சனி, 30 அக்டோபர், 2010

இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை

பார்த்தேன் ;ரசித்தேன் என்பதோடு இணையத்தில் யாரும் நிறுத்திக்கொள்வதில்லை.பார்த்து ரசித்ததை பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றனர்.
செய்திகள் மற்றும் கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதற்கு சுலபமான வழிகள் இருக்கவே செய்கின்றன.இமெயில் மூலம் அவற்றை அனுப்பி வைக்கும் வசதி அநேகமாக இந்த இணைய பக்கத்திலியே இருக்கலாம்.புகைப்படங்கள் வீடியோ போன்றவற்றையும் கூட சுலபமாக பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் சில நேரங்களில் நாம் பார்க்கும் இணையதள‌ பக்கத்தை அல்லது அதன் ஒரு பகுதியை அப்படியே பகிர்ந்து கொள்ள விரும்பும் போது தான் சிக்கல்.
ஒன்று அந்த‌ ப‌க்க‌த்தில் உள்ள‌ காட்சியை விள‌க்கும் வ‌கையில் குறிப்புக‌ளை அனுப்ப‌ வேண்டும் .அல்ல‌து இணைய‌ ப‌க்க‌த்தை க‌ட் செய்து பின்ன‌ர் போட்டோஷாப்பில் உள்ள‌ பையின்ட் வ‌சதியை ப‌ய‌ன்ப‌டுத்தி அத‌ன் தோற்ற‌த்தை சேமித்து அனுப்ப‌ வேண்டும்.
ஆனால் இனி இப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டாம்.இத‌ற்காக‌ என்றே ஒரு சேவை இருக்கிற‌து.
ஓவ்லி டாட் காம் என்னும் இணைய‌த‌ள‌ம் இந்த‌ சேவையை வ‌ழ‌ங்குகிற‌து.எந்த‌ இணைய‌ ப‌க்க‌த்தை ப‌கிர்ந்து கொள்ள‌ விருப்ப‌மோ அத‌னை ஸ்கிரின்ஷாட்டாக‌ சிறைப்பிடித்து அப்ப‌டியே ந்ண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி விட‌லாம். தேவைப்ப‌ட்டால் குறிப்புக‌ளை எழுதியும் அனுப்ப‌லாம்.
இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எளிது.உறுப்பின‌ராக‌ ப‌திவு செய்து கொண்டு டெஸ்க‌டாப் கிள‌ய‌ன்டை ப‌திவிற‌க்க‌ம் செய்து கொண்டால் போதும்.

0 கருத்துகள்: