திங்கள், 8 நவம்பர், 2010

பக்கத்து வீட்டு பக்குவம்- போர்ச்சுகீசிய சிக்கன்

போர்ச்சுகீசியர்களின் உணவில் காரத்துக்கு மிளகையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல உணவில் தக்காளிக்கு முக்கியத்துவம் அதிகம். போர்ச்சுகீசிய சிக்கன் செய்யும் முறையை கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் கேசவகுமார்.
தேவையானவை:
எலும்புடன்  கூடிய சிக்கன் -  கால்கிலோ
பெங்களூரு தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 20 கிராம்
காளான் - 60 கிராம்
ஆலிவ்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறுப்பு
மிளகுப்பொடி - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தக்காளியை லேசாக கீறி சுடுநீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்த வேண்டும். தோல் மற்றும் விதையை நீக்கி விட்டு, தக்காளியை பொடியாக நறுக்கினால் "சாஸ்' போல கிடைக்கும். வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், காளானை சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின், சிக்கனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிக்கன் வதக்கும் போதே பாதி வெந்து விடும், அதன்பின் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடைசியாக மிளகு, உப்பு சேர்த்து இறக்க வேண்டும். கடைசியாக மல்லிதழை தூவி அலங்கரிக்க வேண்டும்.
துருக்கி அரிசி கடையில் கிடைக்கும். துருக்கி அரிசி சாதத்துக்கு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.

0 கருத்துகள்: