சனி, 30 அக்டோபர், 2010

இங்கே சொடுக்கவும்.....

ஒரு வரி கருத்து:இறைவனுக்கு அஞ்சுங்கள். அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனை கண்டு அஞ்சுங்கள்

நண்பர்களே சமீப காலமாக வலைப்பூ எழுதும் நபர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் அதில் பலர் நல்ல சிந்தனைகளையும், தொழில்நுட்ப தகவல்களையும் இன்னும் கவிதை, இலக்கியம் என எழுதுகிறார்கள் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் அவர்களுக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்,பொதுவாகவே பதிவுலகை பொருத்தவரை புதிய பதிவர்கள் மற்றவர்கள் சிரத்தையில் படுவதில்லை ஒரு வேளை நல்ல பதிவுகள் எழுதினாலும் அவர்கள் புறக்கனிக்கபடுகிறார்கள் அல்லது தள முகவரி மறந்து விடுகிறார்கள் ஒருவேளை நீங்கள் எழுதுவது படிக்கும் வாசகருக்கு பிடிக்குமேயானால் அவர் அதை புக்மார்க் செய்துகொள்ளும் வசதி உங்கள் தளத்திலே இருக்குமேயானால் ஒருவேளை உங்கள் எல்லா பதிவுகளும் அவரை சென்றடைய வாய்ப்பு இருக்கிறதல்லவா.

நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியான வாசகர்கள் தமிழிஷ் அல்லது பிற திரட்டிகள் வழியாக வருகிறார்கள் சரி ஒரு பதிவற்கு ஏகப்பட்ட பாலோவர்கள் இருக்கிறார்கள் மின்னஞ்சல் வழியாக படிக்கும் வாசகர்கள் என இருப்பார்கள் உண்மையில் அத்தனை நபர்களும் ஒரு பதிவை படிப்பார்களேயானல் சராசரியாக அந்த பதிவிற்கு எத்தனை வாக்குகள் விழவேண்டும்? எத்தனை கருத்துரைகள் வரவேண்டும்? என் தளத்தையே எடுத்துக்கொள்ளுங்கள் 20 பாலோவர்கள் இருக்கிறார்கள் இந்த இருபது நண்பர்களும் வாக்கு அளித்தால் என் எல்லா பதிவுகளிலும் 20 வாக்குகளும் 20 கருத்துரைகளும் வரவேண்டுமே? ஆனால் நடப்பது என்ன சில பதிவுகள் பெறும் வாக்கு மிக குறைந்தாக இருக்கும் அதிலும் சமீபத்திய பதிவுகள் என் வாக்கு மட்டுமே இருக்கும் இதற்கு என்ன காரணம் ஏதோ ஒரு தகவல் பிடித்து போய் நம் தளத்தில் நண்பர்களாக இனைந்துவிடுவார்கள் பின்னர் அவர்கள் இனைந்த தளத்தையும் மறந்து போயிருப்பார்கள் ஒரு வேளை அவர்கள் பதிவு எழுதுபவர்களாக இருந்தால் அவரின் பிளாக்கர் திறக்கும் பொது தெரியும் அதிலும் நம் தளத்தில் மட்டுமே இனைந்திருக்கிறார் என்றால் பிரச்சினையில்லை நம் பதிவை பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது ஆனால அவர் ஒரு 20 தளத்தில் இனைந்திருக்கிறார் என யோசித்து பாருங்கள் நம்முடைய தளத்தை அவர் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?

நம் தளத்தில் அவர் கணினியில் புக்மார்க செய்வதற்கான வசதி ஏற்படுத்திகொடுத்தால் ஒருவேளை நம் பதிவை படிக்க விரும்பும் வாசகர்கள் அதை புக்மார்க் செய்துகொள்வார்கள் (இந்த வசதிதான் எல்லா பிரவுசர்களிலும் இருக்கிறதே? உண்மைதான் ஆனால் யாரும் அதை ஒரு வேளையாக செய்வதில்லையே அதற்கான நேரம் செலவழிப்பதையும் விரும்புவதில்லையெ!)

இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் எப்படி புக்மார்க் நிறுவுவது என பார்க்கலாம்
இந்த புக்மார்க வசதி உங்களுக்கு பிடித்த இடத்தில் Add Gadget வழியாக நிறுவிக்கொள்ளலாம் இனி வழக்கம்போல Dashboard சென்று Layout –ல் Add Gadget என்பதை கிளிக்கி அதில் HTML/JavaScript என்பதை தேர்ந்தெடுத்து பின்வரும் HTML/JavaScript கோடினை அங்கு பேஸ்ட் செய்து பெயர் கொடுக்காமல் சேமிக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் புக்மார்க் செய்யும் வசதி வந்திருக்கும்



===========================================================================


இனி புக்மார்க் ஸ்கிர்ப்ட் தரவறக்கி நான் கீழே கொடுத்துள்ள இடங்களில் உங்கள் விருப்பம் போல மாற்றங்கள் செய்துகொள்ளவும்


===========================================================================

நீங்கள் மாற்றவேண்டிய இடங்கள்

http://www.idimulhakkam.blogspot.com/ (இதற்கு பதிலாக உங்கள் தள முகவரி)

Puriyatha Kirukkalkal (இதை ஆங்கிலத்திலேயே எழுதவும் எழுத்துரு பிரச்சினை வருகிறது)

#FF0000 (உங்களுக்கு பிடித்தமான கலர்)

Add Bookmark (புக்மார்க் செய்ய உங்கள் விருப்பம் போல)

Press (Ctrl-D) On Key Board (கீபோர்டில் (Ctrl-D) அழுத்தவும் உங்கள் விருப்பம் போல (Ctrl-D) என்பதை மாற்றவேண்டாம்)

என்ன நண்பர்களே சரியாக செய்துவிட்டீர்கள் தானே இனி உங்கள் தளத்தை திறந்து பாருங்கள் உங்கள் தளத்திற்கான புக்மார்க் இருக்கும் இனி தேவைப்படும் நபர்கள் அதை பயன்படுத்திகொள்வார்கள்

நான் இதனை இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்பு நரி, கூகுள் குரோம் மூன்றிலும் சரியாக செயல்படுகிறது இதில் நெருப்பு நரி மற்றும் கூகுள் குரோமில் (Ctrl-D) என அழுத்தி புக்மார்க் செய்ய சொல்லி இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நேரடியாக அழுத்தி சேமிக்க வசதி இருக்கும் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும்

குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த............

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்...................................இங்கே சொடுக்கவும்.....

விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்

Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது.  இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத்து தகவல்களையும் காட்டும். அங்கிருந்து அவற்றை அழிக்க அல்லது மீண்டும் Scan செய்ய முடியும்.



தானகவே Update செய்துகொள்ளும் Avira சில நேரங்களில் நீங்களாகவும் செய்ய நேரிடுவது, மேலும் Full Scanning சற்று அதிக நேரம் எடுத்தல் போன்ற சில குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால் பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கும் சாதாரண கணணிப் பாவனையாளர்களுக்கும் முழுமையாக ஒரு சிறந்த அன்டிவைரஸ் மென்பொருளாகும்.
தரவிறக்கம் http://download.cnet.com/Avira-AntiVir-Personal-Free-Antivirus/3000-2239_4-10322935.html
Ccleaner

கணனியின் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் சாதரணமாக கணணியில் உருவாகும் தேவையற்ற File கள் Browsing History, காலாவதியான Registry தகவல்கள் போன்றவற்றை சேர விடமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான விடயம். அதற்கு உதவிசெய்யவே  Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணணியை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் Ccleaner ஒரு இலவச செறிவு குறைந்த மென்பொருளாகும்.

ஏனைய மென்பொருட்களை போலவே நிறுவ கூடிய இது Auto Update வசதியை கொண்டது. இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு தேவையான அல்லது கணனிக்கு தேவையான Systems File களை அழித்து விடும் அபாயம் உள்ளது. அதனாலேயே நிறுவிய பின் Scan செய்வதற்கான தெரிவுகளில் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை.



முதலில் Cleaner பகுதியில் Analysis பட்டனை அழுத்தி Scan செய்தபின் Run Cleaner ஐ கிளிக் செய்யுங்கள். தேவையற்ற File கள் Browsing History, போன்றவை அழிக்கப்படும் இவற்றை மீள பெற முடியாது. ஆனாலும் நீங்கள் Scan தெரிவுகளில் மாற்றங்கள் செய்யாவிடின் பயப்படத்தேவையில்லை.  காலாவதியான Registry தகவல்கள் அழிக்க Registry தெரிவு செய்து Scan Issues செய்து பின் Fix selected issues கிளிக் செய்ததும் Registry entry Backup செய்ய வேண்டுமென அறிவுறுத்தும். அவ்வாறு Backup ஐ பதிவு செய்ததும்.  காலாவதியான Registry தகவல்கள் அனைத்தும் நீக்கப்படும். இது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருளாகும்.


தரவிறக்கம் http://www.filehippo.com/download/file/9a888115b46999306ccbe9969700d286c0055e84866c44b8e6e6023d1bf06d97/

கணனியை சட்டவுன் செய்யும் போதே Ccleaner மூலம் கிளீன் செய்வதற்கான படிமுறை


இருக்கும் அனைத்து கணனி மற்றும் உலாவியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களிலேயே CCleaner சிறந்ததாகும். இதை பற்றி இந்த இணைப்பில் ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். இப்போது இதைப்பற்றிய இன்னுமொரு நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

கணனியில் ஒவ்வொருமுறையும் CClaner ஐ திறந்து அதன் பின்னர் சுத்தப்படுத்தும் பணியை செய்வதற்கு நேரம் போததாக இருக்கலாம். உதாராணமாக ஒன்றுக்கு மேற்பட்ட கணனிகள் இருக்கும் இன்ரநெற் செண்டர் போன்றவற்றில் இதை செய்வது சாத்தியம் இல்லை.

அதற்கு பதிலாக கணனியை நிறுத்தும் போதே சட்டவுண் செய்யும் போதே தானாகா CCleaner ரன் செய்து கிளீனிங் பணியை செய்யக்கூடியதாக இருந்தால் மிக இலகுவல்லவா? அதை எப்படி செய்வது?

1. CCleaner இன் மற்றுமொரு டூல் AutoCleaner  ஐ நிறுவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உலாவியை நிறுத்தும் போதே தன்னியக்கச் செயற்பாட்டின் மூலமாக உலாவில் சேமிக்கப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும்.

2. Desktop இல் வலது கிளிக் செய்து NEW - Sortcut செல்லுங்கள் அதன் பின்னர்

"C:\Program Files\CCleaner\CCleaner.exe" /AUTO /SHUTDOWN

என்பதை Target என்ற இடத்தில் பேஸ்ட் செய்து OK செய்யுங்கள்.

3. இனிமேல் கணனியை சட்டவுன் செய்யும் போது இந்த சாட்கட் ஐ பயன்படுத்துங்கள். அதன் பின்னர் கணனி சட்டவுன் ஆகும் முன் CCleaner ரன் செய்யப்பட்டு கணனி சுத்தம் செய்யப்படும்.

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்

இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை

பார்த்தேன் ;ரசித்தேன் என்பதோடு இணையத்தில் யாரும் நிறுத்திக்கொள்வதில்லை.பார்த்து ரசித்ததை பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றனர்.
செய்திகள் மற்றும் கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதற்கு சுலபமான வழிகள் இருக்கவே செய்கின்றன.இமெயில் மூலம் அவற்றை அனுப்பி வைக்கும் வசதி அநேகமாக இந்த இணைய பக்கத்திலியே இருக்கலாம்.புகைப்படங்கள் வீடியோ போன்றவற்றையும் கூட சுலபமாக பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் சில நேரங்களில் நாம் பார்க்கும் இணையதள‌ பக்கத்தை அல்லது அதன் ஒரு பகுதியை அப்படியே பகிர்ந்து கொள்ள விரும்பும் போது தான் சிக்கல்.
ஒன்று அந்த‌ ப‌க்க‌த்தில் உள்ள‌ காட்சியை விள‌க்கும் வ‌கையில் குறிப்புக‌ளை அனுப்ப‌ வேண்டும் .அல்ல‌து இணைய‌ ப‌க்க‌த்தை க‌ட் செய்து பின்ன‌ர் போட்டோஷாப்பில் உள்ள‌ பையின்ட் வ‌சதியை ப‌ய‌ன்ப‌டுத்தி அத‌ன் தோற்ற‌த்தை சேமித்து அனுப்ப‌ வேண்டும்.
ஆனால் இனி இப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டாம்.இத‌ற்காக‌ என்றே ஒரு சேவை இருக்கிற‌து.
ஓவ்லி டாட் காம் என்னும் இணைய‌த‌ள‌ம் இந்த‌ சேவையை வ‌ழ‌ங்குகிற‌து.எந்த‌ இணைய‌ ப‌க்க‌த்தை ப‌கிர்ந்து கொள்ள‌ விருப்ப‌மோ அத‌னை ஸ்கிரின்ஷாட்டாக‌ சிறைப்பிடித்து அப்ப‌டியே ந்ண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி விட‌லாம். தேவைப்ப‌ட்டால் குறிப்புக‌ளை எழுதியும் அனுப்ப‌லாம்.
இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எளிது.உறுப்பின‌ராக‌ ப‌திவு செய்து கொண்டு டெஸ்க‌டாப் கிள‌ய‌ன்டை ப‌திவிற‌க்க‌ம் செய்து கொண்டால் போதும்.

இலவசமாக புகைப்படங்கள் தரவிறக்கம் செய்ய

இணையத்தில் ஓர் குறிப்பிட புகைபடத்தை தேடுவது மிகவும் சுலபமானதும் எளிதானதும் கூட .ஆனால் இணையத்தில் இருக்கும் பரவலான புகைப்படங்கள் copyrights (உரிமங்கள் ) மூலம் காக்கப்படுகின்றன .அதையும் மீறி இப்புகைப்படங்களை உபயோகிப்பதின் மூலம் நாம் தண்டனைக்குள்ளாகலாம்.நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு இதனால் பெரிதாக பிரச்னை இல்லை என்றாலும் , ஓர் உரிமம் பெற்ற புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பிற தளங்களிலோ அல்லது வியாபார நோக்கிலோ பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் .இதனைத் தவிர்க்க வேண்டுமெனில் நாம் உரிமம் பெறாத புகைப்படங்களையே பயன்படுத்த வேண்டும் .இவ்வாறான உரிமம் பெறாத புகைப்படங்களை இலவசமாக சில தளங்கள் வழங்குகின்றது .இதனை நாம் நமது இணையத்திலோ அல்லது வியாபார நோக்கிலோ இலவசமாக பயன்படுத்த முடியும் .குறிப்பாக புகைப்பட கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் இது மிகவும் பயன்படும் .இலவசமாக உரிமம் பெறாத (copyright images )படங்களை தரும் இணையதளங்களின் தொகுப்பை பெற இங்கே சொடுக்கவும்

இரகசிய இணையகாமரா - வேவுபார்க்க




இன்று ஒரு இணையம் பார்த்தேன் அதை கண்டிப்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும், இடிமுழக்கத்தின் பதிவுகளுக்கு ஆதவு கொடுக்கும் அன்பர்களுக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் மூலம்தான் என்னுடைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதா இல்லையா என தெரிந்துகொள்ள முடியும் உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதியுங்கள்
இன்று நான் பகிரப்போகும் இணனயம் உங்கள் கணனியில் ஒரு இணைய காமரா ஒன்றை இணைத்து வைத்துள்ளீர்கள் அந்த காமரா மூலம் எங்கிருந்தும் உங்கள் காமராவில் தெரிவதைப்பார்க்கலாம், இதற்கு உங்களுக்கு messanger,skype , ஏதுவும் தேவையில்லை. உங்கள் அலுவலகதில் உங்கள்  தொழில்லாளர்கள் நீங்கள் இல்லாத நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய உங்கள் கணனியை net ஐ connect செய்து வைத்திருக்கவேண்டும் இல்லையெனில் உங்கள் கணனி இயங்க தொடங்கும் போதே net connect ஆகுவது போல் செய்து வையுங்கள், அடுத்து உங்கள் இணையகமராவை கணனியுடன் இணைப்பிலேயே வைத்திருங்கள் இப்போது உங்கள் இணைய காமராவை இந்த இணையத்தில் பதிவு செய்து அதில் இருந்து ஒரு சிறு மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் அதன் பின் உங்கள் அலுவலக கணனி இயங்க ஆரம்பித்த உடனேயே காமராவில் தெரிவதை எங்கிருந்தும் நீங்கள் அதே இணையத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் இதன்போது உங்கள் அலுவலக கணனியில் எந்த வெளிப்பாடும் தெரியாது, இவ்இணையத்தில் நீங்கள் எத்தனை கணனி காமராவையும் இணைத்து வைக்கலாம்.... இதே போல் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்...

இணையதள வங்கித்திருட்டு



இணையதள வங்கிப்பணப்பரிமாற்றம் மூலம் ரூ.4 இலட்சம் சுருட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘செடிலா கம்யூனிகேஷன்’ நிறுவனத்தை நடத்தி வருபவர் அஞ்சன்குமார். இவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவரது கணக்கில் இருந்து திடீரென ரூ.3.92 லட்சம் மாயமானது. வங்கியில் கேட்டபோது, ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் அஞ்சன் குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில், சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையர் சுதாகர் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஏழு கிணறு போர்சுகீஸ் தெருவை சேர்ந்த இம்ரான் (21), அவரது கூட்டாளிகள் அக்கிம் (26), அப்துல் காலீத் (21) ஆகிய 3 பேர் ஆன்லைனில் பணம் சுருட்டியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நூதன மோசடி குறித்து போலீசில் இம்ரான் அளித்த வாக்குமூலம்: அஞ்சன்குமார் வங்கி கணக்கு விபரத்தை அங்கிருந்த ஒருவர் மூலம் பெற்றோம். அவரது லெட்டர் பேடை போலியாக தயாரித்து, அதன் மூலம் அவரது சிம்கார்டு தொலைந்து விட்டதாக கூறி புதிய சிம்கார்டு கேட்டு சம்பந்தபட்ட செல்போன் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தோம். அவர்கள் பழைய சிம்கார்டை பிளாக் செய்து புதிய சிம்கார்டு கொடுத்தனர். அதை உபயோகித்த போது, அவரது வங்கி கணக்குக்கான பாஸ்வேர்டு கிடைத்தது. இந்நிலையில், போலி டிரைவிங் லைசென்சை பயன்படுத்தி அதே வங்கியிலும், கரூர் வைஸ்யா வங்கியிலும் கணக்கு தொடங்கினோம். பின்னர் கேமரா இல்லாத இன்டர்நெட் மையத்தில் இருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் எங்களது வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றினோம். இதையடுத்து பர்தா அணிந்து கொண்டு ஏடிஎம் சென்டர்களுக்கு சென்று பணத்தை எடுத்தோம். இவ்வாறு இம்ரான் கூறினார். போலீஸ் எச்சரிக்கை சிம்கார்டு தொலைந்து போனால் அல்லது சிதைந்து போனால், அதே எண்ணுக்குரிய புதிய சிம்கார்டு கேட்டு செல்போன் நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். அவர்களும் விண்ணப்பத்தை மட்டும் சரிபார்த்து புதிய சிம்கார்டு கொடுத்து விடுகின்றனர். இதை மோசடி கும்பல் குற்ற வழக்குகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். இதுபோன்ற நூதன மோசடிகளை தடுக்க சம்பந்தபட்ட செல்போன் நிறுவனங்கள் அவர்களின் ஐடி புரூப்பை உறுதி செய்த பின்பே இணைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

30 வருடங்களில் நீங்கள் எப்படியிருப்பீர்கள்

30 வருடங்களில் நீங்கள் எப்படியிருப்பீர்கள்
நம்ம புன்னகையரசி சினேகாவை பார்ப்போமா...........
இணையம்

சில உபயோகமான இணையதளங்கள்

உங்களது கணிப்பொறியில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஏராளமான குறிப்புகள் அதாங்க டிப்ஸ்கள் தரும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இணையதளம்:www.staysmartonline.gov.au/secure-computer


உங்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங்கில் அளவற்ற ஆர்வம் உண்டா?ஆம் எனில் நீங்கள் இணையக்குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வாளராகலாம்.இதற்கான படிப்பு புனேயில் சொல்லித்தருகிறார்கள்.இந்தியா முழுக்க (சென்னையிலும்) கிளை உண்டு. முழுக்க முழுக்க ஹார்டுவேரிலும் நெட்வொர்க்கிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கே இந்த சைபர் க்ரைம் இன்வெஸ்டிகேட்டர் டிப்ளமோ ஒத்துவரும்.பொருளாதார நிலையில் வசதியானவர்களுக்கு மட்டுமே இந்த கோர்ஸ் சரிப்பட்டுவரும்.இதில் சேர ஏதாவது ஒருபட்டப்படிப்பு இருந்தால் போதும்.இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதில் சேர ப்ளஸ் டூ போதும் என நிர்ணயித்திருந்தனர்.www.asianlaws.org


நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.இந்த இணையதளம் சென்று 1 முதல் 52 வரை உள்ள எண்கள் உள்ள 7 வரிசைகள் இருக்கும்.அதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது 6 எண்ணை தேர்வு செய்ய வேண் டும்.இப்படி 6 முறை தேர்வு செய்ய வேண்டும்.7வது வரிசையில் 7 எண்களைத்தேர்வு செய்யவேண்டும்.
அனைத்து வரிசைகளும் அனைத்து எண்களும் பொருந்தியிருந்தால் 10,00,000 டாலர்கள் ரொக்கப்பரிசு உண்டு.இந்தப்பரிசை கொஞ்சம் கொஞ்சமாக 25 ஆண்டுகளுக்குத்தருவார்கள்.இதைப் பெற இண்டர்நேஷனல் கிரடிட் கார்டு நம்மிடம் இருக்க வேண்டும்.இதில் கலந்துகொள்ள எந்த விதக்கட்டணமும்கிடையாது.ஒரே ஒரு மின் அஞ்சம் முகவரி இருந்தால் போதும்.உங்களை கோடீஸ்வரராக்கும் இணையதள முகவரி:www.freelotto.com


ஆழ்நிலைதியானம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? ஒன்று சென்னையில் சொல்லித்தருகிறார்கள்.அது பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதிவிட்டோம்.இன்னொரு இடத்தில் கட்டணமின்றிக் கற்றுத்தருகிறார்கள்.காலம் இரண்டு நாட்கள்.இடம்:மைசூர்,கர்நாடகா மாநிலம்www.meditationguru.com
இந்த தளத்தில் தமிழ்விளக்கமும் இருக்கும்.ஆப்சனைத் தேர்வு செய்யவும்.

முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம்

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .




'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும். 'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.



எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.


உதாரணமாக
Tamilcnn இணையத்தளத்தை பார்வையிடுவதாயின்
http://தளம்.தமிழ்சிஎன்என்.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.









அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது, "ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை.



இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது. இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

நண்பர்களே உங்கள் கணினியில் எந்த மென்பொருள் நிறுவி இருந்தாலும் அதற்கு நீங்கள் உரிமம் வாங்கி நிறுவி இருப்பீர்கள் சில நேரம் அந்த உரிம எண் உங்களிடம் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் அப்படியே உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த நிறுவப்பட்ட மென்பொருளிலிருந்து அந்த மென்பொருளுக்கான உரிம எண் தேடி எடுக்கலாம்.  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.  மென்பொருள் சுட்டி 



இசை டிஜேக்களுக்கான ( DJ - Disc Jockey) மென்பொருள் மிகவும் விலை அதிகம் ஆனால் இலவசமாக அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் சுலபமாக இருக்கிறது இந்த மென்பொருள்.  அதுவும் இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  மென்பொருளின் பெயர் மிக்ஸ் என்பதாகும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இலவச வீடியோ கன்வெர்டர் வகையில் இதுவும் வருகிறது. மென்பொருள் பெயர் FreeMake Video Converter ஆனால் இந்த மென்பொருள் செய்யும் செயல்கள் அதிகம்.   மிகவும் நிறைய வகையான கோப்புகளை ஆதரிக்கிறது.  மென்பொருளில் இருந்து நேரடியாக யூட்யூபில் பப்ளிஷ் செய்யலாம்.  டிவிடி சிடி எரிக்கலாம்.  போட்டோ ஸ்லைடு ஷோ செய்யலாம்.  வீடியோ எடிட்டிங் செய்யலாம்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வகைகளை தெரிந்து கொள்ள சுட்டி


இந்நிறுவனத்தின் இன்னும் ஒரு தயாரிப்பு FreeMake Video Downloader  இந்த மென்பொருள் வீடியோ தளங்களிலிருந்து படங்களை தரவிறக்க உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த இரண்டு மென்பொருளையும் சேர்த்து தரவிறக்க விரும்புவர்களுக்காக FreeMake Suite என்று வெளியிடப்படுகிறது.  தரவிறக்க சுட்டி

Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது

  • Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack  என்ற மென்பொருள் உதவுக்கிறது.
  • இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே DOWNLOAD பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில்  வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
  • HTTrack  யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
  •  Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் path nameயை கொடுத்து next  கொடுக்கவும்.


  • அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு nextகொடுக்கவும்.அதன் பிறகு finish கொடுக்கவும்.webpage download ஆகும். webpage download முடித்தவுடன் நீங்கள்save செய்த file யை open பண்ணவும். அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதைopen பண்ணி index என்ற file யை open பண்ணவும்.

ஒரிஜினல் விண்டோஸ் 7 இலவசமாக...



நாம் பயன்படுத்தும் விண்டோஸ் pirated ஆக இருந்தால் அதற்கான அப்டேட் file கள் கிடைக்காது. மேலும் இணையத்தில் இணைந்திருந்தால் இந்த விண்டோஸ் பதிப்பு திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைக்கும். இதோ அதற்கான தீர்வு... ஒரிஜினல் விண்டோஸ் 7 ultimate (மிக உயர்ந்த விண்டோஸ் பதிப்பு ) போன்ற pirated விண்டோஸ் 7 ultimate. இதனை cdயில் காபி செய்து பூட் செய்தபின் அதே cdயில் உள்ள அக்டிவேடர் இணை இயக்கினால் விண்டோஸ் activate செய்யப்படும். இபோது நீங்கள் இணையத்தில் உள்ளவினாலும் உங்கள் பதிப்பு pirated என்று கண்டு பிடிக்க இயலாது... மேலும் நீங்கள் அனைத்து விண்டோஸ் updateகளையும் பெறலாம்... மேலும் விண்டோஸ் செக்யூரிட்டி essentials ஆண்டி வைரஸ் தொகுப்பினையும் பெறலாம்.... டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்... (torrent)..... 

யூடியூபில் முழுநீள இந்திய படங்களைக் காண …

வீடியோக்கள் என்றதுமே நம் நினைவில் வருவது யூடியூப்(youtube) தான். யூடியூப் தற்போது அனைவரும் முழு நீள திரைபடங்களை காணும் வகையில் http://www.youtube.com/movies/ என்ற முகவரியில் வழங்கி வருகிறது… இதில் இந்திய படங்களையும் பார்ப்பதற்கான சேவையை அளிக்கிறது.. அதற்கான முகவரி : http://www.youtube.com/movies/bollywood

கார்ட்டூன் முதல் காமிக் வரை :அழகிய எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய…

ஆங்கிலத்தில் விதவிதமான அழகிய எழுத்துருக்கள் நிறைய இருந்தாலும் புதியதாக நமக்கு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது .. அந்த வகையில் நம்முடைய அடையாள அட்டைகள், வாழ்த்து அட்டைகள், வலைப்பூக்களின் தலைப்புகள் இவற்றை வடிவமைக்க வித்தியாசமான, அழகிய எழுத்துருக்களை தரவிறக்கம் இலவசமாக செய்திட சில இணையதள முகவரிகள் : http://www.dafont.com/ http://www.fontsquirrel.com/ http://www.fontspace.com/ http://www.abstractfonts.com/ http://www.fontreactor.com/ http://www.1001fonts.com/ http://www.simplythebest.net/fonts/

இலவசமாக 2780 டிவி சேனல்களை நேரடியாக கூகுல் க்ரோம் இணைய உலாவி வழியாக பார்க்கலாம்

இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.. இதற்காக எந்த இணையதளத்திற்கும் செல்ல தேவை இல்லை… பிறகெப்படி இந்த சேவையை பெறுவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான வழிமுறை…
1. முதலில் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியினை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்
2. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தள முகவரியினை சொடுக்கவும்..
https://chrome.google.com/extensions/detail/licccgnfdlgmmmgaddmbcepikfadcmpe#
3. இப்பொழுது படம் 1 இல் காட்டியுள்ளவாறு உள்ள பக்கத்தினை பார்ர்க்கலாம். அதில் சிவப்பு கட்டமிட்ட Install என்ற பொத்தானை அழுத்தவும்.
Chrome
படம் 1
4. கொடுக்கப்பட்ட extension Install ஆனதும் உங்கள் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியில் படம் 2 இல் கட்டிருப்பதை போல ஐகான் (Icon) தோன்றும்.

5. அதில் உலகில் உள்ள 2780 சேனல்கள் காணப்படும். நீங்கள் விரும்பிய சேனல்களை நேரடியாக பார்க்கலாம்..

இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்

மொபைல் தொழில்நுட்பத்தின் மிக பெரும் சேவையாக குறுஞ்செய்தி(SMS) விளங்குகிறது. நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பகிர, தகல்களை அளிக்க என பலநேரங்களில் குறுஞ்செய்தியே மிக உதவிகரமாக விளங்குகிறது… உங்கள் மொபைலில் இருந்து குறுஞ்செய்தி அனுப்ப கட்டணமா? கவலை வேண்டாம்.. இதோ இலவசமாக இணையம் மூலமாக இந்த சேவையினை பெறலாம். இதற்கான சேவைகளை பல தளங்கள் வழங்கினாலும்.. சில குறிப்பிட்ட தளங்களை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்…
http://www.160by2.com/
http://wwwo.way2sms.com/content/index.html
http://wap.indyarocks.com/send/free-sms
http://isms.ibibo.com/
http://www.india-sms.com/index_sms.htm
http://www.smsfi.com/

இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..

வலைப்பதிவர்கள் தங்களின் பதிவிற்கேற்ற பொருத்தமான புகைப்படத்தை இணையத்தில் இருந்து எடுத்து தங்கள் பதிவில் உபயோகிக்கும்போது காப்புரிமை சிக்கல்கள் உள்ளன. எனவே இது போன்ற காப்புரிமை பிரச்சினைகளற்ற வகையில் சில தளங்கள் புகைப்படங்களை இலவசமாக வழங்குகின்றன… அவை என்னென்ன தளங்கள் என்பது பற்றிய ஒரு பதிவினை இதற்கு முன்னர் இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..” என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். அந்த பதிவு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது…அதனை தொடர்ந்து சில வாசகர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இது போன்று மேலும் தளங்கள் உள்ளனவா என்று கேட்டனர்…ஆம்… இன்னும் நிறைய தளங்கள் உள்ளன…அவற்றில் மேலும் பத்து தளங்களை இங்கே பதிவு செய்கிறேன்..
  1. http://www.freephotobank.org/main.php
  2. http://www.public-domain-photos.com/
  3. http://1photos.com/
  4. http://imagebase.davidniblack.com/main.php
  5. http://www.freephotosbank.com/
  6. http://www.photovaco.com/
  7. http://www.4freephotos.com/
  8. http://www.cepolina.com/freephoto/
  9. http://visipix.dynalias.com/index_hidden.htm
  10. http://www.burningwell.org/gallery2/main.php
உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.
வலைப்பதிவர்கள் தங்களின் பதிவிற்கேற்ற பொருத்தமான புகைப்படத்தை இணையத்தில் இருந்து எடுத்து தங்கள் பதிவில் உபயோகிக்கும்போது காப்புரிமை சிக்கல்கள் உள்ளன. எனவே இது போன்ற காப்புரிமை பிரச்சினைகளற்ற வகையில் சில தளங்கள் புகைப்படங்களை இலவசமாக வழங்குகின்றன… அவை என்னென்ன தளங்கள் என்பது பற்றிய ஒரு பதிவினை இதற்கு முன்னர் இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..” என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். அந்த பதிவு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது…அதனை தொடர்ந்து சில வாசகர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இது போன்று மேலும் தளங்கள் உள்ளனவா என்று கேட்டனர்…ஆம்… இன்னும் நிறைய தளங்கள் உள்ளன…அவற்றில் மேலும் பத்து தளங்களை இங்கே பதிவு செய்கிறேன்..
  1. http://www.freephotobank.org/main.php
  2. http://www.public-domain-photos.com/
  3. http://1photos.com/
  4. http://imagebase.davidniblack.com/main.php
  5. http://www.freephotosbank.com/
  6. http://www.photovaco.com/
  7. http://www.4freephotos.com/
  8. http://www.cepolina.com/freephoto/
  9. http://visipix.dynalias.com/index_hidden.htm
  10. http://www.burningwell.org/gallery2/main.php
உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

யூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…!

YouTube வீடியோக்களை  embed செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வழிமுறை பயன்பாட்டில் உள்ளது.அதற்கான நிரல் <iframe>மூலம் செய்யபடுகிறது. மாதிரி நிரல் :
<iframe class=”youtube-player” type=”text/html” width=”640″ height=”385″ src=”http://www.youtube.com/embed/VIDEO_ID” frameborder=”0″>
</iframe>
இந்த புதிய நிரலை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் Flash player அல்லது HTML5 player இல் வீடியோகளை பார்க்க இயலும் , இது அவர்கள் பயன்படுத்தும் Browsers மற்றும்  விருப்பத்தேர்வுகள்பொருத்தது.HTML5 ஒத்துழைக்கும் Browsers பட்டியல் http://www.youtube.com/html5 தரப்பட்டுள்ளது.HTML5 ஒத்துழைக்காத இடங்களில் FLash Player பயன்படுத்த படுகிறது.
இந்த புதிய நிரலை பயன்படுத்துவதனால் கூடுதல் ஆதாயம், mobile device இல் வீடியோ embed செய்ய அனுமதிக்கிறது.

உலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…


நம் அன்றாட வாழ்வில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமா… நம்ம ஊர் சினிமாக்களை நாம் திரையரங்குகளில் சென்று பார்த்துவிடுகிறோம். உலக சினிமாக்களை திரையரங்கம் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் இன்றும் மிக குறைவாகவே உள்ளது.. சில நல்ல ஆங்கில திரைப்படங்கள் இங்கே மொழிபெயர்ப்புடன் வெளியிடபட்டாலும், அனைத்து திரைப்படங்களும் வெளியிடபடுவதில்லை. மேலும் அவ்வாறு வெளியிடப்படும் திரைப்படங்களும் அனைத்து ஊர்களிலும் வெளியிடப்படுவதில்லை… “அடடே! இந்த படம் பார்க்காம விட்டோமே” என்றும் நாம் பார்க்க தவறிய படங்களை எண்ணி வருத்தப்படும்போது… ஆன்லைனில் எங்காவது இருக்கிறதா என்று நாம் தேடுவது சிரமமாக இருக்கிறது.. அந்த கவலையை போக்க இதோ ஒரு இணையதளம்… http://www.letmewatchthis.com/
மிக அரிதான பழைய படங்களையும் இங்கே எளிதில் காண முடிகிறது… இதில் நமக்கு தேவையான திரைப்படங்களை தேடுவதும் மிக எளிதாக உள்ளது…

இலவசமாக உங்கள் மொபைலுக்கு Games , Facebook Application & Softwares டவுன்லோட் செய்ய…

இன்றைய காலகட்டத்தில் மனிதனின் ஆறாம் விரலாகவே மாறிப்போன அலைபேசி பேசுவதற்கு மட்டுமல்லாமல், ரிலையன்ஸ் விளம்பரத்தில் சொன்னது மாதிரி “உலகம் உங்கள் கையில்” என்றே மாறி போய் இருக்கிறது… சிறிய கணிப்பொறி போன்றே அதை உபயோகித்து வருகிறோம். அதிலும் முக்கியமாய் Games விளையாடுவது நம்மில் பலரின் பொழுதுபோக்காய் உள்ளது..அது மட்டுமின்றி மொபைலிலேயே Facebook, Orkut போன்ற சமூக வலைபின்னல் தளங்களில் சாட் செய்வது,   Gmail, Yahoo mail போன்றவைகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை பார்வையிடலாம். இதற்கு தேவையான அப்ளிகேசன்களை உங்களுக்கு இலவசமாக கீழ்காணும் இணையதளம் வழங்குகிறது..
http://www.getjar.com/
இத்தளத்தில் உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில் அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Megavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட மெகா வீடியோ உதவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஆர்வத்துடன் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கும்போது 72 நிமிடங்களுடன் வீடியோ நின்று சலிப்பை ஏற்படுத்தும்.. இதனை தவிர்க்க இயலாதா என கேட்பவர்களுக்கு..இதோ எளிய முறை. * நீங்கள் பார்க்க விரும்பும் மெகாவீடியோவின் url ஐ கோப்பி செய்து கொள்ளவும். * பிறகு http://ezywatch.com/ என்ற தளத்திற்கு செல்லவும். * படத்தில் காட்டியுள்ள பகுதியில் நீங்கள் copy செய்த url ஐ Paste செய்து Watch என்ற பொத்தானை அழுத்தவும். * அடுத்து படத்தில் காட்டியுள்ளபடி Watch Movie on Free player என்னும் பகுதியினை தேர்ந்தெடுத்தால் எந்தவித தடையுமின்றி முழுநீள திரைப்படத்தையும் பார்க்கலாம்…

ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட மெகா வீடியோ உதவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆர்வத்துடன் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கும்போது 72 நிமிடங்களுடன் வீடியோ நின்று சலிப்பை ஏற்படுத்தும்.. இதனை தவிர்க்க இயலாதா என கேட்பவர்களுக்கு..இதோ எளிய முறை.
  • நீங்கள் பார்க்க விரும்பும் மெகாவீடியோவின் url ஐ கோப்பி செய்து கொள்ளவும்.

  • பிறகு http://ezywatch.com/ என்ற தளத்திற்கு செல்லவும்.
  • படத்தில் காட்டியுள்ள பகுதியில் நீங்கள் copy செய்த url ஐ Paste  செய்து Watch என்ற பொத்தானை அழுத்தவும்.

  • அடுத்து படத்தில் காட்டியுள்ளபடி Watch Movie on Free player என்னும் பகுதியினை தேர்ந்தெடுத்தால் எந்தவித தடையுமின்றி முழுநீள திரைப்படத்தையும் பார்க்கலாம்…

ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?

சமூக வலைப்பின்னல்களில் முதன்மையான Facebook  தளத்தை இணையத்தில் உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது…இதன் மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களை நாம் எளிதில் பெற முடிகிறது… அவர்கள் தங்களின் மொபைல் எண்களை தங்களது Profile பக்கத்தில் பகிர்கின்றனர்.அவ்வாறு பகிரப்படும் அனைத்து நண்பர்களின் மொபைல் எண்களையும் ஒரே இடத்தில நாம் காண முடியும்.. கணினியில் மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருந்தே இச்சேவையினைப் பெறலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களது பயனர் பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால் போதுமானது.
இங்கே சொடுக்கவும் (Click here)

உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…

குழந்தைகள் இருந்தாலே வீட்டில் நேரம் போவது தெரியாது… அவர்கள் செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் நில்லாமல், அவர்களின் புத்திசாலித்தனம் நம்மை வியக்க வைக்கும்… பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என எவ்வளவோ வசதிகளை செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புதுவிதமான விளையாட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன… அந்த கவலையை போக்க இதோ ஒரு அருமையான இணையதளம்… இந்த இணையதளத்தில் பெற்றோர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து தங்கள் குழந்தைகளை வழி நடத்தலாம்.. இவ்விணையத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொம்மைகளை தேர்ந்தெடுத்து அதனை தனக்கு பிடித்தமான அமைப்பில் வடிவமைத்து கொள்வதுடன் நில்லாமல், அதனை பிரிண்ட் செய்து வைத்துகொள்ளலாம்.. அவர்களின் பொழுதை போக்கும் விதமான வீடியோக்கள், விளையாட்டுக்கள் இப்படி நிறைய உள்ளன… கீழே உள்ள இணைப்பினை சொடுக்கி அந்த இணையத்திற்கு செல்லலாம்…

இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்!இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது. 70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய எந்திரன் இந்தி பாடல்கள் வரை உள்ளது. இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான சேவைகளை இன்னும் வழங்கவில்லை.. எனினும் எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக. இணையதள முகவரி: http://www.google.co.in/music/



வியாழன், 7 அக்டோபர், 2010

தா‌ய்மா‌ர்களு‌க்கு பூ‌ண்டு அவ‌சிய‌ம்

குழ‌ந்தை பெ‌ற்ற ப‌ெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம். எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர். பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

சமூக அச்சம் எ‌ன்பது..

ஆ‌ஸ்துமா‌வி‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.

இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.

பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.
 

தமிழ் நாடு ஒரு சிறப்பு பார்வை

         jkpo;ehL xU rpwg;G ghu;it


jiyefuk;        :    nrd;id
gug;G             :    130058.rJu fpNyh kPl;lh;
kf;fs; njhif     :    62110839 (2001)
nkhop                :    jkpo;
Mz;fs;          :    31268654
ngz;fs;          :    30842185
kf;fs; neUf;fk;        :    478 (xU rJu fpNyh kPl;lUf;F 2001)
vOj;jwpT ngw;Nwhh;  :    40624398 (73.47 % )
Mz;fs;          :    22847735 ( 82.33 % )   
ngz;fs;          :    11776663 ( 64.55 % )
gpwg;G tpfpjk;      :    19.3 % (1000 NgUf;F 2001 )
,wg;G tpfpjk;      :    8 % (1000 NgUf;F 2001 )
fpuhkq;fs;         :    16317
efuq;fs;          :    832
ruhrhp tho;ehs;     :    Mz; - 64 - 85 ngz; - 65 - 80
jpUkz taJ      :    Mz; - 25  ngz; - 21
fhy epiy            :    8.4 42.6 C ( rkntspg; gFjp )
                :    3.0 30.5 C ( kiy thoplq;fspy; )
ruhrhp kioasT       :    979.3 ,ay;ghdJ 785.4 cs;s gb                           ( 2000-2001 )

flw;fiu ePsk;     :    1076 fp . kP ( 2000-2001 )
khefuhl;rpfs;      :    10 (nrd;id jpUr;rp kJiu Nfhit
:    Nryk; jpUney;Ntyp <NuhL jpUg;Gh;     : NtYhh; Jhj;Jf;Fb )
rKf eyk;            :    tajhNdhh; ngd;\d; - 1085360
:    Gul;rpj; jiyth; vk; [p Mh; rj;JzT    ikak; - 41057 (2000 2001 )
khtl;lq;fs;       :    32
jkpo; NgRNthh;     :    41452000 ( 74.20 % ) ( 1991 )
nkhj;j tdg;gug;G       :    228614.66 rJu fp .kP (1998 1999 )
nkhj;j ghrdg;gug;G  :    6519109 n`f;Nlh; ( 1999 2000 )
nkhj;j kpd;rhu
cw;gj;jp          :    41763 kpy;ypad; myfpy; ( 2000 2001 )
rpW njhopy;fs;     :    32658 ( 2000 2001 )
czT gaph; gUg;G  :    4820000 n`f;Nlh; ( 1999 2000 )
ghy; cw;gj;jp      :    17.04 mjpfk; 16.93 FiwT yl;rq;fspy;
ghy; gz;izfs;        :    20
(Gjpjhf fpU\;zfphp khtl;lk; 2003 etk;gh; 19- y; cjakhfpaJ)
         

                                njhlUk;……….



புதன், 6 அக்டோபர், 2010

3 gp video

அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த

ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.  மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo)  பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில்  5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30  நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்