலி மனிதனை நெறித்து இரவு உறக்கத்தையும் காணாமல் போகச் செய்து விடும்.
அல்சரின் அறிகுறி இது மட்டுமல்ல. நெஞ்சுகரிப்பு, ஏப்பம், வயிற்று வீக்கம், மலச்சிக்கல் வாய்துறு நாற்றம், பசி மந்தம், வாந்தி, வாயில் நீர் பெருகுதல் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். நாம் அல்சர் என்ற மூலத்தை அறியாமல் அதன் அறிகுறிகளுக்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்தாலும் கூட எந்த பயனும் இராது. சரியான பரிசோதனை, சரியான மருத்துவன், சரியான மருந்து அமைந்தாலும் கூட காபி குடிக்கும் பழக்கம் நிறுத்தப்படவில்லையென்றால் நோய் சிறுகதையாக முடியாமல் மெகா சீரியலாக வளர்ந்து கொண்டே போகும்.

இப்படி நான் எழதியிருப்பதை படித்துவிட்டு ஒழுங்காக உணவு உண்ணாதவர்கள் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆகியோருக்கு மட்டும் தான் அல்சர் வருமென்று யாராவது நினைத்தால் அது மிகபெரிய தவறு. இந்த பழக்கங்கள் இல்லாதவர்களுக்கு கூட அல்சர் வர வாய்ப்புள்ளது. அது எப்படி?
எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சிகரெட் புகைவரும் இடத்தில் இருந்தாலே குமட்டி கொண்டுவரும் அவருக்கு காபி, டி மற்றும் வெற்றிலை பாக்கு என்று எந்த பழக்கமும் கிடையாது. நல்ல வேலை செய்வார். சரியாக சாப்பிடுவார். நேரங்காலத்தில் உறங்கியும் விழிப்பார். அவருக்கு திடிரென அல்சர் வந்துவிட்டது. பாவம் மனுஷன் ஆடிப்போய்விட்டார்.
நான் அவரிடம் பேசி கொண்டிருந்த போது அல்சர் எல்லாம் கிடைக்கட்டுமய்யா அந்த நோயினால் மட்டும் தான் நீர் சோர்ந்து போய் இருக்கிறீரா? அல்லது வேறு எதாவது பிரச்சனைகளும் இருக்கிறதா? என்று கேட்டேன். காரணம் டாக்டர் யூம் என்பவர் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் கூட அல்சரை கொண்டு வரும் என்கிறார்.

எப்படி என்றால் நமக்கு மிக நெருங்கிய நபர் யாராவது இறந்துவிட்டதாக செய்தியை நாம் கேட்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். உடனே நமக்கு என்ன ஏற்படும் அடிவயிற்றில் ஏதோ ஒரு கிலி ஏற்படும். அல்லது வயிறு புரட்டும். இதே உணர்ச்சியானது தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்தால் வயிற்றுக்குள் ஜடராக்கினி என்ற எரிக்கும் அமிலம் அடிக்கடி உற்பத்தியாகி வயிற்றை புண்ணாக்கி விடும். அதனால் தான் அவரிடம் அந்த கேள்வியை கேட்டேன். உடனே அவரும் தனது தனிப்பட்ட பிரச்சனையை என்னிடம் சொன்னார். அது என்ன என்பது இங்கு அவசியமில்லை என்பதினால் வாசகர்களுக்கு சொல்லாமல் விட்டுவிடுகிறேன். மேலும் அல்சர் நோய் குறைய அல்லது பூரணமாக விலக அவருக்கு சொன்ன ஆலோசனையை உங்களுக்கு சொல்கிறேன்.
எனது முதலாவது ஆலோசனை பகல் நேரத்தில் அதிக உழைப்புயிருந்தாலும் மதிய உணவிற்கு பிறகு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஓய்வாக படுத்து இருக்க வேண்டும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை கைவிட வேண்டும். சும்மா இருக்கும் போது மனதை கன்னாபின்னா என்று அலைய விடாமல் அமைதியாக வைக்க எதாவது கடவுள் பெயரை சொல்லி கொண்டிருக்கலாம். கடவுள் நம்பிக்கையில்லாத புண்ணியவான்கள் நல்ல பாடல்களையாவது கேட்கலாம்.
எனது இரண்டாவது ஆலோசனை சதாசர்வ காலமும் செக்கு ஆட்டுவது போல் வாயில் எதையாவது போட்டு மெல்வதை கைவிடவேண்டும். நொறுக்கு தீணி பக்கம் அதிகமாக போகமால் இருப்பது மிகவும் சிறந்தது. அல்சர் வந்தவர்கள் அதிகபடியான வேலையை வயிற்றுக்கு கொடுக்க கூடாது. அது பாதகமான விளைவுகள் பலவற்றை ஏற்படுத்திவிடும்.

எனது மூன்றாவது ஆலோசனை பால், தயிர், முட்டை போன்ற புரோட்டின் பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பசும்பாலில் தேன் விட்டு பருக வேண்டும். திட உணவை குறைத்து கொண்டு திரவ உணவை அதிகரிக்க வேண்டும். ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் சாறுகளை நிறைய பருகலாம்.
எனது நான்காவது ஆலோசனை நாட்டு மருந்து கடைக்கு போய் வெள்ளை குங்கிலியம் என்ற மருந்து பொருளை 35 கிராம் வாங்கி வந்து இளநீரில் போட்டு சூடாக்கி மெல்லியதாக நெருப்பை எறியவிட்டு நீர்வற்றுகின்ற வரை எரித்து எடுத்து அதில் கிடைக்கும் குங்கிலியத்தை கருங்கல்லில் வைத்து அரைத்து பொடியாக்கி தினசரி ஒரு அரசியளவு காலை, மாலை இரண்டு வேளையிலும் பசும் வெண்ணெயில் குழைத்து சாப்பிட வேண்டும். கூடவே பசும்பாலும் பருகவேண்டும். இப்படி தொடர்ச்சியாக 30 நாள் சாப்பிட்டு வந்தாலே அல்சர் உங்களை பார்த்து மிரண்டு ஓடிவிடும்.
எனது ஐந்தாவது ஆலோசனை நோய்தான் போய்விட்டதே நெத்திலி மீன்வாங்கி சிவக்க சிவக்க மிளகாய் அரைத்து கண்களில் நீர்முட்ட வாய் ருசிக்க சாப்பிடலாம் என்று நாக்கை அவிழ்த்து விட்டால் பிரம்மனாலும் உங்களை அல்சரிலிருந்து காப்பாற்ற முடியாது. குறைந்தபட்சம் ஒரு வருடமாவது மிளகு, மிளகாய், கடுகு, ஊறுகாய் போன்றவற்றை தள்ளி வைக்க வேண்டும். ஆயுசுக்கும் காபி கூடாது. நான்தான் முதலிலேயே சொன்னேன் அது பிராமண சாராயம் என்று. சாராயம் குடித்தவன் உருப்பட முடியுமா?

2020 ல் தமிழ் நாட்டு இளைஞர்களின் ஆண்மை பறிபோகும்
தமிழ்நாட்டு இளைஞர்களில் பலர் சிறிது சிறிதாக ஆண் தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு தகவலை எனது மருத்துவ நண்பர் ஒருவர் சொன்ன போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் வேறொறு குண்டையும் அவர் தூக்கிப் போட்டார் நிலமை இப்படியே போனால் இன்னும் பத்து வருஷத்தில் தமிழ் நாட்டில் நூற்றுக்கு எட்டுப் பேருக்குத்தான் ஆண்மை இருக்கும் என்று இதுவரையும் இல்லாது சமீபகாலமாக இத்தகைய நிலை நமது இளைஞர்களுக்கு ஏற்பட என்ன காரணம்? உண்மையாகவே அப்படி நடந்து வருகிறதா? அல்லது திட்டமிட்டு யாரேனும் அத்தனைய தகவல்களை பரப்பி வருகிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. ஏன் என்றால் இன்றைய பன்னாட்டு தொழிலமைப்புகள் எத்தகைய படுபாதக செயலையும் துணிந்து செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையோ. பொய்யோ பொதுவுடமை கட்சியை சார்ந்த ஒரு நண்பர் சர்வதேச மருந்து கம்பெனிகள் நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதோடு மட்டுமில்லை புதிய நோய்களை உருவாக்கும் மருந்துகளையும் தயாரித்து மக்கள் மத்தியில் நடமாட விடுகிறார்கள். பிறகு அதற்கு தடுப்பு மருந்துகளை தயாரித்து பல லட்ச கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள் என்ற அச்சம்மூட்டும் செய்தியை என்னிடம் சொல்லியிருந்தார் அவர் கூறிய வார்த்தைகளில் பொய்மையோ . அபரீத கற்பனையோ இருப்பதாக எனக்குப்படவில்லை காரணம் எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் சந்தையை பிடிக்க வேண்டுமென தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றனவோ அந்த நாட்டின் மாடல் அழகி உலக அழகியாகவோ பிரபஞ்ச அழகியாகவோ தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ரகசியம் பல காலங்களுக்கு முன்பே எனக்கு தெரியும்.

அதே போலவே தென்னக இளைஞர்களிடம் ஆண்மை குறைவு அதிகமாகயிருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞான ரீதியில் பிரச்சாரம் செய்து ஊக்க மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க சதி திட்டம் நடக்கிறதோ என்ற ஐயம் வந்தால் நிச்சயம் அதில் தவறில்லை. ஆனால் பல நடைமுறை சம்பவங்களை நேருக்கு நேராக பார்த்து போது எனது மருத்துவ நண்பர் சொன்ன ஆண்மை குறைவு விஷயம் பொய்யானது அல்ல பச்சை உண்மை என்ற நிதர்சனத்தை உணர்ந்தேன்.
இன்றைய இளைஞர்களில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உடல் வளைந்து வேலை செய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே எவரெஸ்ட் உச்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் இரவு பகல் பாராமல் கணிப்பொறியின் முன்னாலேயே வாழக்கையை ஒட்டுகிறார்கள். சூரியன் முளைத்த பிறகு தூங்கி, மறைந்த பிறகு விழிக்கிறார்கள். இதனால் உறக்கம் கெடுகிறது. உடலின் சகஜ நிலை மாறுதல் அடைகிறது. மன அழுத்தம் அதிகக்கிறது. கடிதம் போடாமலேயே சக்கரை நோய் வந்து உடலோடு ஒட்டிக்கொள்கிறது.
மருத்துவ ரீதியில் சக்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மன அழுத்தம் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் எனது முன்னோர்களுக்கோ. என் குடும்பத்தில் மற்றவருக்கோ சக்கரை நோயே கிடையாது. ஆனால் எனக்கு அது வந்து பெரும் தொல்லை தருகிறது. இதற்கு காரணத்தை தேடிய மருத்துவர்கள் அதிகபடியான மன அழுத்தமே எனக்கு வந்த நோய்க்கு காரணம் என்று சொன்னார்கள் அவர்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை. எனக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் என்ற எந்த விலங்கும் இல்லை. நான் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்ற கடமைகளும் இல்லை. உண்பதற்கு சோறும், உடுப்பதற்கு ஒரு முழு துணியும் இருந்தாலே என் தேவைகள் பூர்த்தியாகி விடும்.

பிறகு எங்கிருந்து வந்தது எனக்கு மன அழுத்தம், இரண்டாயிரம் ஆண்டு துவக்கத்தில் ஒரு பொது வேலையின் காரணமாக பல லட்ச ரூபாய் கடன் என் தலை மீது விழுந்தது. நம்பிக்கை நாணயம் கெடாமல் 2003-க்குள் அதை அடைத்து முடிப்பதற்கு நான் அனுபவித்த கஷ்டங்களை வெறும் வார்த்தைகளால் எழுதி விட முடியாது. கடன். வறுமை என்பவைகளின் முழுமையான அர்த்தம் எனக்கு அப்போது தான் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தமே என் உடலில் பல நோய்களை உண்டாக்கியது அல்லது வரவழைத்தது.
நான் அனுபவித்த கஷ்டங்களை விட பல மடங்கு கஷ்டங்களையும் மன உளைச்சலையும் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள் என்பது யதார்த்தமாகும். குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வயதாலும் அனுபவமின்மையாலும் நமது இளம் தலைமுறையினர் சுமைகளை சுமக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் இதன் விளைவாக அவர்களின் மனமும், உடலும் பாதிப்படைகிறது. இது மட்டுமலல நாகரீகம் என்ற போர்வையில் நமது தேச பருவகாலத்திற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் ஏற்படுத்தி கொண்டும் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பல நோய்களில் மிக முக்கியமானது சக்கரை நோய்.
சக்கரை நோயானது நாளமில்லா சுரபிகளை பாதித்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைந்து உடலுறவில் நாட்டமில்லாமல் அல்லது திருப்தியில்லாமல் மழுங்கடித்து விடுகிறது. இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என 1970 வரை நம்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் சக்கரை நோயினால் பாதிப்படைந்த பெண்களுக்கும், பால் உறுப்புகளில் மென்மை தன்மை அல்லது பசைதன்மை அதிகம் ஏற்பட்டு பாலுறவில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மன அழுத்தத்தால் உருவாகும் உடல் நோய்கள் ஆண்மை குறைவை மட்டுமல்ல, பெண்மை குறைவையும் ஏற்படுத்துகிறது.

சக்கரை நோய் என்றில்லாமல் இளம் வயதினரை அதிகமாக தாக்கும் ரத்தகுழாய் தடிப்பு என்ற நோய் ஆண்குறி விறைப்பு தன்மையையும், பெண்கள் உச்சகட்டம் அடைவதில் இயலாமையையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயின் தாக்குதல் காலம் என்பது உடல் வலுவை பொறுத்து சில மாதங்களோ, சில வருடங்களோ கூட நீடிக்கும் என அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதீதமான மன அழுத்தத்தால் ஏற்படும் நம்பு மண்டல பாதிப்புகள் பாலியியல் குறைபாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது.
உட்கார்ந்த இடத்திலேயே அதிகநேரம் இருப்பதாலும் உடல் அசைவுகளை இயற்கைக்கு மாறாக அடக்கி வைப்பதனாலும் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு இல்லாததினாலும் இதய பலகீனத்தாலும் இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் விலகிய பின்னரும் கூட அச்ச உணர்வு தொடர்வதினால் ஆண் தன்மை குறைகிறது.
இக்கால இளைஞர்களிடத்தில் அதிவேகமாக குடிப்பழக்கம் பரவி வருகிறது. இன்று ஆண்கள் மட்டும் தான் மதுவிற்கு அடிமையானார்கள் என்ற நிலை மாறி பெண்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மதுக் கடலில் குதித்து முத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகும் ஆண்களில் நாற்பது சதவிகித பேருக்கு குறி விறைப்பு தன்மையில் பாதிப்பு வருகிறது. ஐந்து முதல் பத்து சதவிகித பேருக்கு விந்து வெளியேறுவதில் சிக்கல் வருகிறது. மதுவிற்கு அடிமையான பெண்களில் ஐம்பது சதவிகித பேருக்கு பாலுணர்வு சிக்கலும், பதினைந்து சதவிகித பேருக்கு உறவில் உச்சகட்டம் ஏற்படுவதில் பிரச்சனையும் உருவாகி பெண் தன்மையை மட்டுப்படுத்துகிறது.

இது தவிர பலவிதமான போதை பொருட்கள் புகையிலை வகைகள் சில மாத்திரைகள், பாலியியல் குறைபாடுகளுக்கு காரணமாகவியருக்கிறது. இப்போது நான் சொன்னதெல்லாம், வெளியில் இருந்து தாக்கி இளைஞர்களின் ஆண் தன்மையை கெட்டு போவசெய்வதாகும். மனிதனின் மனத்திற்கு உள்ளேயே உள்ள வேறு சில விஷயங்களும் ஆண்மை குறைவுக்கு அஸ்தி வாரங்களாக இருக்கின்றன.
இறைவனால் படைக்கபட்ட எல்லா உயிர்களுக்கும் பாலுணர்வு என்பது பொதுவானதாகும் விலங்குகளிடமிருந்து அறிவால் வளர்ச்சிய்டைந்த மனிதன் மட்டும் தான் பாலுணர்வின் சாதக பாதகங்களை உணர்ந்து அதை நெறிபடுத்தி வாழ கற்று கொண்டான் எனலாம். மனிதனுக்குரிய தர்ம சட்டம் இல்லறத்தார்கள் அனைவருக்கும் பாலுறவை புனிதமான கடமையாகவே கருதுகிறது. அந்த உணர்வு தனது நேர்தன்மையிலிருந்து விலகி எதிர் தன்மையை நோக்கி பயணப்படும் போது ஒழுங்கீனமாக கருதப்டுகிறது.
மனைவி அல்லது கணவனை தவிர மற்றவர்களுடன் உடலுறவு ஏற்படுத்தி கொள்வதை எந்த நாட்டு மக்களும் கவுரமாக நினைப்பதில்லை. அப்படி மாறுபட்ட உறவுகளை மனிதர்கள் உருவாக்கும் போது எவ்வளவு தைரியவான்களாக இருந்தாலும் ஒழுக்கத்தை பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தாலும் இயற்கையாக ஏற்படும் பயம், பதட்டம் இவைகளில் இருந்து தப்பித்து விட முடியாது. உடலுறவு சமயத்தில் பாதுகாப்பு உணர்வு இல்லாது போனால் நிச்சயம் நரம்புகளும், இதயமும் பலகீனமடைந்து ஆண்மை குறைவை ஏற்படுத்தியே தீரும்.

விருப்பமில்லாத வாழ்க்கை துணையோடு உறவில் தொடர்ந்து ஈடுபட்டாலும், உறவின்போது பாலியியல் துணையால் அவமானப்படுத்தபட்டாலும் தனது பாலுறுப்புகளின் மீது தாழ்வு மனப்பான்மை கொண்டாலும் ஆண்மை குறைவு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் திடிர் மரணம், எதிர்பாராத அதிர்ச்சி, தொழில் நஷ்டம், பகைமை, விரக்தி போன்ற உணர்வுகளும், ஆண்மை குறைவுக்கு காரணமாகலாம் என மனநிலை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாமபத்ய உறவில் மனதால் ஏற்படும் பாதிப்புகளால் அதிகம் தாக்கப்படுவது பெண்களே ஆகும். முதல் முறையாக தனிமையில் ஏற்படும் ஆண்மையின் அருகாமையும், முரட்டுதனமும் பல பெண்களை பாலியியல் ஊனமாக்கி விடுகிறது, முதல் புணர்ச்சியில் ஏற்படும் வலி, பயம், பதட்டம் ஆண்மையின் ஆளுமை போன்றவைகள் பெண்களின் மனதை வார்த்தையில் வடித்துவிட முடியாத அளவுக்கு நோகடித்து விடுகிறது, இதனால் ஏற்படும் பிரச்சனைகளே பல விவாகரத்துகளுக்கு காரணமாக இருக்கிறது, அளவுகடந்த கூச்சம் குற்ற உணர்வு, கருத்தரிக்கும் அச்சம் போன்றவைகளும் பெண்மை குறைவுக்கு வழிகோலுகின்றது.
ஆண்மை குறைபாட்டிற்கு சுய இன்பம் என்பத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது, ஆங்கில மருத்துவர்களில் பலர் சுய இன்பம் காண்பதனால் ஆண்மை குறைவு ஏற்படாதுயென அடித்து பேசுகிறார்கள், மலம், மூத்திரம், வியர்வை போலவே விந்து என்பதும் ஒரு கழிவு பொருள். அது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியே தீரும். அப்படியே அது வெளியேறாமல் உடம்புக்குள்ளேயே தங்கிவிட்டால் அதுவே பல நோய்கள் உருவாக மூலகாரணமாக அமைந்து விடும் என்கிறார்கள்.

ஆங்கில மருத்துவர்களின் இந்த கூற்றை சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மரபு சார்ந்த மருத்துவதுறை வல்லுநர்கள் மிக கடுமையாக மறுக்கிறார்கள் தாம்பத்திய உறவின் போது இந்திரியம் வெளிபடுவதற்கும், சுய இன்பம் காணும் போது வெளியேறுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சுயஇன்ப பழக்கமானது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும் ஆண்களே மிக அதிமாக நரம்பியல் ரீதியாக பாதிப்படைகிறார்கள். இல்லாத தாம்பத்ய துணை இருப்பதாக கற்பனை செய்து சுய இன்பத்தில் ஈடுபடும்போது மனதும் பாதிப்படைகிறது. உடலும் சோர்வடைகிறது. இந்த பழக்கம் இளைஞர்களை பொறுத்த மட்டில் பெருவாரியானவர்களுக்கு பதினான்கு வயதிலிருந்தே ஏற்பட்டு விடுவதினால் மிக நீண்ட காலம் அந்த பழக்கம் தொற்றி கொள்கிறது. இதனால் விந்து நீர்த்து போகுதல், நரம்பு தளர்ச்சி போன்றவைகள் ஏற்பட்டு ஆண்மை குறைவை சுமக்க வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள்.
ஆங்கில மருத்துவர்கள் சொல்வது போல விந்து என்பது ஒரு கழிவு பொருள்தான் சிறுநீரும், மலமும் சரிவர வெளியேறா விட்டால் எப்படி உடல் நலம் கெடுமோ அதே போலதான் யோகபயிற்சி செய்யாதவர்களின் உடம்பில் விந்து தங்கினால் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால் தான் இயற்கையானது. மனிதன் உடலுறவில் ஈடுபட்டாலும், படாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு ஒருமுறை தானாக வெளியேற்றி விடுகிறது. தானாக வெளியேறுவதற்கும், நாமாக வெளியேற்றுவதற்கும் பல வேறுபாடு உள்ளது.
தினசரி காலை மாலை இருவேளையிலும் வயிறு சுத்தமானால் அது இயற்கை, தினசரி ஆறு, ஏழு முறை சுத்தமானால் அது இயற்கையல்ல, வயிற்று போக்காகும் தக்கமருந்து கொண்டு தடுக்காவிட்டால் நோயாளியின் கதை பரிதாபகமாகி விடும். சிறுநீர் கழிப்பதும், சகஜ நிலையை விட்டு அதிகரிக்குமானால் அதன் பெயர் நீரழிவு ஆகும். இதே விதிதான் சுய இன்பத்திற்கும் பொருந்தும். அதிகப்படியான விந்து வெளியேற்றம் கண்டிப்பாக நரம்பு தளர்ச்சியில் கொண்டு போய்தான்விடும்.

நடைமுறை அனுபவத்தில் பார்க்கும்போது சுய இன்ப பழக்கத்தில் ஈடுபட்ட பலர் இந்திரியத்தில் உயிர் அனுக்களில் சக்தியில்லாமல் அவதிப்படுவதையும் குழந்தை பெற முடியாமல் தத்தளிப்பதையும் பார்க்கின்றோம். அதனால் ஆங்கில மருத்துவர்கள் சொல்வது போல சுய இன்ப பழக்கம் பிரச்சனை தராதுயென்பதை நம்ப முடியவில்லை.
ஆண்மை குறைவுக்கு உடல் நலம் மன நலம் சார்ந்த பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதையும் தாண்டிய சில பிரச்சனைகளும் உள்ளன. ஆனால் அவைகள் விஞ்ஞான பூர்வமானது என்று சொல்ல முடியாவிட்டாலும், நடைமுறை வாழ்க்கையில் அனுபவத்திற்கு சாத்தியம் இல்லாது என்று ஒதுக்கி விட முடியாது.
பொதுவாக இன்றைய தலைமுறையினர் பலர் ஜோதிடத்தை நம்புவதும் இல்லை. பொருட்டாக கருதுவதும் இல்லை. இந்த நிலைக்கு வெகுஜன ஊடகங்களும், பல ஜோதிடர்களும் காரணம் என்று சொல்லலாம். ஒரு காலத்தில் சித்த வைத்தியம் இயற்கை வேளாண்மை போன்றவைகளை மூடதனமானது என சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் பிரச்சாரப்படுத்தி வந்தது போல் இன்று ஜோதிடம் சார்ந்த பழைய மரபுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கேலி செய்யும் இயல்பு வளர்ந்து வருகிறது.
ஜோதிடம் மற்றும் அமானுஸ்ய விஷயங்கள் அனைத்துமே சரியானவைகள் என்று வாதிட நான் விரும்பவில்லை. ஆனால் சாம்பலுக்குள் நெருப்பு மறைந்திருப்பது போல அவைகளுக்குள்ளும் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை சரியான முறையில் ஆய்வு செய்தால் பல நன்மைகள் மனித குலம் அடையும் என்று நான் அனுபவபூர்வமான நம்புகிறேன்.

ஒருவன் பிறந்த நேரத்தை துல்லியமாக கணிக்கும் போது அவனுக்கு ஏற்படும் வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமல்ல அவனை தாக்கும் நோய்களையும் ஓரளவு கணிக்கலாம் என வராகி மிகிரர் பாஸ்கரர் போன்ற பழங்கால வானியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக ஜோதிடப்படி ஒரு மனிதனின் பிறப்புறுப்பு தன்மையை நிர்ணயம் செய்வது எட்டாவது இடமாகும். இந்த எட்டாம் இடத்திற்கு அதிபதியான கிரகம் பலவீனமான நிலையில் இருந்தால் நிச்சயம் பாலுறவில் சிக்கல் ஏற்படுகிறது.
அதேபோல மர்மஸ்தானாபதி என்று அழைக்கப்டும் செவ்வாய் கிரகம் தான் நின்ற ராசிக்கு திரிகோண ஸ்தானத்திலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாம் இடத்திலிருந்து கேது கிரகம் இருந்தாலும் செவ்வாய்க்கு இரண்டாம் இடத்தில் கேதுவும் மாந்தியும் கூட்டாக இருந்தாலும் எட்டாம் இட அதிபதி இருக்கும் இடத்திலிந்து இரண்டாவது இடத்தில் கேது இருந்தாலும் பிறப்பு உறுப்பு சம்பந்தப்பட்ட குறைபாடு ஏற்படும் என்று பண்டைய ஜோதிட நூல்கள் பல உறுதியாக சொல்லுகின்றன.
ஒரு மனிதன் ஆண்மையற்று போக உடலும் மனதும் தான் காரணமென விஞ்ஞானம் உறுதிபட சொல்வதை நான் முழுமையாக ஏற்று கொண்டாலும் நமது பண்டைய கால அறிஞர்கள் சொல்வதையும் தவிர்த்து விட கூடாது என சொல்கிறேன் பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு வகையில் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே தனது சஞ்சாரங்களை நடத்துகின்றன என்பதை அவ்வளவு சீக்கிரம் மறுத்துவிட முடியாது.

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சந்திரனின் ஈர்ப்பால் கடல் கொந்தளிப்பதை நாம் அறிவோம். அவ்வளவு பெரிய கடலே சந்திர ஈர்ப்புக்கு ஆட்படும்போது மனிதன் மட்டும் தப்பித்து விட முடியுமா? எனவே ஜோதிட சாஸ்திரத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆய்வு செய்தால் ஆண் தன்மை குறைபாட்டிற்கு முற்று புள்ளி வைக்கலாம் என்று கருதுகிறேன்.
மன பிரச்சனைகளால் ஆண்மைகுறைவு ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் விரும்பதகாத பல பின்விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதனால் மன பிரச்சனைகளுக்கு மருந்துகளை நாடாமல் தியானம், யோகாசனம் போன்ற மார்க்கங்களை நாடினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கிறது.
உடல் பிரச்சனைகளால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் அவசர தேவைக்கு வேண்டுமானால் ஆங்கில மருத்துவத்தை நாடிக் கொள்ளலாம், தொடர்ச்சியாக ஆண்மை குறைவுக்கு ஆங்கில மருத்துவம் மேற்கொண்டால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது, தமிழக சித்தர் மரபில் எத்தகைய உடல் காரணங்களாலும் ஆண்மை குறைவு ஏற்பட்டால் அதில் இருந்து முற்றிலும் விடுபட நல்ல பல மூலிகை மருந்துகள் இருக்கின்றன. அவற்றை நிதானமாக ஆறு மாத காலத்திற்கு எடுத்து கொண்டாலே போதுமானது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் குறைபாட்டிலிருந்து வெளி வந்துவிடலாம்

1. அமுக்கரான் கிழங்கு - 700 கிராம்
2. நிலபனை கிழங்கு - 700 கிராம்
3. சுக்கு - 70 கிராம்
4. மிளகு - 70 கிராம்
5. திப்பிலி - 70 கிராம்
6. ஏலம் - 35 கிராம்
7. கிராபு - 35 கிராம்
8. சீறுநாக பூ - 35 கிராம்
9. சித்திர மூலம் - 70 கிராம்
10. ஜாதிக்காய் - 35 கிராம்
11. லவங்க பத்திரி - 35 கிராம்
12. சவ்வியம் - 72 கிராம்
13. பேரிச்சகாய் - 525 கிராம்
(விதை நீக்கியது)
ஆகியவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி நன்றாக இடித்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ளுங்கள், பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஒன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து பாகுபதமாக வரும்வரை மெல்லிய நெருப்பில் சூடாக்கி கொள்ளுங்கள். பாகுபதத்தை இது எட்டும் போது இடித்து வைத்து இருக்கும் மூலிகை பொடிகளை கொட்டி நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள் நன்றாக சூடு ஆறிய பின் முந்நூற்றி ஐம்பது மில்லி தேனையும் ஏழு நூறு மில்லி நெய்யையும் அதில் ஊற்றி கண்ணாடி சீசாவில் காற்று புகா வண்ணம் அடைத்து வைத்து கொள்ளலாம், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த மருந்து செய்ய விறகு அடுப்பையும், மண் பாத்திரத்தையும் தான் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கண்ணாடி சீசாவில் அடைக்கப்பட்ட மருந்தை ஐந்து நாட்கள் கழித்து தினசரி மூன்று வேளை ஆகராத்திற்கு முன் கோலி குண்டளவு சாப்பிட்டு வர தொன்ணூறு நாட்களில் ஆண்மை குறைவுக்கு நல்ல முடிவு வரும்.

கிரக கோளாறுகளினால் தான் பெருவாரியான நபர்களுக்கு உடல் மன பாதிப்புகளால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. கிரகங்களின் ஈர்ப்பு விசையை மாற்றி நல்ல ஈர்ப்பு தன்மையை மட்டும் உடலுக்குள் அனுப்பும் சக்தி சில அரிய மூலிகைகளுக்கு இருக்கிறது. பூத வேதாள உப்பு , கண எருமை விரச்சவேர். ஜோதி புல் போன்ற மூலிகைகளை வெள்ளி தாயத்துக்களில் அடைத்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நூறு சகவிகிதம் ஆண்மை குறைவு நீங்குவதை நான் பார்த்து இருக்கிறேன்.
ஆனால் இந்த மூலிகைகள் இக்கால கட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. சதுரகிரி மலை, இமயமலை அடிவாராங்களில் அரிதாக கிடக்கிறது. அது கிடைக்கும் இடங்கள் சில நபர்கள் மட்டுமே அறிந்து வைத்திருப்பதினால் அவர்கள் வியாபார நோக்கில் அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறார்கள். பணத்தை பார்க்காமல் நிவாரணத்தை மட்டுமே பார்ப்பவர்கள் உடனடியாக பலனை பெற்றுவிடுகிறார்கள்.
இத்தகையை அரிய மூலிகைகளை பணம் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும் என்ற நிலையை மாற்றி அனைவரும் பயன்பெற அம்மூலிகைகளை நானே வளர்க்க விரும்புகிறேன். அதற்கு இறைவன் நிச்சயம் துணை செய்வான். காரணம் நமது இளைஞர்கள் ஆண்மையற்றவர்களாக போய்விட்டால் நாம் எதிர்பார்கின்றது போல நம் தேச வளர்ச்சி துரித கதியில் அமையாது. எனவே அனுபவம் வாய்ந்தவர்கள் களம் காண இறங்கினால் நமது பிள்ளைகளை பிடித்து நிற்கும் பேடிதனம் என்ற பெருத்த அபாயம் செத்து ஒழியும்.

(இணையத்தில் படித்தது )