ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தமிழ் தலைமகனை ஈன்றேடுத்த எங்களின் தாயிற்கு இறுதி வணக்கம்



ஈழத்திருத்தாயின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் - எம்.கே.சிவாஜிலிங்கம்

இன்று மறைந்த தமிழீழத் தேசியத்தலைவரின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக்கிரியைகள் ஈழமக்களின் அஞ்சலிகளின் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளின் இறுதிக்கிரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துறை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 10.30 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் இவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு வல்வெட்டித்துறை, ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது மகளின் வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பூவுடல் தகனம் செய்யப்படுமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈழத்தாயின் பூவுடல் ஊரணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பகுதியில் துக்கம் அனுஷ்டித்து கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.

பார்வதி அம்மாள் அஞ்சலி நிகழ்வு - பழ. நெடுமாறன் அறிக்கை
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரது கணவரும் வாழ முயலவில்லை. தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனை துன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள இராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை. சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது. இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனித நேயம் கொஞ்சமும் இல்லாமல் முறியடித்தன. தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம் அவருடைய மனநிலையை மேலும் பாதித்து விட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர் காலமாகியிருக்கிறார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) அன்று மாலை 4 மணிக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன். பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம்
நாள் : 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை நேரம் : மாலை 4 மணி இடம் : தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளி வளாகம் வெங்கட் நாராயணா சாலை சென்னை பங்கேற்போர் : பழ. நெடுமாறன் வைகோ தா. பாண்டியன் மரு. செ. நெ. தெய்வநாயகம் ஆவடி மனோகரன்


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள் இன்று (20 – 02 -2011) அதிகாலை சாவடைந்துள்ளார் என்பது மிகவும் வேதனையளிக்கிறது. உலகத்தமிழ் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் அவரது பிரிவால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எம் தேசத்தின் மகா அன்னையை அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம். உலகத்தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பார்வதி அம்மாவிற்கான வணக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள் விரைவில் அறியதரப்படும்.
நோர்வே ஈழத்தமிழர் அவை
இன்று காலமாகிப் போன எமது ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறது. எமது தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இழப்பு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் மாபெரும் இழப்பாகும். எமது தலைவரின் தந்தையார் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் தலைவரின் தாயாரும் இறந்தது கண்டு உளம் வெதும்பி மீளாத்துயரில் எம் தமிழினம் இருக்கிறது. போரின் பொழுது வன்னியிலும், போரின் பின்னர் வதை முகாமிலும் என எம் இனம் பட்ட அத்துனை  துயரங்களையும் அனுபவித்து, இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்ட அந்த வீரத்தாயின் நினைவை நாம் ஒருபொழுதும் மறந்துவிடக்கூடாது.எந்த இந்திய அரசு தன் மண்ணில் கால் வைக்க விடாமல் தடுத்து அனுப்பியதோ, அவ்விந்திய அரசு மீண்டும் அழைத்தபொழுதும் தன்மானத்தோடு மறுத்து தன் சொந்த மண்ணில், சொந்த மக்களோடு இறுதி காலத்தை கழித்தார் எமது தாய் பார்வதியம்மாள்.
எமது தேசியத்தலைவரின் மனவலிமைக்கு சமமான மன வலிமையோடு, தன்னந்தனியாய் நின்றபொழுதும், யாருக்கும் அடிப்பணியாமல் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து மறைந்துள்ள எம்தாய்க்கு வணக்கம் செலுத்துவதோடு அல்லாமல், அவரைப் போலவே எந்த நொடிப்  பொழுதிலும் தன்மானத்தை இழக்காது வாழ நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்களின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது.மனித ஆயுள் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை பிரசவித்து முப்பது வயதுக்குள் மரணமேற்படுமாயின் அதை அற்ப ஆயுள் எனவும.; இரண்டாவதாக முப்பது வயதில் இருந்து அறுபது வயதுக்குள் மரணம் ஏற்படின் அதை மத்திம ஆயுள் எனவம் மூன்றாவதாக அறுபது வயதிற்கு மேல் மரணமேற்படின் அதை தீர்க்க ஆயுள் எனவும் எமது முன்னோர்கள் தெரிவிக்கின்றனர். எமது மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக பல லெட்சம் பேர் அற்ப ஆயுளுடனும் மத்திம ஆயுளுடனும் அகால மரணமடைந்துள்ளனர் இந்த வகையில் பார்வதியம்மாள் அவர்கள் அவற்றையெல்லாம் தாண்டி தீர்க்க ஆயுளுடன் இயற்கை எய்திருக்கிறார். பிறக்கின்ற மனிதர்கள் அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும் ஆனால் அவர்கள் வாழும் காலத்தில் என்ன நற்பணிகளை செய்தார்களோ அதைப் பொறுத்துத்தான் உலகம் அவர்களைப் போற்றும். இந்த நேரத்தில் இறைவனடி சேர்ந்த பார்வதியம்மாளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு அவரின் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் தேசிய கூட்மைப்பானது தங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையம் தெரிவித்துக்கொள்கின்றது.
பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, இளையோர் அமைப்பின் இரங்கல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011, 07:19.00 AM GMT ]
தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா இன்று காலை 6.30 மணிக்கு தமிழீழம் வல்வெட்டித்துறையில் தனது 81 வது அகவையில் காலமானார் என்பதனை மிகவும் வேதனையுடன் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழரை உலகிலே தலை நிமிர வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இத்தரணியிலே ஈன்றெடுத்த புனிதத்தாயின் உயிர் இன்று உலகைவிட்டுச் சென்றாலும் தமிழினம் உள்ளவரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.
 
அன்னாரது குடும்பத்தினருக்கும் பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாங்களும் இத்துயரில் பங்குகொள்கின்றனர்.

 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
 
கனடியத் தமிழர் தேசிய அவை
தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்.
 
பெரும் மதிப்புக்குரிய தமிழீழத் தேசியத்தலைவரின்  தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்ததையிட்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றது.

 
தமிழீழ விடுதலைப் பயணத்தை தலைமை தாங்க ஓரு சூரியத்தேவனைப் பெற்றெடுத்த தேசத்தின் தாய் அமரர் பார்வதி அம்மாள் அவர்களுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு தனது இதய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
ஈழத் தமிழரை அடிமையின் பிடியிலிருந்து விடுவிக்க போராடும் தமிழ் தானைத் தலைவனை பெற்றெடுத்து அவருக்கு வீரமும் விவேகமும் உட்டி வளர்த்த பார்வதி அம்மள் அவர்கள் தேசியத்தலைவரின் இலட்சியப் பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றது.
 
தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது கணவரான அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின் 7 மாதங்காக முதியவர்கள் என்றும் பாராமல் தேசியத்தலைவரின் பெற்றோராகவும் தமிழர்களாகவும் இருந்த காரணங்களுக்காக சிறிலங்கா அரசின் வதைமுகாமில் வெளித் தொடர்புகளுக்கோஇ மருத்துவ வசதிகளுக்கோ அனுமதிக்கப்படவில்லை.
தேசியத் தாய் அண்மையில் தமிழ் நாட்டில் சிகிற்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டு பின்பு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரான கரணநிதியால்  நிபந்தனைகளுடன் அளித்த பெற்ற அனுமதியை மறுத்தழித்து தனது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையிலேயே சிகிட்சை பெற்றுவந்தார். இத்தோடு இவரது கணவர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அண்மையினிலேயே இறைவனடி சேர்ந்தார்.
பாரிசவாத நோயினால் கடுமையான உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளான  நிலையில் இவரது மறைவுச் செய்தி குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவரது பிரிவால் துயரால் வாடும் தேசியத் தலைவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ மக்களுக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அத் துயரத்தில் கனடா இளையோர் அமைப்பும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
கனடா இளையோர் அமைப்பு


செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நெஞ்சம் கொஞ்சம் நின்றது.....



மேலே நீங்கள் காணும் காட்சி ஆத்துார் அருகே உள்ள சம்பேரியைச் சேர்ந்த தனியார் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலைக்கொட்டும் காட்சி கடந்த நான்கு நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் தங்களின் போரட்டங்களை பல வடிவில் நடத்தி தங்களின் கோரிக்கையினை தமிழக அரசு எதிராக நடத்தி வருகின்றனர் கறைவை மாடுகளுடன் சாலை மறியல் என்று போராடிய நீங்கள்  கடந்த இரு தினங்களாக உங்களின் போராட்ட குணத்தின் போக்கைமாற்றிருப்பது நெருடலாக உள்ளது எதை மூலதனமாக கொண்டு தங்கள் வாழ்ந்து வருகின்றீர்களோ அந்த மூலதனமான பாலை நீங்கள் நடத்தும் முறை கண்டு  நெஞ்சம் கொஞ்சம் நின்றது தான் போகின்றது பாலில் எழுமிஞ்ச சாறு ஊற்றுவது நடு ரோட்டில் ஊற்றுவது என யாறுக்கும் பயன் அற்ற இந்த செயலால் என்ன கண்டீர்கள் நண்பர்களே எடுத்துக்கொண்ட செயலை போராடிவெல்ல வேண்டும்  என்று தொங்கிய நீங்கள் இன்று தடம்மாறி அரசியல்வியாதிகள் போன்று விளம்பரபிரியர்களாக மாறியதன் மர்மம் என்ன எடுத்துக்கொண்ட இலக்கை தடம்மாறாமல் சென்றால் மட்டுமே நீங்கள் வெற்றி அடையமுடியும்.உங்களின் இலக்குமாறாமல் வெற்றிஅடைய எங்கள் வாழ்த்துக்கள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

வணக்கம் கலைஞர் அய்யா



மதிப்பிற்குறிய உயர் திரு கலைஞர் அய்யா அவர்களுக்கு வணக்கம் தமிழ்மொழி மத்தியஅரசால் நசுக்கப்படுகின்றது என்று அன்று மொழிபோர் நடத்திய தாங்கள் இன்று தமிழன் பொசுக்கப்படுவதைக் கண்டும் கண்டும் காணாமல் இருப்பதென் அய்யா.தியாகிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை  போற்றுவதற்கு தயங்கமாட்டேன் என்று கூறிய தாங்கள்

முத்துக்குமரனும் ஒரு தியாகி என்பதை ஏன் மறந்தீர்கள் அய்யா. தமிழ் மக்களுக்காக என் வயதினையும் பொருப்படுத்தாது இரவு பகல் பாராமல் ஓய்வு இன்றி உழைக்கின்றேன் என்கின்றீகளே மீனவன் தமிழன் இல்லையா அவன் கடலிலே தன் காலங்களை கடத்தி விடுவதால் அவனை கைவிட்டு விட்டீர்களா ஈழத்தமிழனால் தான் உங்களுக்கு அரசியல் பயன் இல்லை அதனால் கைவிட்டீர்கள் இந்த மீனவ தமிழனுமாலுமா தங்களுக்கு பயன்யில்லாமல் போய் விட்டான் எங்களைப் போன்றவர்களுக்கு தங்களை போன்ற அதிகாரத்தில் சிறிதெனும் கொடுத்துப்புப்பாருங்கள் அப்போது தெரியும் தங்களுக்கு எங்களை எப்படி காத்துக்கொள்ள தெரியும்.எந்த அரசியல் லாபத்திற்காக ஈழத்தமிழனையும் மீனவதமிழனையும் கொன்றுகுவிக்க  துணைநின்றீர்களோ அந்த அரசியல் அரிசானத்தில் தங்களை துாக்கி எரியும் காலம் இன்னும் சில நாட்கள் தான் நாட்களை எண்ணிக்கொண்டு இருங்கள் தமிழனுக்கு ஒரு தமிழனாய் இழைத்த துாரோகத்தை எண்ணி வீட்டில் இருக்கும் காலம்.பாரதியின் நண்பர் பரணி வருமையில் வாடுவதைக்கண்டு மாதம் 100 ரூ உதவித் தொகை வழங்க ஆணையிட்டேன் என்று கூறும் தாங்கள் இந்த 100 ரூ வைத்து எண்ண செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள் அய்யா.தமிழுக்கு தொண்டு செய்தவர்களை சிறப்பிப்பது எனது கடமை என்று கூறும் தாங்கள் தமிழன் என்று ஒருவன் இருந்தால் தான் அந்த தமிழ் வாழும் என்பதை ஏன் மறந்தீர்கள். 

17 லட்சம்



கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மொபைல் சேவை நிறுவனத்தில் இருந்து மற்றொரு மொபைல் நிறுவனத்திற்கு மாறும் போது எண்ணை தக்கவைத்துக்கொள்ளும்      (MOBILE NUMBER PORTABILITY) சேவை அறிமுகப்படுத்தி ஒரு மாதகாலம் இன்னும் நிறைவடையாத நிலையில் சுமார் 17லட்சம் வாடிக்கையாளர்கள் இச்சேவையினை பயன்படுத்தி உள்ளனர் என்று ட்ராய் நேற்று அறிவித்து உள்ளது இது வரை சந்தாதாரர்களை தங்களின் இஷ்டத்திற்கு ஆட்டி வைத்த மொபைல் நிறுவனங்கள் இனிமேலாவது வாடிக்கையாளரின் மனம் அறிந்து நடந்துகொண்டு தனது சந்தாதரர்களை தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்

புதன், 9 பிப்ரவரி, 2011

பதினாறு


நீண்ட இடைவேலைக்குப் பின் மனதை வருடும் ஒரு காவியத்தினை காண்டேன்.இப்பொழுது வரும் தமிழ் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கின்றது பதினாறு முதலில் நன்றி தயாரிப்பாளருக்கும் இப்படம் வெளிவர உதவிய திரு கலைப்புலி தாணு மற்றும் இப்படத்தினை செதுக்கிய இயக்குனர் அவர்களுக்கும் இப்படத்தினில் எனக்குப் பிடித்த சில வசனப்பகுதிகளின் இடுகை இங்கே
கோபி-எல்லாமே உன்னாலதானன் நான் சொல்ற மாதிரி என்னாலதான்னு உன்கிட்ட ஒன்னுமா இல்லை...
இளவரசி-உன் ஆத்தா போனதை நினைச்சு சுனங்கிறத விட அது முகத்தை நினைச்சு வாழனுன்டா
காலத்துக்கும் தைரியம் கொடுப்பது என் பொறுப்பு அந்த நம்பிக்கையை காத்துல போகம பாத்துக்கிறது உன் பொறுப்பு
இளவரசி-ஒளிஞ்சு வாளுரகாலம் கொஞ்ச காலம்தான் ஊரரியிரப்ப அது நம்ம நல்ல காலம்டா
இளவரசி-உசிர அன்டி வாழுர உடம்பு ஒரு இடம்னா உள்ளத்துல நினைச்சத மட்டும் பொதையலா வச்சுக்கனும்
                                                                                                                                                                                                                                                            இளவரசி-ஊரே கூடி தேர் இழுத்தாலும் அது போய் சேறும் இடம் கோயில்தானே என் கோயில் கோபிதான்
மாமன்-மாமனுக்கும் அந்த கிழவிக்கும் தெரிஞ்சா நீ சொல்லுற கோயிலுக்கு குண்டு வச்சுருவாங்க
இளவரசி-அப்ப அந்த சாமியும் சேந்து வெடிக்கும் மாமா
இளவரசி-செமிக்காம வந்த வாந்தி இல்ல சின்னாத்தா செமிச்சதால வந்த வாந்தி
என்னுடைய பார்வையில் மேற்கண்ட கருத்தினை பதிவிட்டுள்ளேன் தங்களின் பருத்துக்களுக்கா ஆவலுடன்-சே.பால்ராஜ்