புதன், 9 பிப்ரவரி, 2011

தனி மனிதன் நினைத்தாள்

ஆதர்ஷ் குடியிறுப்பு ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் ஒரு சாதாரணக் குடிமகன் என்று இன்னும் பலர் அறியவில்லை என்பதால் இந்த இடுகையின் வாயிலாக அந்த குடிமகனின் விடாமுயற்சியினை உலகிற்கு பறைசாற்றுவோம் அவர் பெயர் திரு.யோகாச்சார்யா ஆனந்த்ஜி

மும்பையின் சூகூ பகுதியைச் சேர்ந்தவர்.  ஆம்  ஆண்டே இந்த ஊழல் குறித்த தன்னுடைய ஆட்சேபணையை வெளிப்படுத்தினார் இவர்.யாரும் கண்டுகொள்ளவில்லை மனம் தளராமல் தொடர்து இந்த ஊழலை வெளிக்கொணர இடையறாது அனுக்கள் தொடுத்து வெற்றி கண்டவர் இவர் . பாதுகாப்பு தொடர்பானதகவல்கள் என்று கூறி இவரது மனுக்களுக்கு ஆரம்பத்தில் பதில் அளிக்க மறுத்திருக்கிறார்கள் புத்திசாலித்தனமாக வேறு வேறு துறைகளுக்கு வேறு வேறு கேள்விகளை எழுப்பி தனக்கு வேண்டுய விவரங்களை சேகரித்திருக்கிறார் ஆனந்த்ஜி ஒரு முறை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கே ஒரு கடிதம் கூட எழுத வேண்டி இருந்ததாம்.
வீடு ஒதுக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் உள்ளிட்டவிவரங்களை ஊடகங்களுக்கு தந்தவர் இவர்.இப்பிரச்சனை தொடர்பாக  பக்க ஆவணங்களை ஆதாரமாகச் சேகரித்திருக்கிறார்
தகவல் உரிமைச்சட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இப்படிப்பட்ட ஊழல்கள் நம்நாட்டில் வெளிவரவாய்யே இல்லாமல் போயிருந்திருக்கும் என்பதை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

0 கருத்துகள்: