காதலித்தால் இதயம் இடம் மாறித்துடிக்கும் இடது புறத்திலே.......என அறிவியலுக்கு சவால் விடுகிறது ஒரு பாடல். இந்த கற்பனைகள் சாத்தியமா என்று யோசிக்கும் போதே... தீவிரமான காதல் வலியை நீக்கி சுகமான துாக்கத்தை தருகின்றது மன வலி மட்டுமள்ள உடல் வலியும் மாயமாய் மறைகிறது என்கிறார் அமெரிக்க விஞ்ஞானிகள்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்காக 15 கல்லுாரி இளசுகள் தேர்வுசெய்யப்பட்டார்கள். 7 ஆண்கள் 8 பெண்கள் இவர்கள் கைகளில் சூடு போட்டார்கள் சூடு போட்ட கையோடு அவர்கள் காதலிக்கும் நபர்களின் போட்டாவைக் கையில் கொடுத்தார்கள் அதன் பிறகு அவர்களுடைய மூளையில் ஏற்படும் மாற்றங்களை எம்.ஆர்.ஜ. ஸ்கேன் மூலம் பதிவு செய்தார்கள் காதலர்களின் போட்டாவை பார்த்தபடி இருந்தவர்களுக்கு வலியே இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது காதலிப்பவர்களின் மூளை காதலிலேயே மூழ்கியிருப்பதால் அவர்களால் வலியை உணர முடியவில்லை என்கிறார் டாக்டர் மாக்கே.
சில காதல்களில் அடி கூட வாங்க வேண்டியிருக்கும் இப்படி ஒரு வசதியை இயற்கையே செய்திருப்பதால் கடவுளுக்கு நன்றி சொல்லலாம் ..... அதெல்லாம் சரி ...நண்பணின் காதலுக்காக அடி வாங்கினால் வலிக்குமா வலிக்காதா......?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக