சனி, 30 அக்டோபர், 2010

இங்கே சொடுக்கவும்.....

ஒரு வரி கருத்து:இறைவனுக்கு அஞ்சுங்கள். அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனை கண்டு அஞ்சுங்கள்

நண்பர்களே சமீப காலமாக வலைப்பூ எழுதும் நபர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் அதில் பலர் நல்ல சிந்தனைகளையும், தொழில்நுட்ப தகவல்களையும் இன்னும் கவிதை, இலக்கியம் என எழுதுகிறார்கள் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் அவர்களுக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்,பொதுவாகவே பதிவுலகை பொருத்தவரை புதிய பதிவர்கள் மற்றவர்கள் சிரத்தையில் படுவதில்லை ஒரு வேளை நல்ல பதிவுகள் எழுதினாலும் அவர்கள் புறக்கனிக்கபடுகிறார்கள் அல்லது தள முகவரி மறந்து விடுகிறார்கள் ஒருவேளை நீங்கள் எழுதுவது படிக்கும் வாசகருக்கு பிடிக்குமேயானால் அவர் அதை புக்மார்க் செய்துகொள்ளும் வசதி உங்கள் தளத்திலே இருக்குமேயானால் ஒருவேளை உங்கள் எல்லா பதிவுகளும் அவரை சென்றடைய வாய்ப்பு இருக்கிறதல்லவா.

நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியான வாசகர்கள் தமிழிஷ் அல்லது பிற திரட்டிகள் வழியாக வருகிறார்கள் சரி ஒரு பதிவற்கு ஏகப்பட்ட பாலோவர்கள் இருக்கிறார்கள் மின்னஞ்சல் வழியாக படிக்கும் வாசகர்கள் என இருப்பார்கள் உண்மையில் அத்தனை நபர்களும் ஒரு பதிவை படிப்பார்களேயானல் சராசரியாக அந்த பதிவிற்கு எத்தனை வாக்குகள் விழவேண்டும்? எத்தனை கருத்துரைகள் வரவேண்டும்? என் தளத்தையே எடுத்துக்கொள்ளுங்கள் 20 பாலோவர்கள் இருக்கிறார்கள் இந்த இருபது நண்பர்களும் வாக்கு அளித்தால் என் எல்லா பதிவுகளிலும் 20 வாக்குகளும் 20 கருத்துரைகளும் வரவேண்டுமே? ஆனால் நடப்பது என்ன சில பதிவுகள் பெறும் வாக்கு மிக குறைந்தாக இருக்கும் அதிலும் சமீபத்திய பதிவுகள் என் வாக்கு மட்டுமே இருக்கும் இதற்கு என்ன காரணம் ஏதோ ஒரு தகவல் பிடித்து போய் நம் தளத்தில் நண்பர்களாக இனைந்துவிடுவார்கள் பின்னர் அவர்கள் இனைந்த தளத்தையும் மறந்து போயிருப்பார்கள் ஒரு வேளை அவர்கள் பதிவு எழுதுபவர்களாக இருந்தால் அவரின் பிளாக்கர் திறக்கும் பொது தெரியும் அதிலும் நம் தளத்தில் மட்டுமே இனைந்திருக்கிறார் என்றால் பிரச்சினையில்லை நம் பதிவை பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது ஆனால அவர் ஒரு 20 தளத்தில் இனைந்திருக்கிறார் என யோசித்து பாருங்கள் நம்முடைய தளத்தை அவர் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?

நம் தளத்தில் அவர் கணினியில் புக்மார்க செய்வதற்கான வசதி ஏற்படுத்திகொடுத்தால் ஒருவேளை நம் பதிவை படிக்க விரும்பும் வாசகர்கள் அதை புக்மார்க் செய்துகொள்வார்கள் (இந்த வசதிதான் எல்லா பிரவுசர்களிலும் இருக்கிறதே? உண்மைதான் ஆனால் யாரும் அதை ஒரு வேளையாக செய்வதில்லையே அதற்கான நேரம் செலவழிப்பதையும் விரும்புவதில்லையெ!)

இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் எப்படி புக்மார்க் நிறுவுவது என பார்க்கலாம்
இந்த புக்மார்க வசதி உங்களுக்கு பிடித்த இடத்தில் Add Gadget வழியாக நிறுவிக்கொள்ளலாம் இனி வழக்கம்போல Dashboard சென்று Layout –ல் Add Gadget என்பதை கிளிக்கி அதில் HTML/JavaScript என்பதை தேர்ந்தெடுத்து பின்வரும் HTML/JavaScript கோடினை அங்கு பேஸ்ட் செய்து பெயர் கொடுக்காமல் சேமிக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் புக்மார்க் செய்யும் வசதி வந்திருக்கும்



===========================================================================


இனி புக்மார்க் ஸ்கிர்ப்ட் தரவறக்கி நான் கீழே கொடுத்துள்ள இடங்களில் உங்கள் விருப்பம் போல மாற்றங்கள் செய்துகொள்ளவும்


===========================================================================

நீங்கள் மாற்றவேண்டிய இடங்கள்

http://www.idimulhakkam.blogspot.com/ (இதற்கு பதிலாக உங்கள் தள முகவரி)

Puriyatha Kirukkalkal (இதை ஆங்கிலத்திலேயே எழுதவும் எழுத்துரு பிரச்சினை வருகிறது)

#FF0000 (உங்களுக்கு பிடித்தமான கலர்)

Add Bookmark (புக்மார்க் செய்ய உங்கள் விருப்பம் போல)

Press (Ctrl-D) On Key Board (கீபோர்டில் (Ctrl-D) அழுத்தவும் உங்கள் விருப்பம் போல (Ctrl-D) என்பதை மாற்றவேண்டாம்)

என்ன நண்பர்களே சரியாக செய்துவிட்டீர்கள் தானே இனி உங்கள் தளத்தை திறந்து பாருங்கள் உங்கள் தளத்திற்கான புக்மார்க் இருக்கும் இனி தேவைப்படும் நபர்கள் அதை பயன்படுத்திகொள்வார்கள்

நான் இதனை இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்பு நரி, கூகுள் குரோம் மூன்றிலும் சரியாக செயல்படுகிறது இதில் நெருப்பு நரி மற்றும் கூகுள் குரோமில் (Ctrl-D) என அழுத்தி புக்மார்க் செய்ய சொல்லி இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நேரடியாக அழுத்தி சேமிக்க வசதி இருக்கும் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும்

குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

0 கருத்துகள்: