அந்த மனநலக் காப்பகத்தில் பணியாளர்கள் மேரியை கட்டுப்படுத்த சிரமப்பட்டு கொண்டு இருந்தார்கள். கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் மேரி துஆக்கிப்போட்டு உடைத்து கொண்டிருந்தாள். நர்ஸ் ஓடி வந்து மனதை அமைதிப்படுத்தும் தூக்க மருந்து ஊசியை கையில் செலுத்தினாள். மேரி கட்டுக்குள் வந்து தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
மேரிக்கு லேசான மூளைக்கோளாறு இருந்தது. அவள் மகன் ஜோயல் ஆப்ரகாம்தான் தன் தாயாரை இந்த மன நலக் காப்பகத்தில் சேர்ந்திருந்தான். ஜோயல் பின்லாந்தின் கீர்த்தி பெற்ற இசைக்குழத் தலைவன். அவன் இசை நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி இந்த àலகை வலம் வந்து கொண்டிருந்தான்.
எழுபத்தைந்து வயதை தாண்டிவிட்ட தாயார் மேரி. தன் வீட்டில் தனிமைச் சிறையில் வாடிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு உடல் உபாதைகள் ஏதாவது வந்தால் மகன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதேனும் நர்ஸில் ஹோமில் கொண்டு போய் அம்மாவை படுக்க வைத்து விடுவான். நர்ஸிங் ஹோமில் இருகு“கும்போது கூட பார்க்க வரமாட்டான். தாயை பராமரிக்க வேண்டிய பொறுப்பை தட்டி கழித்து விட்டு மகன் அடிக்கடி அவளை ஆஸ்பத்திரியில் கொண்ட போய் தள்ளிவிடுகிறான் என்ற தவறான கணிப்பு அம்மா மேரியின் மனதில் உருவெடுத்துவிட்டது. வேண்டு என்றே அவன் தாயை பார்க்க வராமல் இல்லை. இசைக்குழு பயி வேலைகள் நிமித்தமாக தான் அப்படி இருந்தான்.
நர்ஸிங் ஹோமில் இருந்த நேரங்களில் எல்லாம் சிறையில் இருப்பது போல் உணர்ந்தாள் மேரி. கடைசியில் வுள் லேசான மன நோயாளியாகவும் மாறிவிட்டாள். வீட்டுக் போக வேண்டும் என்று அடம்பிடித்தபடி மருத்துவமனையில் இருந்த சாமான்களை எல்லாம் போட்டு உடைத்து கொண்டு இருந்தாள். இப்போது செடேடிவ் கெடுத்ததும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.
பிரான்சு தேசத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த ஜோயலை பத்திரிகை நிருபர் எம்மா பேட்டி கண்டாள். காதல் மலர்ந்தது. எம்மா நாம் இருவரும் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழலாம். எங்கள் கிராமத்தின் பண்ணை வீட்டுக்கு வந்து விடு என்றான் ஜோயல்.எம்மா பண்ணை வீட்டுக்கு வந்து விட்டாள். அம்மாவை மனநல காப்பகத்தில் இருந்து அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தான். புதுமருமகள் எம்மா. தன் அன்னைக்கு ஆறுதலாக இருப்பாள் என்று நினைத்தான். ஆனால் மேரியோ எம்மாவை சந்தேகக் கண்ணுடன் பார்த்தாள். மகனுக்கும் தனக்கும் இடையே இருக்கும் தடுப்ப சுவர் என்று எம்மாவை நினைத்தாள். எம்மாவிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாள். சரியாக பேசுவதும் இல்லை. அன்று காலை எட்டு மணி இருக்கும். தன்னை வீட்டில் இருப்பவர்கள் மறுபடியும் மனநலக் காப்பகத்தில் கொண்டு போய் தள்ளிவிடுவார்கள் என்று ஏனோ மேரிக்கு தோன்றியது. படுக்கையில் இருந்து எழுந்தாள். விடுவிடுவென்று வெளியே வந்தாள். வாட்டர் டேங்கின் ஏணிப்படி வழியாக ஏறி டேங்கின் உச்சிக்கு வந்து விட்டாள். நான் இங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளபோகிறேன். என்று காட்டுக்கூச்சல் போட்டாள். வீட்டு வேலைக்காரர்கள் ஓடி வந்து எம்மாவிடம் தகவல் சொன்னார்கள்.
எம்மா திகிலுடன் அங்கே ஓடி வந்தாள். அம்மா என்ன காரியம் செய்கிறீர்கள். உங்களுக்கு இங்கே என்ன குறை? நீங்கள் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? என்னிடம் யாருக்கும் அன்பு இல்லை. என்னை வீட்டில் வைத்து கொள்ள பிடிக்காமல் நீங்கள் எல்லோரும் என்னை மருத்துவமனையில் கொண்டு போய் தள்ளிவிடுகீறர்கள். அன்பு இல்லாத வீட்டில் நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்.
அம்மா என் தாயை நேசிப்பது போல நான் உங்களை நேசிக்கிறேன். உங்களை யாரும் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் தள்ளமாட்டார்கள். ஜோயல். என்னை நம்பி உங்களை என்கண்காணிப்பில் விட்டு விட்டு உலக சுற்றுப்பயணம் போய் இருக்கிறார்.நீங்கள் இப்படி எல்லாம் முரண்டு பிடித்து ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் நான் மறுபடியும் எப்படி ஜோயல் முகத்தில் விழிக்க முடியும். தயவு செய்து கீழே இழங்கி வாருங்கள்... சத்தியமாக உங்களை நர்சிங் ஹோமுக்கு அனுப்பமாட்டோம் என்று எம்மா கண்ணீர்விட்டாள்.
ஒருவாளாக, மேரி கீழே இறங்கி வந்தாள். இதற்கிடையில் எம்மா கருவுற்றாள். தன் மருமகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் மேரியின் போக்கே மாறிவிட்டது. மேரியின் முகத்தில் ஒரு புதுமலர்ச்சி தோன்றியது. முன்பெல்லாம் எம்மாவிடம் வேண்டும் என்றே முரட்டுத்தனமாக நடந்து கொண்ட மேரி எம்மாவிடம் கூடுதல் அன்புடன் நடந்து கொள்ள தொடங்கினாள்.
மகளே நீ வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட வேண்டும். நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். என்றெல்லாம் மேரி அன்புடன் சொன்னாள். புதிதாக பிறக்கபோகும் குழந்தைக்காக ஸ்வெட்டர் பின்னத்தொடங்கினாள். அம்மா குழந்தை வயிற்றில் உதைக்கிறான் பாருங்கள் என்பாள் எம்மா. மேரி அன்புடன் மருமகளின் வயிற்றை தடவிக்கொடுப்பாள். ஜோயல் தன் இசைக்குழுவில் இருக்கும் வயலின் வித்வாம்சனி விர்ஜினியாவிடம் நெருக்கமாக பழகத் தொடங்கினான். ஆரம்பத்தில் ரகசியமாக இருந்த உறவு சீக்கிரமே அம்பலமாகிவிட்டது. எம்மாவின் காதுக்கும் செய்தி எட்டியது. ஜோயலிடம் எம்மா சண்டை போடத் டங்கினாள். ஜோயலின் தாயார் மேரியும் மகனிடம் கடுமையாக நடந்து கொள்ள தொடங்கினாள்.
இசைக்குழு ஒத்திகைகள் நடக்கும் ஹாலுக்கு ஒருநாள் சென்று எம்மா வயலின்காரி விர்ஜினியாவிடம் கடுமையாக சண்டைபோட்டாள். ஜோயல் மன அமைதி இழந்து தவித்தான். விர்ஜினியாவிடம் கொண்டுள்ள நெருக்கமானஉறவை தொடருவதா? வேண்டாமா? என்று கடுமையாஜன மனப்போராட்டம். எம்மாவின் சுடு சொற்களை விட தாயாரின் கடுமையான வார்த்தைகளே ஜோயலை மிகவும் பாதித்தன.
இதற்கிடையில எம்மா பண்ணை வீட்டை விட்டு வெளியேறித் தன் தாய் வீட்டுக் சென்று விட்டாள். மாமியார் மேரி மீண்டும் தனி மரமானாள். தனிமை தன்னை கொத்தி பிடுங்க தொடங்கியதும் ஒரு நாள் வாடகை வண்டி பசிக் கொண்டமேரியே மனநலக் காப்பகத்திற்கு போனாள். டாக்டர் எனக்கு மனநிலை சரியில்லை. என்னை இங்கே அட்மிட் செய்து கொள்ளுங்கள் என்றார். ஆஸ்பத்திரியே வேண்டாம் என்று முரண்டு பிடிக்கும் மேரி தானே வலிய வந்து மருத்துவமனையில் சேருவதை எண்ணி டாக்டர் பரிதாபப்பட்டார். ஜோயல் நொந்து போனான். தாரத்தை பிரிந்திருப்பதை பொறுத்து கொண்ட வுன் மனம் தாயின் பிரிவை எண்ணித் தவித்தது.
ஒரு மாதம் சென்றிருக்கும் கடுமையான மனப்போராட்டம். விர்ஜினியா நம் காதல் விளையாட்டை இன்னும் தொடர வேண்டுமா என்று தன் புது காதலியிடம் பரிதாபமாக கேட்டா ஜோயல். உங்கள் வீட்டு விவகாரங்களை எல்லாம் தான் ஏற்கனவே என்னிடம் சொன்னீர்களே. உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருகு“கிறது. உங்கள் மனைவியின் அன்புக்காகவும் உங்கள் தாயாரின் மகத்தான அன்புக்காகவும் நான் உங்களை விட்டுக்கொடுக்கிறேன் என்று ஒரு உறுதியுடன் சொன்னாள் விர்ஜினியா. ஜோயல் எம்மாவின் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசத் தொடங்கியது. கிழவி மேரியும் வீடு திரும்பிவிட்டாள். அதன் பின்னர் மீண்டும் மருத்துவ மனைக்கு போக வேண்டிய அவசியம் மேரிக்கு ஏற்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக