செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

கண்ணோடு இமை சேர்ந்த பந்தம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சனி, 20 ஆகஸ்ட், 2011

என் காதலே என்ன செய்வாய் என்னை

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இணையத்தள அரட்டை

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.

இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. …….. ஏன்? என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தகவல் களஞ்சியம்

                                          அதிசய “ டு- இன்- ஒன் ” மருந்து
ஒரே நேரத்தில் இதய நோயையும்  “ டைப் 2” சக்கரை நோயயையும் எதிர்த்துப் போராடும் மருந்தை உறுவாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனா்.

உடம்பில் ” நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும் நோக்கின் அடிப்படையில்  “ டார்சா டிராபி ” என்ற இந்த மருந்து உறுவாக்கபட்டிருக்கிறது. ஆரம்பகட்டச் சோதனைகளில் இது ரத்தத்தில் சக்கரை அளவை நிலைப்படுத்துவதும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதும் உறுதி செய்யபட்டிருக்கின்றன என இம் மருந்தை உறுவாக்கிருக்கும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனா். நமது உடம்புக்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம் அது தான் இரத்த நாளங்கள் தடிமனாவதை தாமதபடுத்துகிறது இதய நோய் பிரட்சனையை குறைக்கிறது  ரத்தத்தில் சக்கரை  அளவை கட்டுப்படுத்துவதற்கு  ஏற்கனவே உட்கொள்ளும் மாத்திரையுடன் புதிய மருந்தையும் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  நோயாளிக்கு உண்மையான பலனை இது கொடுக்கும் என்கிறார்கள். இந்த மருந்துகளின் மருத்துவமனை அளவிலான பரிசோதனைக்கு  45 முதல் 75 க்கு உட்பட்ட 15 ஆயிரம் போ் உட்படுத்தபட்டார்கள். அவா்கள் அனைவரும் மாரடைப்பு , பக்கவாதம் , நெஞ்சுவலி , ரத்தநாள பாதிப்பு . போன்ற பிரட்சனைகளுக்கு உள்ளானவர்கள். அவர்களிடம் மேற் கண்ட மருந்து நல்ல பலனை தந்திருக்கின்றன.
அதே போல் டைப்2 சக்கரை நோய் உள்ளவா்களிடம் நடத்தபட்ட சோதனையில் அவா்களுக்கு ரத்த சக்கரை அளவு கட்டுப்படுவது உறுதியாகியிருக்கிறது.

                எழுத்துக்கள் எத்தனை?

தமிழ் எழுத்துக்கள் - 247 , ஆங்கிலம் - 26 , இத்தாலி - 20 , லத்தீன் - 22 , கிரேக்கம் - 24 , ஜெர்மன் - 26 , பிரெஞ்ச் - 26 , ஸ்பானிஷ்- 27 , அராபிக் - 28 , துருக்கி - 25 , பாராசீகம் - 31 , சமஸ்கிருதம் - 48 , சீனமொழி - 214 .


 

வெள்ளி, 29 ஜூலை, 2011

வாக்குப் புரட்சி!

மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வசிப்பிடமாகிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச மீதான கோபத்தை, இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக உலகுக்கு அறிவித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்சவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளியது என்று கூறியிருப்பது, இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத் தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என்று சந்திரிகா இன்று கூறுவதை, தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள்.அற்றை நாள் முதலாக இலங்கையின் வளர்ச்சி, தமிழர்கள் சார்ந்ததாகவே இருந்துவந்தது. தமிழரின் இந்த ஆற்றல் மீதும், அறிவுப்புலத்தின் மீதும் சிங்களர்கள் கொண்ட பொறாமையின் விதைகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கள பேரினவாதக் கொள்கைக்கு இடமளித்து, இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்தது. இப்போதுதான் அவர்களுக்குப் புரிகிறது, தமிழர்கள் நம்முடன் இருந்திருந்தால் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருப்போம் என்று! இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு இல்லாமல், தமிழர்களைத் தவிர்த்துவிட்டு எந்தவோர் ஆட்சியாளரும் எதையும் செய்துவிட முடியாது. எந்தவொரு கட்சியும் இலங்கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டுமானால் தமிழர் ஆதரவு கட்டாயமாகத் தேவை. அரசியல் சக்தியாக மாறும் முடிவை, தேர்தல் மூலம் ஆளும்கட்சிக்கு நெருக்கடிதரும் அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இறுக்கத்தைத் தளர்த்தி, நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை பல இழப்புகளையும், பின்னடைவையும் தமிழீழப் போராளிகள் தவிர்த்திருக்கக் கூடும் என்கிற சிந்தனைக்கு இடமளித்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். இலங்கைத் தமிழர் இன்று அரசியல் களத்தில் கொள்கையளவில் ஒன்றுபட்டு நின்றபோதிலும் அவர்களை வழிநடத்த பலமான இயக்கமோ, தலைமையோ இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது. தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்தி, சிங்களத் தமிழர் கலப்பினத்தை உருவாக்கி, தமிழர் குரலை ஒடுக்கிவிட முடியும் என்கிற இலங்கை அரசின் எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் மண் விழுந்திருக்கிறது என்பது திண்ணம். இருபது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு, துன்பப்பட்டு மடிந்து மடிந்து ஒரு தஞ்சமும் இல்லாமல் மடியும் நிலைமைக்குத் தள்ளப்பட்டபோதும், மீண்டும் எழுந்துநிற்கும் தமிழர்கள் மத்தியில் ஊடுருவிகளாகக் குடியேற சிங்களர்கள் இனிமேல் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள். இனிமேல் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் தொடர இலங்கை அரசும் துணிவு கொள்ளுமா என்பதேகூட சந்தேகம்தான். இந்த வெற்றியை இலங்கையின் ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியும்கூட தாங்கிக் கொள்ளாது. இந்த வெற்றியைச் சிதைப்பதற்கு தமிழர் மத்தியில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கி, வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். இதற்காக எத்தனை கோடி கொடுத்தும், புதிய தமிழர் அமைப்புகளை உருவாக்க சிங்கள அமைப்புகளும் உதவக்கூடும்.இத்தனை காலம் சிந்திய ரத்தத்தின் நிறம் மாறாத மண்ணுக்காகவும், தாங்கள் இழக்க நேர்ந்த தமிழர் உயிர்களுக்காகவும், இப்போதும்கூட காணாதோர் பட்டியலில் உள்ள 1.40 லட்சம் தமிழர்களைக் கருத்தில் கொண்டும், அந்த மண்ணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி மட்டுமே தனித்து நிற்கவும், அந்த அரசியல் பலத்தின் மூலம் இலங்கைவாழ் தமிழர்கள் தங்களது நியாயமான சம உரிமையைப் பெறவும் உறுதிபூண வேண்டும்.இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்த கட்சிகளுக்கு அதைப்பற்றி யோசிக்கவே நேரமில்லாதபடி காராகிரகக் கவலைகள் இருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையின் வடபகுதியில் குடியமரச் செய்து, தமிழர்களின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?இலங்கையில் குடியரசுத் தலைவர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமுறை அமலில் இருக்கும்வரை, சிறுபான்மைத் தமிழர்களின் நலன் பேணப்படாது. மீண்டும் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே, தமிழர்களுக்கு மரியாதையும், ஆட்சியில் உரிய பங்கும், தமிழர்கள் வாழும் பகுதியில் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். அதற்கு யார் குரல் கொடுக்கப் போவது என்பதுதான் கேள்வி.

திங்கள், 25 ஜூலை, 2011

http://www.linkreferral.com/adwel.pl?oldrefid=337988   இந்த லிங்க் மூலம் இணையும் நண்பா்களுக்கு எமது தளத்தில்  3 மாதங்களுக்கு தங்களுடைய விளம்பரங்களை இலவசமாக வெளியிடும் வாய்ப்பு மேலும் விபரங்களுக்கு  srbc2010@yahoo.in மற்றும் srbc2010@gmail.com முகவரியில் தொடா்பு கொள்ளவும்

வெள்ளி, 1 ஜூலை, 2011

விரைவில் நமக்கான அரசு வேலை வாய்ப்பு திடடம்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட்டில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தி.மு.க., ஆட்சியின் போது, வேலை இல்லாத இளைஞர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதற்காக, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யூ.ஒய்.இ.ஜி.பி.,), 2010, ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், உற்பத்தி பிரிவுக்கு, 5 லட்ச ரூபாய், சேவைப் பிரிவுக்கு, 3 லட்ச ரூபாய், வியாபாரத்திற்கு, 1 லட்ச ரூபாய், வங்கியில் கடன் வழங்க வழி செய்யப்பட்டது. அரசு சார்பில், 15 சதவீத மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டம், மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட்டாலும், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதுவரை, 1,200க்கும் மேற்பட்ட பயனாளிகள், மானியத்துடன் கூடிய, வங்கிக் கடன் பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 200க்கும் மேற்பட்டோருக்கு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் தேர்தல் வந்தது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் தொழில் துவங்க, 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்போது நடைமுறையில் உள்ள, "வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற பெயரை, "முதலமைச்சர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டத்தில், ஏற்கனவே வழங்கப்படும் கடன் தொகையின் உச்ச வரம்பை, உற்பத்தி பிரிவுக்கு, 10 லட்ச ரூபாய், சேவைப் பிரிவுக்கு, 5 லட்ச ரூபாய் மற்றும் வியாபாரத்திற்கு, 3 லட்ச ரூபாய் என உயர்த்தி வழங்குவதுடன், மானியத் தொகையை, 25 சதவீதம் உயர்த்தி வழங்கினால், மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்.

தாலிக்கு தங்கம், இலவசமாக, 20 கிலோ அரிசி, முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு, செப்டம்பரில், முதல் கட்டமாக, 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 9 லட்சத்து, 12 ஆயிரம் மாணவர்களுக்கு, இலவச,"லேப்-டாப்' என, தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழக அரசு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்தையும் கொண்டு வர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வியாழன், 30 ஜூன், 2011

பொருளாதாரப் பேதைகள்

விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நாட்டு மக்கள் தாங்கொணாத தவிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். ஆட்சியாளர்களோ சதவீதக் கணக்கைப் போட்டுக்கொண்டு ""ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது, வந்து கொண்டிருக்கிறது, வருவது உறுதி'' என்று கட்டியங்கூறிக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்கள்.விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டால் ""இது சர்வதேசச் சந்தையின் பாதிப்பு, எங்களுடைய சாமர்த்தியத்தால்தான் இது தீவிரமாக உங்களைத் தாக்கவில்லை'' என்று கூறுகிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்க எங்கே சந்தர்ப்பம் என்று அலைபாயும் நம்முடைய ஆட்சியாளர்கள், ""சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டால் இந்த விலைவாசி குறைந்துவிடும்'' என்று புதிதாக ஓத ஆரம்பித்திருக்கிறார்கள்.""விலைவாசி ஒன்றும் அப்படி ஒரேயடியாக உயர்ந்துவிடவில்லை, நம் நாட்டு மக்கள் தாங்கும் அளவுக்குத்தான் இருக்கிறது, நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் பட்டினிச் சாவு நிகழவில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மலிவு விலையிலோ இலவசமாகவோ கோதுமையும் அரிசியும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய களஞ்சியங்களில் அடுக்க இடம் இல்லாமல் வெட்ட வெளியில் தானியங்களை மழைக்கும் வெயிலுக்கும் தீனியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றெல்லாம் இறுமாப்புடன் பதில் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பணவீக்கம் என்ற பகாசுரன் பாமர மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வருவதை ""கிரைசில்'' என்ற தர மதிப்பீட்டு அமைப்பின் சமீபத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 5.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.ஏழைகள், நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுச் செலவை மட்டுமே சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் அரை வயிறு, கால் வயிறு என்று சாப்பிடத் தொடங்கிவிட்டன. ஏழை, நடுத்தர மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.சாப்பாட்டுச்செலவு அதிகமாகிவிட்டதால் மருத்துவச் செலவு, கல்விச் செலவு போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நோய் முற்றி பாயில் விழுந்தால்தான் இனி சிகிச்சை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.2008-09-ம் நிதியாண்டு முதல் 2010-11-ம் நிதியாண்டு வரை பணவீக்க விகிதம் 8% ஆக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது வெறும் 5% ஆகத்தான் இருந்தது.அரிசி, கோதுமை, பருப்பு, இதர தானியங்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு மட்டும் 11.6% ஆக இந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. உணவுப் பொருள் அல்லாத பண்டங்களின் விலை உயர்வோ 5.7% ஆகத்தான் இருந்திருக்கிறது. இதில் இரட்டை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது சாமான்யர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குத் தேவை குறைந்து அவற்றை வாங்குவோர் குறைந்ததால் அவற்றின் விலையை உயர்த்த முடியாமல் குறைத்துவிட்டனர். இதனால் அந்தத் துறையில் வேலை இழப்பும் ஆள் குறைப்பும் ஏற்பட்டிருக்கிறது. விலைவாசியைக் குறைக்க அரசு எடுத்த ஒரே நடவடிக்கை ரிசர்வ் வங்கி மூலம் வட்டி வீதத்தை கால், கால் (0.25) சதவீதமாக பத்து முறை உயர்த்தியதுதான். வீடு கட்டக் கடன் வாங்கியவர்களும் வாகனக்கடன் வாங்கியவர்களும் மேலும் தங்களுடைய பொருளாதாரச் சக்தியை இழந்ததுதான் மிச்சம்.அதனால், வங்கிகளின் புத்தக மதிப்பு லாபம் பல மடங்கு கூடியது; எனவே ஆட்சியாளர்கள் ""தங்களுடைய திறமையால் வங்கிகள் லாபம் ஈட்டி வருவதாக'' தம்பட்டம் அடித்து வருகின்றனர்.""சர்வதேச பண்டச் சந்தையில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், அதிலும் குறிப்பாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விலைவாசி குறையாது, உயர்ந்துகொண்டே போகும்'' என்று ஆரூடம் கூறுகிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை.சமீபத்திய டீசல், சமையல் கேஸ், கெரசின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கை ஜூலையிலேயே தாண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.3 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தன் வருவாயில் வெறும் 14 சதவீதத்தைத்தான் தன்னுடைய செலவுகளுக்காக ஒதுக்கினார். இப்போது அந்தத் தேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டாலும்கூட 17% அளவுக்கு அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் நடுத்தர மக்களிடம் சேமிப்பே இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும்கூட இந்தியாவில் பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு நடுத்தர மக்களின் சேமிப்புதான் அச்சாணியாக இருந்தது. இப்போது அந்த அச்சாணியும் முறியத் தொடங்கியிருக்கிறது.தாங்க முடியாத விலைவாசி உயர்வுதான் தீவிரவாதத்துக்கு அடிப்படைக் காரணமாக அமையும். சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயரும்போது அது சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறிவிடுகிறது. இதுகூடப் புரியாமல் ஆட்சி செய்த பிரெஞ்சு மன்னன் 16}ம் லூயியின் சரித்திரத்தை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.மக்களவை பொதுத் தேர்தலுக்குத்தான் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறதே என்று மெத்தனமாக இராமல் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முழு முனைப்புடன் அரசு செயல்பட வேண்டும். பொருளாதாரம் வளருவது இருக்கட்டும். முதலில் விலைவாசியைக் குறைப்பது பற்றிக் கவலைப்படுவோம். பொருளாதாரம் படித்தால் மட்டும் போதாது. மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

 

என் காதலே என்ன சொல்கிறாய்?




புதன், 29 ஜூன், 2011

என் காதலே என்ன சொல்கிறாய்?


புதன், 22 ஜூன், 2011

வளர்ச்சி நிதியா, விரய நிதியா?



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென தனியாக தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது என்பதே தவறு என்பதுதான் நமது கருத்து. மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பது சட்டம் இயற்றலும், மக்கள் பிரச்னைகளையும் தங்களது தொகுதியைப் பாதிக்கும் பிரச்னைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதுதான். தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களது வேலையை மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்ளும்போது கடமையும் நிதியும் திசை மாறுகிறது. இரட்டை வேலையாக மாறிப்போகிறது. ஆனால், இந்த நடைமுறையை நம்மால் மாற்றிவிட முடியாது என்கிற நிலையில், இதில் முறைகேடு இல்லாமலும், மக்களுக்கு உண்மையாகவே பயன்படும் வகையிலும் இத்திட்ட நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதுதான் நமது கருத்து.

ஆண்டுதோறும் ரூ.5 கோடி வீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி, சுமார் ரூ. 4,000 கோடி முறையாகச் செலவிடப்படுகிறதா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவிக்காலமான 5 ஆண்டுகளில் ரூ.25 கோடி ஒதுக்கீடு பெறவும், அவர் விருப்பம்போல திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளவும் முடியும் என்கிறபோது, இத்திட்டம் மக்கள் விருப்பமாக இருக்கவேண்டுமே தவிர, எம்எல்ஏ அல்லது எம்பியின் சொந்த விருப்பத்துக்காக, சுய விளம்பரத்துக்காகச் செய்யும் செலவுகளாக அமைந்துவிடக்கூடாது.

மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் திட்டங்களை ஆட்சியரும் அதிகாரிகளும் அனுமதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்ற நிலையை மாற்றவும், எந்தெந்தத் திட்டங்களை மட்டும் இத்திட்டத்தில் நிறைவேற்ற முடியும் என்கிற கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகிறது.

தனது பெயரை விளம்பரப்படுத்தும்விதமாக சாலையில் நிழற்குடை கட்டப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், நூறு மீட்டர் தள்ளி புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதைக் காணும்போது, நம் கண்ணெதிரில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுவதைத் தவிர, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, இப்படி ஓராண்டுக்குள் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழும் என்று தெரிந்தால், அதிகாரிகள் இத்தகைய நிழற்குடையை இடம்பெயர்க்க தக்க வடிவமைப்பில் அமைக்கத்தான் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதைப்பற்றி யோசிக்கவும்கூட, உண்மையை அறிந்துகொள்ளவும்கூட நேரமில்லாமல் மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு வழங்கும் திட்டச்செலவு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆக, இதுநாள் வரை இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் திட்டநிதிஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அரசுப் பணத்தை எதற்காக இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்குச் செலவிட வேண்டும்? ரூ.50 லட்சம் என வரையறை செய்வதைவிட இதை முற்றிலுமாக நீக்குவது என்பதே நியாயம்.

ஒரு எம்எல்ஏ, எம்பி என்பவர் தனது தொகுதிக்காக என்ன நன்மை செய்தார் என்பதை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை நம்மிடம் இல்லை. இவர்கள் கட்டித் தரும் கட்டடங்கள் அவர்கள் காலத்திலேயே இடிந்து விழுமெனில் அதன் தரம் குறைந்த கட்டுமானத்துக்காக அவரையும் பொறுப்பேற்கச் செய்யும் விதிமுறைகள் இந்தத் திட்டத்தில் இல்லை. ஆகவே, முறைகேடுகளுக்கு அதிக இடம் அளிப்பதாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடர்கிறது.

இரண்டு லட்சத்துக்கும் குறைவான திட்ட மதிப்பீடு இருப்பின் முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்படும் என்கிற புதியநடைமுறை, அவசியமற்ற சிறுசிறு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும். தொகுதிக்கு வெளியே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஏதாவது ஒரு திட்டத்துக்குச் செலவிடலாம் என்பதும் கண்ணுக்குத் தெரியாத இடத்தில், திட்டத்தைச் செய்ததாகச் சொல்லி பொய்யாகக் கணக்கெழுதவே உதவும்.

ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி வரை செலவிடப்படுவதால், இதில் பாதித் தொகையையாவது தேசிய அளவிலான ஒரு பொதுத்திட்டத்தை வரையறுத்து அதைச் செய்வதற்காக ஒதுக்கீடு செய்தால் மக்களுக்குப் பயன் தருவதாக அமையும்.

உதாரணமாக, 2011-12-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்காகக் கழிப்பறை வசதி, சுத்திகரிப்பு கருவி பொருத்திய தூய்மைக் குடிநீர் வழங்கல் ஆகிய திட்டத்துக்காக மட்டுமே 50 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும், இத்தகைய ஏதேனும் ஒரு பொதுத்திட்டத்துக்குப் பாதி நிதியை ஒதுக்கவும், இதற்காக இடங்களைத் தீர்மானிப்பதில் மட்டுமே எம்பிக்களுக்கு விருப்புரிமை வழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது நாடு தழுவிய ஒரு திட்டம் எம்எல்ஏ அல்லது எம்பியின் நேரடிக் கண்காணிப்பில் முறையாக நிறைவேற்றப்படும்.

மீதமுள்ள 50 விழுக்காடு தொகையை, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்பு நாளில் கிடைக்கும் மனுக்களில் சொல்லப்படும் மக்கள் தேவைகளில், அரசால் உடனடியாகச் செய்ய இயலாத நிலையில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ளப் பரிசீலிக்கலாம்.

இத்தகைய கட்டுப்பாடுகள், இத்திட்டம் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பமாக இல்லாமல் மக்களின் தேவை கருதிய விருப்பமாக இருக்கும். மக்கள் பணம் மக்களுக்கு முறையாகச் செலவிடப்படும்.

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவது தடுக்கப்பட்டு ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது குறிக்கோள் இல்லாமல் வாரி வழங்கப்படும் "எம்பிக்கள் வளர்ச்சிநிதி' என்பதாகத்தான் இருக்கும்.

நன்றி-தினமணி






துாரத்தில் நான் கண்ட உன் முகம் !
நதி தீரத்தில் தேன்கொண்ட என் மனம்!
சுகம் நுாறாகும்காவியமே !
ஒரு சோகத்தின் ஆரம்பமே !
இது உன்னை எண்ணி-  நான் !
பாடும் ராகம் !














சட்டம் மட்டுமே போதாது!

காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.

இந்தக் காலனிய சிந்தனையைத் தகர்த்தெறியும் விதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுந்த மக்கள் குரல், மத்திய அரசை நிர்பந்தித்து தகவல் பெறும் உரிமையைச் சட்டமாக்க வைத்தது. அதிகம் படிப்பறிவில்லாத ராஜஸ்தானிய கிராமத்தினரின் போராட்டம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல, இப்போது அந்தச் சட்டத்தின் தொடர்விளைவாக, அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஓரளவுக்கு உறுதிப்படுத்தவும் உதவியிருக்கிறது.

எந்த அளவுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருந்தாலும், நிச்சயமாக இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும், நாளுக்கு நாள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய ஜனநாயகம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை "தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005' என்றால் இப்போது இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனையாக தொலைநோக்குப் பார்வையுடன் இன்னொரு மசோதா விரைவிலேயே சட்டமாக்கப்பட இருக்கிறது. தகவல் பெறும் உரிமைச்சட்டம் எந்த அளவுக்கு அரசியல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உதவியதோ, அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் ஒரு மசோதா பயன்படும்.

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும் "மின்னணுவழிச் சேவை வழங்கல் வரைவு மசோதா - 2011' பல வகைகளில் அரசு அலுவலகங்களில் காணப்படும் கையூட்டுகளுக்கு முடிவுகட்ட உதவும். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் காணப்படும் இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்பட்டால், அரசு அலுவலகங்களில் மனுக்களைக் கொடுத்துவிட்டு மேஜைக்கு மேஜை ஒவ்வோர் அதிகாரியாக கெஞ்சிக் கூத்தாடி, கையில் கொடுத்து, காலைப் பிடித்து நமது நியாயமான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பொதுமக்கள் போராட வேண்டிய தேவையிருக்காது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டால், லைசென்ஸ், பர்மிட், சான்றிதழ், அனுமதி அல்லது உத்தரவு, பணம் அடைப்பது அல்லது பெறுவது போன்ற எல்லா அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட அலுவல்களையும் இணையதளத்தின் மூலம் இனிமேல் செய்துகொள்ள முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் காணப்பட்டதுபோலவே, இந்தச் சட்டத்திலும் குறைகளைப் பதிவு செய்யவும் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாத அரசு அலுவலர் அல்லது அதிகாரிக்கு அபராதம் விதிக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எல்லாத் துறைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அலுவல்கள் அனைத்திலும் மின்னணு சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது இந்த மசோதா. இந்தச் சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப்போலவே எல்லா மாநில அரசுகளுக்கும்கூடப் பொருந்தும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இணையதள சேவை மூலம் அரசு அலுவல்கள் நடைபெறுவது என்பது காலத்தின் கட்டாயம். இல்லாமல் போனால், அரசு அலுவல்களைப் பீடித்திருக்கும் லஞ்சமெனும் காலனிய அடிமைத்தன அடையாளமான புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி இணையதள சேவையைச் செயல்படுத்துவதில் உலகிலுள்ள 192 நாடுகளில் இந்தியா 119-வது இடத்தில்தான் இருக்கிறது. மின்னணு சேவை உறுதிப்படுத்தப்படுமேயானால், ஐக்கிய நாடுகள் சபையின் லஞ்ச ஊழல் பட்டியலிலும் நிர்வாகத் திறமையின்மைப் பட்டியலிலும் இந்தியா நகைப்புக்குரியதாக இருக்கும் இன்றைய நிலைமை தொடராது.

தகவல் பெறும் உரிமைச்சட்டமும் சரி, மின்னணு சேவையை உறுதிப்படுத்தக் கொண்டுவரப்படும் சட்டமும் சரி, ஒருவேளை ஆளும் கூட்டணிக்கேகூட எதிரான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று தெரிந்தும், இந்தியாவின் வருங்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு இதைச் சட்டமாக்க முன்வந்திருக்கும் மன்மோகன் சிங் அரசை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். நல்ல நேர்மையான நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட்டு, அடிப்படைச் சேவைகளில் லஞ்ச ஊழல் ஒழிக்கப்படுவது என்பதேகூட அரசுக்கு நல்ல பெயரை வாங்கித்தரக் கூடும்.

சட்டங்களை இயற்றுவதால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. சட்டம் என்பது வெறும் ஆயுதம் மட்டுமே. அதை முறையாகப் பயன்படுத்தினால்தான் பயனை அனுபவிக்க முடியும். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தையும் மின்னணுவழிச் சேவை வழங்கல் சட்டத்தையும் முறையாகப் பயன்படுத்தி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது மக்களின் கையில்தான் இருக்கிறது.

நன்றி-தினமணி

கனடாவில் மரண தண்டனை

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், மின்கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.


கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மரணதண்டனை அவசியமா? ஒருவருடைய உயிரைப்பறிக்கின்ற அதிகாரத்தை சட்டம் என்ற போர்வையில் எடுக்கலாமா? ஒருவர் மரணதண்டனைக்குரிய குற்றம் செய்யும் பொழுது அதன் மூலகாரணத்தை ஆராய்ந்து மூலவேரை வெட்டுவது அந்த குற்றம் திரும்பி வராது தடுக்கும் அல்லவா? உதாரணமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவருக்கு மீண்டும் வன்புணர்வில் ஈடுபடாதவாறு இனப்பெருக்க உறுப்பை சேதம் செய்து விடுதல். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மீண்டும் வெளியே வராதவாறு சிறையில் அடைப்பதற்கான சட்ட ஓட்டைகளை அடைத்து இறுக்குதல் என்பனவற்ரைக் குறிப்படலாம். இது பற்றிய கள நண்பர்களது கருத்துகளையும் எதிர்பர்க்கின்றேன்.

செவ்வாய், 21 ஜூன், 2011

சாரு நிவேதிதாவின் மறு பக்கம்

எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் கனிமொழியும் காதலர்களாம்.  சாரு தான்னுடைய வாசகியாக இணைந்து 21  நிரம்பிய பெண்ணிடம் காம உணர்வுகளோடு தவறாக பேசியிருக்கிறார்.  சாரு அந்த பெண்ணிடம் சாட்டில் பேசிய வசனங்கள் இப்போது காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.  






அந்த வாசகியிடம் பேசும் போது கனிமொழி! கனிமொழி நாங்க இருவரும் காலதலர்களாக இருந்தாம். கனிமொழி அரசியலுக்கு வரும் வரை" என்றும் கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு நான் நிறைய உதவிகள் செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். 

" I never kissed a women expect kani"  கனியை தவிர வேறு யாரையும் சாரு முத்தமிட்டது கிடையாதாம்.  இது ஒரு பகுதியாக இருந்தாலும் ஒரு இளம் வாசகியிடம் இப்படியா பேசுவார் ஒரு எழுத்தாளர் என முகம் சுளிக்கும் அளவிற்கு வர்ணிப்புகள் படு காம உணர்வோடு இருக்கிறது. 


இந்த சாருவின் நடவடிக்கையால் பல இளம் பெண்கள் இணையத்தை ஒரு வித பயத்தோடு பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். இந்த நேரத்தில் இந்த செயலை துணிச்சலோடு எதிர்கொண்ட அந்த பெண் பதிவருக்கு பாராட்டுக்கள். யாரும் யோக்கியர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பெண்கள் தங்கள் நோக்கம் நல்ல கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் பதிவு செய்ய வேண்டும்.  
துணிச்சலோடு சாருவின் இன்னொரு முகத்தை வெளியுலகிற்கு காட்டிய பெரியார் கருத்துக்களை பரப்பும் தமிழச்சிக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வோம்.  இது சம்மந்தமான தமிழச்சியின் பதிவு சாரு ஆன்லைன் பெண்கள் ஜாக்கிரதை .

இந்த பதிவின் முழு உண்மை தன்மையை சாரு வெளிபடுத்தியாக வேண்டும். ஏனெனில் கனிமொழி ஜெயிலில் இருப்பதால் அவரால் உடனடியாக இதற்கு விளக்கம் கொடுக்க முடியாது.        

ஞாயிறு, 19 ஜூன், 2011

Google Talk-ல் தமிழில் டைப்

Google Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி ?




கூகிள் டாக்கில் நீங்கள் தமிழில் டைப் செய்து உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினர்களிடமும் பேச உங்களுக்கு ஆசை இருக்காதா என்ன ? ஆனால் அதை எப்படி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவி. நான் இங்கு கீழே கொடுத்துள்ள முறையில் முயற்ச்சி செய்து பாருங்கள்.


முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஈகலப்பையை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.

http://thamizha.com/ekalappai-anjal









ஈகலப்பை இன்ஸ்டால் செய்யும் முறை:











கூகிள் டாக்கில் ஈகலப்பையை செட்டப் செய்யும் முறை:











முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.