திங்கள், 8 நவம்பர், 2010

புத்தக வாசிப்பில் உலகை காணலாம்

தெற்கு ஆசியாவிலேயே இப்படியொரு நூலகத்தை காணமுடியாது என்று தமிழக அரசு நிதியமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் பாராட்டியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அறிஞர் அண்ணாவின் 102வது நூற்றாண்டு பிறந்த நாள் 15.09.2010 அன்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் சர்வதேச தரத்தில் நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமைய வித்திட்டவர். அவரது கோரிக்கையை ஏற்று பார் போற்றும் நூலகம் ஆக்கிட வடிவமைப்பு மற்றும் செய்லதிட்டங்களுக்கான சிறப்பு ஆலோசனைகளை இடையறாது முதல்வர் கருணாநிதி வழங்கியிருக்கிறார். அவற்றை செய்ல்படுத்திட தமிழக பளளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் நூலக தனி அலுவர் திரு.ந.ஆவுடையப்பன், தமிழக அரசின் பொதுநூலக இயக்குநர் திரு.அறிவொளி ஆகியோர் முனைந்து பணியாற்றியிருக்கின்றனர்.
8 ஏக்கர் பரப்பு, 3.75 லட்சம் சதுர அடியளவில் பயன்பாடு, 182 கோடி ரூபாய் செலவு, 8 மாடிகள் தரைத்தளத்தின் மேலாக
1200 பேர் அமரத்தக்க அரங்கு, 800 பேர்களுக்கான  திறந்தவெளி அரங்கம், 151 பேருக்கான கருத்தரங்கு மண்டபம், 136 பேர்களுக்கான இலக்கிய சந்திப்பு கூடம், 180 பேர்கள் வரை உட்கார்ந்து சாப்பிட வசதியான உணவகம். இப்படியே இன்னும் பல சிறப்பசம்சங்கள்.. தற்போது 4 லட்சம் நூல்களோடு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் மூ“னறு ஆண்டுகளில் 12 லட்சம் புத்தகங்கள் கொண்டதாக இந்நூலகம் பயன்பாட்டிற்கு வரக்கூடும். உலகத்தரத்தின் படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற பசுமை க்கட்டிடமாக தங்க சான்றிதழ்  (தமிழக தலைமை செயலகம்போல்) பெற்றுள்ளது.
முதல்வர் கருணாநிதி அவர்களின் கனவுத்திட்டம் என்று பலர் பாராட்டினாலும், சென்று பார்த்தால், நனவில் இருந்தாலும் கனவிலிருந்து விடுபட முடியாதது போன்ற உணர்வைத்தரும் வனப்பான வடிவமைப்பு.. வியப்புக்கு மேல் வியப்பாக இருக்கவே நூலகத்தின் சிறப்பு அலுவலர் ஆவுடையப்பன் அவர்களை சந்தித்தபோது, அவர் தெரிவித்த பல அம்சங்கள் இன்னும் பிரமிக்க வைத்து விட்டது. அவரிடம் ஒரு நேர்காணல்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் இது. எட்டு ஏக்கர் பரப்பில் எட்டு மாடி கட்டிடமாக பிரமிக்க வைக்கிறது. இத்தகைய பெரிய நூலக அமைப்பு பணியை தொடங்கும்போது உங்களுக்கு ஏதேனும் மலைப்பு இருந்ததா?
முதலில் சற்று தயக்கம் இருந்ததது உண்மை தான். ஆனாலும் சிங்கப்பூரில் உள்ளது போல் நூலகத்தை தமிழ்நாட்டிலும் மகத்தான நூலகமாக உருவாக்கவிருப்பதில் பெருமிதமும், உற்சாகமும் ஏற்பட்டது. முதல்வரின் ஆலேசானைகளின்படி பள்ளிக்கல்வி அமைச்சருடன் செயலாற்றுவதால் உண்டான ஈடுபாடு எந்தவகையிலும் சோர்வு அடைய செய்யல்லை.

குறைந்தகால  அவகாசத்தில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உற்சாகமானஅனுபவங்கள் உண்டா?
பல உண்டு. நூலகத்தில் தரையில் நடந்தால் சத்தம் கேட்குமே என்பதால் கார்ப்பெட் (மெத்தைத்துணி விரிப்பு) போடவேண்டும் என்று கருதினேன்.  தயங்கியபடியே அதனை  வெளிப்படுத்தியபோது நிதியமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் முதல்வர்  அனைவரும் சம்மதித்து  உற்சாகப்படுத்தியதால் உண்டான உத்வேகம்  இனிய அனுபவம். இன்னும் பலவிதங்களிலும் முயற்சிகள் முனைப்பாக நடந்திட அருமையான சந்தர்ப்பங்கள் இருந்தன. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராக பெறின் என்ற திருக்குறளின் கருத்துக்கள் நடைமுறை உண்மையாக இருந்ததை உணர்ந்தேன்.

எல்லாதரப்பு வாசகர்களையும் திருப்திப்படுத்தும் வண்ணம் இந்த நூலகம் அமைந்திருக்கிறது என்று கருதுகின்றீர்களா?
நிச்சயமாக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளான பார்வை திறற்றவர்களுக்கு பிரெயில் புத்தகப்பிரிவு. முதல்மாடியில் குழந்தைகளுக்கான பிரிவு, இயற்கை சூழல், கணினி, பொழுதுபோக்கு விளையாட்டு வசதி, நாட்டியம், நாடகம், சொற்பொழிவு பயிற்சி செய்து கொள்ளத்தக்க மேடை அரங்க அமைப்பு. இரண்டாவது மாடியில் தமிழ் நூல்கள். மருத்துவக்கல்வி மாணவர்களுக்கு மட்டுமின்றி, மருத்துவ மேதைகளும், வந்து, நாளுக்கு நாள் வளர்ச்சி பெறுகின்ற மருத்துவ நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உயர்தர நூல்கள். இது போல்  அனைத்து துறைகளிலும் உயர்கல்விக்கான  வெளிநாட்டு நூல்கள் உட்பட.. ஆராய்ச்சி மாணவர்கள் இருபத்தைந்து பேர்கள் வரை வந்து தங்கி படித்திடதக்க தங்குமிட வசதி. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இ புக்ஸ், இ. பத்திரிக்கைகளை படிக்க முடியும்.
வெளிநாட்டில் உள்ள உயர்தர நூலகங்களுடனும் தொடர்பு கொண்டிடத்தக்க  வகையில்  யுனெஸ்கோ நிறுவன ஆதரவுடன் உலக மின்னணு நூலக திட்டத்தில் இணைந்து நுந்நூலகம் செய்பட இருக்கின்றது.
தேசத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பேச்சுக்களை அவரவர்கள் குரலிலேயே ஒலிபரப்பபை கேட் வசதியுண்டு. ஒவ்வொரு தளத்திலும் வாசகர் பயன்படுத்திட இண்டர்நெட் வசதி. இன்னும் எவ்வளவோ உண்டு... 

0 கருத்துகள்: