தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசின் செயல்முறையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவே கொண்டுவரப்பட்டது. சட்டம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டுகளாகியும், தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட முறையே பெரும் பிரச்சினையாகியுள்ளது. தகவல் அறியும் முறை எப்படி ஒழுங்கற்றுள்ளது என இச்சட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் தலைமைத் தகவல் ஆணையரின் சமீபத்திய நியமனத்தால், வெளிப்படைத்தன்மை மேலும் மேசமாகியுள்ளது.
2010 பிப்ரவரியில் பதினைந்து தனி நபர்களும் சமூக அமைப்புகளும் தகவல் ஆணையர் நியமனத்தில் பொதுமக்கள் கருத்தறியும் ஆலேசனை நடத்த வேண்டும் எனத் தலைமைச் செயலரையும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலரையும் கடிதம்மூலம் வலியுறுத்தினர். எதுவுமே நடக்காததால், நான் ஜூன் 2010இல் நிர்வாகச் சீர்திருத்தச் செயலரைப் பேய்ப் பர்த்தேன். அது தொடர்பாக நடைமுறை ஏதேனும் முன்மொழிந்தால், அவர்கள் அதைப் பரிசீலிப்பர்கள் என்றார் அவர். இந்தியப் பொது நிர்வாகக் கழகம்
4 ஆகஸ்டு 2010இல் தேசிய அளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழ்நாட்டின் நிர்வாகச் சீர்திருத்தச் செயலரும் பங்கேற்றார். அந்த ஆலேசனைக் கூட்டத்தில் தகவல் ஆணையர்கள் நியமனத்தில் விண்ணப்பங்கள் கோரி விளம்பரம் செய்தல், பரிந்துரைப்புகள், வடிகட்டும் முறைமை, பொதுமக்கள் கருத்தறிதல் என ஒரு முறை எட்டப்பட்டது (முன்வைக்கப்பட்டது, வெளிப்பட்டது, முடிவுசெய்யப்பட்டது.)
தலைமைச் செயலர் திரு. கே. எஸ். ஸ்ரீபதி அடுத்த தலைமைத் தகவல் ஆணையராகலம் என 5 ஆகஸ்டு 2010 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியயிற்று. வெளிப்படைத் தன்மையைப் பொறுத்தளவில் ஸ்ரீபதியின் வரலாறு கேள்விக்குரியது. கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகமும் தமிழ்நாடு மநிலக் கண்காணிப்பு ஆணையமும் ஆகஸ்டு 2008இல் தகவல் அறியும் தகவல் அறியும் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் திரு. ஸ்ரீபதிதான் கண்காணிப்பு ஆணையர். அரசங்கத்துக்கு விருப்பமில்லாவிட்டாலும் கண்காணிப்பு ஆணையத்தின் வற்புறுத்தலாலேயே இந்த விலக்களிக்கப்பட்டது எனத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தின. மிகச் சமீபத்தில், தமிழ்நாடு மநிலத் தகவல் ஆணையம் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடாத அரசு அதிகாரிகளின் பட்டியலைத் தருமாறு அரசைக் கேட்டது. அப்போது தலைமைச் செயலராக இருந்த ஸ்ரீபதி அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஸ்ரீபதியின் தகுதி மட்டுமின்றி ஒட்டு மொத்த நியமன முறையும் மர்மமானதாக உள்ளது. தலைமைத் தகவல் ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அரசங்கத்திடமிருந்து அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை. பரிசீலனையிலிருந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை. ஆகஸ்டு 5ஆம் தேதி செய்தி வெளியான பிறகு மீண்டும் ஆகஸ்டு 12ஆம் நாள் நியமன முறைமையை வெளிப்படையானதா வைத்திருக்குமாறு முதலமைச்சருக்கும் விருப்பம்பேலும் வெளிப்படையற்ற முறையிலும் நியமனம் செய்யப்படுவதை எதிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவற்றுக்கு எந்தப் பதிலும் இல்லை. முதலமைச்சர், அவரால் நியமனம் செய்யப்பட்ட ஓர் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய அப்பதவிக்கான தேர்வுக் குழு ஆகஸ்டு 23ஆம் தேதி கூடும் என டெக்கன் க்ரானிக்கிளில் ஆகஸ்டு 18ஆம் நாள் செய்தி வெளியயிற்று. அதற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டோம். ஆகஸ்டு 22 அன்று அவரைச் சந்தித்துத் தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்து எங்கள் கவலையைத் தெரிவித்தோம். தேர்வுக் குழு கூடுவதற்கு முன்பே, தலைமைத் தகவல் ஆணையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் வெளியானதையும் சுட்டிக்காட்டினோம். எங்கள் கவலையைப் பகிர்ந்துகொண்டதுடன், அந்தப் பதவிக்குப் பரிசீலனையிலிருந்த நபர்களின் பெயர்களையும் விவரங்களையும் தனக்களிக்குமாறு அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்பதவிக்கான தேர்வுக் குழு ஆகஸ்ட் 23 அன்று கூடியது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதில் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் முடிந்த பின்னரும் யர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்னும் விபரம் தெரியவில்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பெயர் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அரசு ஊடகங்களுக்குத் தெரிவித்தது. தலைமைத் தகவல் ஆணையர் மறுநாள், செப்டம்பர் 1 அன்று, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பர் என அரசு செய்திக் குறிப்பு ஒன்றை ஆகஸ்ட் 31ஆம் நாள் வெளியிட்டது. மீண்டும் யார் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனச் செ?ல்ல மறுத்துவிட்டது. ஜெயலலிதா தான் முதலமைச்சராக இருந்தபோது அப்பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் தராததால், தற்போது அவருக்கு அவர் கேட்ட விவரங்கள் தரப்படவில்லை என மறுநாள் முதலமைச்சர் விளக்கம் கூறினார். தான் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் அவ்விவரங்களைக் கேட்டிருந்தால் அவை தரப்பட்டிருக்கும் எனவும் அப்போது அவை கோரப்படாததால் கொடுக்கப்படவில்லை; தான் தற்போது அவற்றைக் கோருவதால் தரப்பட வேண்டும் என ஜெயலலிதா அதற்குப் பதிலளித்தார். மேலும், தலைமைத் தகவல் ஆணையரைத் தேர்ந்ததே சட்டத்துக்குப் புறம்பானது என்றார்.
தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தில் சற்றும் வெளிப்படைத் தன்மை இல்லாததை எதிர்த்து வேறு இருவரும் நானும் ராஜ்பவனுக்கு முன்னால் (வெளியே) பேராடினோம். இரண்டு நிமிடங்கள்கூட நங்கள் அங்கே இருந்திருக்கமாட்டோம். அதற்குள் பேலீசர் எங்களைக் கிண்டிக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றார்கள். எங்கள்மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. பிற்பகலில், நங்கள் காவலில் வைக்கப்படவுள்ளதாகவும் அதற்காகச் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லத் தங்கள் வாகனத்தில் ஏறுமாறு கூறினர். ஆனால் நங்கள் வாகனத்தில் ஏறியதும் வேளச்சேரிக் காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். நாள் முழுவதும் எங்களை அங்கேயே வைத்திருந்தார்கள். ஏன் எங்களை அங்கே வைத்திருந்தார்கள் என எந்த விவரமும் தரவில்லை. அதனால் நங்கள் எங்கே இருக்கிறோம் என எங்கள் நண்பர்கள் சில மணிநேரம் கவலையிலிருந்தார்கள். மாலை 5:30 மணிக்கு மீண்டும் எங்களைக் கிண்டிக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விடுதலை செய்தார்கள். அரசின் நோக்கம் தெளிவாக உள்ளது. அது வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த விரும்பவில்லை. கீழ்க் காணும் விஷயங்கள் அதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
1. அப்பதவிக்கு இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் தேர்வுக் குழு கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது.
2. மேசமான வெளிப்படைத்தன்மை வரலாற்றைக் கொண்ட நபரைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசு மூழ்கடிக்கவே விரும்புவது தெளிவாகிறது.
3. தேர்வுக் குழு கூடிய பிறகும், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை அரசு அறிவிக்கவில்லை.
4. பரிசீலனையிலிருந்தவர்கள் பற்றிய விவரங்களைத் தேர்வுக் குழுவின் சட்டபூர்மான உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு தரவில்லை.
5. தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்புகூட அவர் பெயரை அறிவிக்க விரும்பவில்லை.
6. மூன்று பேர் கொண்ட குழுவின் அமைதியான எதிர்ப்பைக்கூட அனுமதிக்காமல் அவர்கள் ஒரு நாள் முழுக்கக் காரணமின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள்.
தகவல் அறியும் சட்டத்தைப் பொறுத்து அரசின் அணுகுமுறை இப்படியிருந்தால், அச்சட்டம் பயனளிப்பது மிகக் கடினம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக