ஈழத்திருத்தாயின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் - எம்.கே.சிவாஜிலிங்கம்
இன்று மறைந்த தமிழீழத் தேசியத்தலைவரின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக்கிரியைகள் ஈழமக்களின் அஞ்சலிகளின் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளின் இறுதிக்கிரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துறை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 10.30 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் இவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு வல்வெட்டித்துறை, ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது மகளின் வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பூவுடல் தகனம் செய்யப்படுமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈழத்தாயின் பூவுடல் ஊரணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பகுதியில் துக்கம் அனுஷ்டித்து கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
பார்வதி அம்மாள் அஞ்சலி நிகழ்வு - பழ. நெடுமாறன் அறிக்கை
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரது கணவரும் வாழ முயலவில்லை. தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனை துன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள இராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை. சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது. இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனித நேயம் கொஞ்சமும் இல்லாமல் முறியடித்தன. தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம் அவருடைய மனநிலையை மேலும் பாதித்து விட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர் காலமாகியிருக்கிறார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) அன்று மாலை 4 மணிக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன். பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம்
நாள் : 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை நேரம் : மாலை 4 மணி இடம் : தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளி வளாகம் வெங்கட் நாராயணா சாலை சென்னை பங்கேற்போர் : பழ. நெடுமாறன் வைகோ தா. பாண்டியன் மரு. செ. நெ. தெய்வநாயகம் ஆவடி மனோகரன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள் இன்று (20 – 02 -2011) அதிகாலை சாவடைந்துள்ளார் என்பது மிகவும் வேதனையளிக்கிறது. உலகத்தமிழ் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் அவரது பிரிவால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எம் தேசத்தின் மகா அன்னையை அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம். உலகத்தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பார்வதி அம்மாவிற்கான வணக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள் விரைவில் அறியதரப்படும்.

நோர்வே ஈழத்தமிழர் அவை
இன்று காலமாகிப் போன எமது ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறது. எமது தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இழப்பு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் மாபெரும் இழப்பாகும். எமது தலைவரின் தந்தையார் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் தலைவரின் தாயாரும் இறந்தது கண்டு உளம் வெதும்பி மீளாத்துயரில் எம் தமிழினம் இருக்கிறது. போரின் பொழுது வன்னியிலும், போரின் பின்னர் வதை முகாமிலும் என எம் இனம் பட்ட அத்துனை துயரங்களையும் அனுபவித்து, இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்ட அந்த வீரத்தாயின் நினைவை நாம் ஒருபொழுதும் மறந்துவிடக்கூடாது.எந்த இந்திய அரசு தன் மண்ணில் கால் வைக்க விடாமல் தடுத்து அனுப்பியதோ, அவ்விந்திய அரசு மீண்டும் அழைத்தபொழுதும் தன்மானத்தோடு மறுத்து தன் சொந்த மண்ணில், சொந்த மக்களோடு இறுதி காலத்தை கழித்தார் எமது தாய் பார்வதியம்மாள்.
எமது தேசியத்தலைவரின் மனவலிமைக்கு சமமான மன வலிமையோடு, தன்னந்தனியாய் நின்றபொழுதும், யாருக்கும் அடிப்பணியாமல் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து மறைந்துள்ள எம்தாய்க்கு வணக்கம் செலுத்துவதோடு அல்லாமல், அவரைப் போலவே எந்த நொடிப் பொழுதிலும் தன்மானத்தை இழக்காது வாழ நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்களின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது.மனித ஆயுள் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை பிரசவித்து முப்பது வயதுக்குள் மரணமேற்படுமாயின் அதை அற்ப ஆயுள் எனவும.; இரண்டாவதாக முப்பது வயதில் இருந்து அறுபது வயதுக்குள் மரணம் ஏற்படின் அதை மத்திம ஆயுள் எனவம் மூன்றாவதாக அறுபது வயதிற்கு மேல் மரணமேற்படின் அதை தீர்க்க ஆயுள் எனவும் எமது முன்னோர்கள் தெரிவிக்கின்றனர். எமது மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக பல லெட்சம் பேர் அற்ப ஆயுளுடனும் மத்திம ஆயுளுடனும் அகால மரணமடைந்துள்ளனர் இந்த வகையில் பார்வதியம்மாள் அவர்கள் அவற்றையெல்லாம் தாண்டி தீர்க்க ஆயுளுடன் இயற்கை எய்திருக்கிறார். பிறக்கின்ற மனிதர்கள் அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும் ஆனால் அவர்கள் வாழும் காலத்தில் என்ன நற்பணிகளை செய்தார்களோ அதைப் பொறுத்துத்தான் உலகம் அவர்களைப் போற்றும். இந்த நேரத்தில் இறைவனடி சேர்ந்த பார்வதியம்மாளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு அவரின் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் தேசிய கூட்மைப்பானது தங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையம் தெரிவித்துக்கொள்கின்றது.
பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, இளையோர் அமைப்பின் இரங்கல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011, 07:19.00 AM GMT ]
தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா இன்று காலை 6.30 மணிக்கு தமிழீழம் வல்வெட்டித்துறையில் தனது 81 வது அகவையில் காலமானார் என்பதனை மிகவும் வேதனையுடன் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழரை உலகிலே தலை நிமிர வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இத்தரணியிலே ஈன்றெடுத்த புனிதத்தாயின் உயிர் இன்று உலகைவிட்டுச் சென்றாலும் தமிழினம் உள்ளவரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.
அன்னாரது குடும்பத்தினருக்கும் பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாங்களும் இத்துயரில் பங்குகொள்கின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
கனடியத் தமிழர் தேசிய அவை

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்.
பெரும் மதிப்புக்குரிய தமிழீழத் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்ததையிட்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றது.
தமிழீழ விடுதலைப் பயணத்தை தலைமை தாங்க ஓரு சூரியத்தேவனைப் பெற்றெடுத்த தேசத்தின் தாய் அமரர் பார்வதி அம்மாள் அவர்களுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு தனது இதய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஈழத் தமிழரை அடிமையின் பிடியிலிருந்து விடுவிக்க போராடும் தமிழ் தானைத் தலைவனை பெற்றெடுத்து அவருக்கு வீரமும் விவேகமும் உட்டி வளர்த்த பார்வதி அம்மள் அவர்கள் தேசியத்தலைவரின் இலட்சியப் பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றது.
தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது கணவரான அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.
தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது கணவரான அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின் 7 மாதங்காக முதியவர்கள் என்றும் பாராமல் தேசியத்தலைவரின் பெற்றோராகவும் தமிழர்களாகவும் இருந்த காரணங்களுக்காக சிறிலங்கா அரசின் வதைமுகாமில் வெளித் தொடர்புகளுக்கோஇ மருத்துவ வசதிகளுக்கோ அனுமதிக்கப்படவில்லை.
தேசியத் தாய் அண்மையில் தமிழ் நாட்டில் சிகிற்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டு பின்பு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரான கரணநிதியால் நிபந்தனைகளுடன் அளித்த பெற்ற அனுமதியை மறுத்தழித்து தனது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையிலேயே சிகிட்சை பெற்றுவந்தார். இத்தோடு இவரது கணவர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அண்மையினிலேயே இறைவனடி சேர்ந்தார்.
பாரிசவாத நோயினால் கடுமையான உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் இவரது மறைவுச் செய்தி குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவரது பிரிவால் துயரால் வாடும் தேசியத் தலைவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ மக்களுக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அத் துயரத்தில் கனடா இளையோர் அமைப்பும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
கனடா இளையோர் அமைப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக