திங்கள், 24 ஜனவரி, 2011

இண்டர்நெட்டில்





நல்லது அதிகம் கெட்டது கொஞ்சம்

சோஷியல் நெட்வொர்க்கிங் என்று சொல்லப்படும் ஆர்க்குட் , பேஸ்பக் போன்ற சமூக வலைத்தளங்களில்  எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன நல்ல எண்ணத்தில் பரிமாறப்படும் தகவல்கள் படங்களைத் திரித்து தவறாக பயன்படுத்துவோர் வெகு சிலர் தான்.அவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சக மாணவ,மாணவியை தொடர்பு கொள்ள வேண்டுமானால் இதில் போய்  பள்ளி பெயரை நாம் படித்த ஆண்டையும் பதிவு செய்தால் போதும் உங்கள் அன்றை நண்பர்களில் சிலர் கண்டிப்பாக சிக்குவார்கள் .இப்படி நண்பர்களை உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் உறவை நட்பை தொடரச்செய்ய முடிகிறது என்றால் இன்னொறு பக்கம் நம் கருத்துக்களையும் பதிவு செய்ய முடியும் பொது விசயமாக இருந்தாலும் தனிப்பட்ட விசயமாக இருந்தாலும் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்க்க இந்த பக்கங்களை பயன்படுத்துகின்றனர்.நம் ஆதங்கத்தை கொட்டவும் முடிகிறது அதே கரத்தை கொண்டவர்களின் அறிமுகமும் கிடைக்கின்றது ஆனால் பொத விசயங்களை பரிமாரிக் கொள்கின்ற போது கட்டுப்பாடு தேவை .தனிப்பட்ட விமர்ச்சனங்கள் சட்ட சிக்கல்களில் கொண்டு போய் விடும்.ப்ளாக் எனும் நம் வலைப்புக்களும் இதில் அடங்கும்.







முதல் ப்ளாக் கிரிமினல்

சைபர் க்ரைமில் எத்தனையோ விதங்கள் உண்டு கண்டபடித் திட்டித்தீர்ப்பது முதல் அடுத்தவர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது வரை சொல்லலாம் .முதன் முதலாக ப்ளாக் விஷமத்தில் இறங்கி இன்னொரு பெண்ணுக்கு அவமானத்தைத் தேடி தந்தவன் சிக்கியது  2001 ல் தான் .மனிஷ்கதுாரியா என்பவன் ரித்து என்ற பெண்ணின் பெயரை தவறாக பயன்படுத்தி ரித்து படங்களை போன் இமெயில் முகவரியைப் பதிவு செய்து ரித்து படங்களை திரித்து ஆபாசமாக வெளியிட்டான் பழிவாங்குவதற்காக இப்படி செய்தவன் சில நாட்களில் பிடிபட்டான் ப்ளாக் கிரிமினல் நடவடிக்கையில் முதன்முதலாக பிடிபட்டவன் இவன் தான்

கொட்டித் தீர்..... பழி தீர்க்காதே 

நட்பு வட்டத்திற்கு மட்டும் தெரியும் வகையில் ப்ளாக்குகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர். இந்தக் கருத்து பரிமாற்றம் நட்பு வட்டத்துடன் முடிந்து விடும் தேவையில்லாமல் சர்ச்சையை கிளம்பாது இதில் கோபம் மகிழ்ச்சி வருத்தம் எல்லாம் இருக்கும் ஆனால் பழி தீர்க்கும் நெடி இருக்காது பழி தீர்க்க ப்ளாக்குகளை பயன்படுத்தாமல் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல பயன்படுத்தலாம்  அரசியலில் லாலு முதல் நடிப்பில் அமிர்தாப் வரை பல பிரபலங்களும் ப்ளாக் வைத்துள்ளனர்  அவ்வபோது தங்களின் கருத்துக்களை பதிவு செய்கின்றனர் இப்படி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம் உறவை நட்பை பேனுவோம்

0 கருத்துகள்: