புதன், 29 டிசம்பர், 2010

இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை முகாம்களின் மீது பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, எல்லை பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் ஓபராய் கூறியதாவது : இன்று அதிகாலை 04.30 மணியளவில் துவங்கிய தாக்குதல், 05.30 மணிவரை நீடித்ததாகவும், நமது படையினர் உஷாராக இருந்ததால் இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும், அத்துமீறலையடுத்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோச‌டி

புதுடில்லி: மிகப் பெரிய அளவிலான ஒரு வங்கி மோசடி ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் நடந்துள்ளது. அங்குள்ள சிட்டி வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், பல்வேறு வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் 20 கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார். இதுதொடர்பாக சிட்டி வங்கி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிட்டி வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், குர்கான் கிளையில் சில கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து புகார் வந்ததும் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அதில்தான் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது. சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர்தான் இதைச் செய்ததாக கண்டுபிடித்துள்ளோம். பல்வேறு வாடிக்கையாளர்களை அணுகி கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி முதலீடு செய்ய வைத்து அந்தப் பணத்தையெல்லாம் இவர் சுருட்டியுள்ளார். அநத்ப் பணத்தை எடுத்து வேறு சில கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இப்படியாக 20 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். சிட்டி வங்கியின் அறிவிப்புகள் என்று கூறி மோசடியான திட்ட அறிவிப்புகளை இவரே அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செபியின் நோட்டீஸைப் போல போலியான ஒன்றையும் தயாரித்து இவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறந்துள்ளார். தற்போது இந்த வழக்கை குர்கான் போலீசார் விசாரித்து வருகின்றனர். 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2005 மீண்டும் நினைவுபடுத்தும் 2011

இன்னும் 2 தினங்களில் பிறக்கப்போகும் 2011ம் ஆண்டு, 2005ம் ஆண்டை ஒத்து காணப்படுகிறது. நீங்கள் நம்பவில்லையென்றால், 2005 ம் ஆண்டு காலண்டர் மற்றும் 2011ம் ஆண்டு காலண்டரை ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கே தெரியும் என்கிறார் உஜ்ஜையினியில் இயங்கி வரும் ஜிவாஜி ஆப்சர்வேட்டரி மைய இயக்குனர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா. அவர் கூறியதாவது : இந்த இரண்டு ஆண்டுகளிலும், ஜனவரி 1ம் தேதி சனிக்கிழமை, ஜனவரி 26ம் தேதி புதன்கிழமை மற்றும் ஆகஸ்டு 15ம் தேதி திங்கட்கிழமை என்று ஒத்து உள்ளது. அதேபோல், மேலும் பல ஒற்றுமைகளும் இதில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவராக பிரகாஷ் சுவாமி தேர்வு

வாஷிங்டன் : நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவராக பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார் என்று சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள ஆல்பர்ட் செல்லத்துரையின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்த‌தையொட்டி, 2011, ஜனவரி முதல் பிரகாஷ் சுவாமியின் பதவிக்காலம் துவங்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்துகிறது சீனா

பீஜிங்: அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதமாக இந்திய மொழிகளில் புதிதாக சர்வதேச ரேடியோ ஸ்டேஷனை ஆரம்பிக்கிறது சீனா.நண்பனை போல் பழகு ஆனாலும் எதிரியாக நினை என்பதற்கு ஏற்ப இந்தியாவுடன் நட்புடன் பழகி வருவதாக கூறிவருகிறதுசீனா .ஆரம்ப காலகட்டங்களில் சீனாவின் ரேடியோஸ்டேஷனில் வெளி நாட்டுமொழிகள் ஒலிபரப்பப்பட்டுவருகின்றன.அவற்றில் தமிழும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது மேலும் மூன்று இந்திய மொழிகளில் குறிப்பாக இந்தி, பெங்காலி, உருது, ஆகிய மொழிகளில் ஒலிபரப்பை துவங்க உள்ளது. இதற்காக இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படஉள்ளது.அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சர்வதேச ஒலி பரப்பான ஏஎம்,மற்றும் எப்எம் ரேடியோ ஒலிபரப்புகளை இலங்கை,மியான்மர் உட்படஏழு நாடுகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது. மேலும் இந்த ரேடியோ ஒலிபரப்பிற்கு 5மில்லியன் வெளிநாட்டவர்கள் ஆன்லைன் மூலம் வாக் களித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன்மூலம் சீனாவின் 10க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள் மேம்பாடு அடையும். தற்போதுபீஜிங்நகரத்தில் உள்ள நகரசபை தலைவராக அருண் ஷாகு என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்து மத கோவில்களிலும் இந்தியரையே நியமிக்க உள்ளனர். அதேபோல் மற்றபகுதிகளி<லும் வெளிநாட்டவரையே அந்தந்த இடங்களில் நியமிக்க உள்ளனர். என் சீன சர்வதேச ரேடியோ ஸ்டேஷன் இயக்குனர் வாங் ஜெங்னி யான் தெரிவித்துள்ளார்.

அடிமை இந்தியா 2010

வாழத் தெரியாதவன் வாழுகிற நாட்டில் 
ஆளத் தெரியாதவன் ஆளுவான்.


இன்று இந்தியா இப்படித்தான் இருக்கிறது. சொந்த அறிவுள்ள என் அன்பு சொந்தங்களே.... வணக்கம். உங்களில் ஒருவனாய் உங்களுக்காய் பேசுகிறேன். இந்த தேசம் கடந்து வந்தப் பாதையை எண்ணிப் பார்க்கிறேன். 60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பெரும்பான்மையாய் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அமைப்பாக காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், ஆரம்ப காலம் தொட்டே உட்கட்சிப் பூசலுக்கு குறைவிலாத கூட்டம்தான் இங்கே குவிந்திருக்கிறது. திறமையான மனிதர்களைப் பெற்றிருந்தும் திறம்பட செயல்படாமல் போனதேன்....? புரியவில்லை. காங்கிரஸ் ஒரு அதிகார வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. இன்றும் நடக்கிறது. நேருவுக்குப் பின் சிறந்த சீர்திருத்தவாதிகளை அந்த கட்சி ஏனோ இழந்து விட்டது. 
இன்று என்ன நிலையில் நம்மை இந்த கட்சி வைத்திருக்கிறது என்பதற்கு காங்கிரசின் கையாலாகத்தனங்கள் சாட்சியாய் நிற்கின்றன. ஒரு கட்சி என்பது ஆட்சிக்கு வருவதையும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுமேயானால் அந்த கட்சியிடம் தேசியம் சார்ந்த விசயங்களை எதிர்ப்பார்க்க முடியாது. இந்தியாவில் எல்லா கட்சிகளுமே இந்த நிலையில்தான் உள்ளன.

சுதந்திரம் பெற்றதாய் சொல்லிக் கொண்டு இன்னமும் இங்கே மன்னராட்சியைதான் காங்கிரஸ் கடைப் பிடிக்கிறது.
வழிவழியாய் வழித்தோன்றல்கள் மட்டுமே தலைமை ஏற்க வேண்டிய அவசியம் சனநாயகத்தில் எங்கே இருக்கிறது..? நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, நாளை ராகுல், அல்லது பிரியங்கா, ..... இப்படி நீளும் பட்டியலில் சுதந்திரம் எங்கே இருக்கிறது. 

இதைப் பின்பற்றி... மாநிலங்களிலும்..... முதல்வருக்குப் பின் மகன் முதல்வர். தொடரும் பரம்பரை பதவிகளில் சனநாயகம் எங்கே பிழைத்திருக்கிறது...? ஏன் அடிமட்டத் தொண்டனுக்கு, நீண்ட அரசியல் பின்னணி உடையவர்களுக்கு, குறிப்பாய் இளைஞர்களுக்கு பதவிகள் தரப் படுவதில்லை. நடக்க தெம்பில்லாதவர்களுக்கு கூட பதவி மோகம் விடவில்லை. 


தேசியப் பதவிகள் என்பது ( பிரதமர், முதல்வர்,) ஏதோ இந்திர சபை பதவி என நினைத்து தன் தனிப்பட்ட சுகங்களை அனுபவித்துக்கொள்ள ( ரம்பை, ஊர்வசி, திலோத்தமை களோடு ) என நினைக்க கூடாது.
இந்தப் பதவிகள் அந்த தேசத்தின், மாநிலத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவை என்பது சனநாயகத்தில் புரியப் படாத புதிராக இருக்க வேண்டிய அவசியம் என்ன...?

ஒரு கட்சி என்று வருகிற போது, அங்கே தலைவன் என்று ஒருவர் வருகிற போது, மற்றவர்கள் தலைமை ஏற்கிற வாய்ப்புகள் மறுக்கப் படுகிறது. அதோடு இந்த பிரதமர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை தரவேண்டும். அப்போதுதான் உண்மையான சனநாயகம் தழைக்கும்.

இங்கே செயித்தவர்கள் சேர்ந்து கொண்டு அதிகப் பணம் கிடைக்கும் கட்சிக்கு தங்கள் ஆதரவு தருவதில் எப்படி சனநாயகம் இருக்க முடியும்..?

எல்லா அமைப்புகளும் இங்கே இருக்கின்றன... எப்படி..? அரசியலுக்கு அடிமையாய். சாமானியனை தண்டிக்கும் அளவுக்கு கூட அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப் படுவதில்லை. பலப்பல காரணங்களால், பலப்பல பெயர்களால் அவர்கள் தப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தமாய் ஒரு பெரியத் திருட்டுக் கும்பல் வசம் இந்த தேசம் சிக்கி சீரழிகிறது. இந்த தேசத்தின் அவலங்களுக்கும், தீர்க்கப் படாத பிரச்சனைகளுக்கும், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த கட்சியாக "காங்கிரஸ்" பொறுப்பேற்க வேண்டியதாகிறது.

இப்போது பாருங்கள்...., இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப் பெரும் ஊழல்கள் நடந்தேறுகின்றன. ஊழல் காங்கிரசுக்கு புதிதில்லைதான் என்றாலும், தேசத்திற்கு இது மிகப் பெரிய கெடுதல், மிகப் பெரிய அச்சுறுத்தல், நம்முடைய உண்மையான பலம் என்னவென்பதை பரிசோதிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
நம்முடைய அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களின் மிகப் பெரும் அறிவையும், ஆற்றலையும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதிலேயே செலவிடுவதால்.... இந்த தேசத்தின் பாதுகாப்பு குறித்து கவலைக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. 
இப்போது இந்த ஒரு ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் கோடிக்கு ( 210000,00,00,000 )
இதுவரை ஊழல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. நேற்று ஐந்தாயிரம் ( 5000,00,00,000 ) கோடிக்கு தென்னக ரயில்வேயில் ஊழல் கண்டுப் பிடிக்கப் பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் கோடிகளில் அல்ல ஊழல். கோடி கோடிகளில் தான் கொள்ளை. 


இதை தடுக்க இங்கே எந்த சட்டமும், திட்டமும், பொது அமைப்பும் இல்லையா...? அப்படியென்றால் வெற்றுக் காகிதங்களில் தொங்கும் இந்த சல்லடை சட்டம் நமக்கு எதற்காக..? நம்முடைய சமூக அமைப்பு எதற்காக...?

அரசியலில் இருந்து விட்டால் என்ன செய்தாலும் அது குற்றமாகப் பார்க்கப் படாதது ஏன்...? தவறுகளுக்கும், தப்புகளுக்கும் நம்முடைய மக்கள் பழகிப் போய், இதுதான் எதார்த்தம், இதுதான் நடைமுறை என்கிற அளவுக்கு இரத்தத்தில் தவறுகள் நம்மில் மிகுந்து கிடக்கின்றன. இலஞ்சம் என்பது உரிமையாக பேசப் படுகிற அவலங்கள் இங்கேதான் நடந்தேறுகிறது.

தேநீர் வாங்கித் தரவில்லை என்கிற காரணத்தால் கோபம் கொண்ட காவல்துறை உயரதிகாரி ஏட்டுகளை பதவியிலிருந்து தற்காலிகமாய் நீக்கும் அளவுக்கு இலஞ்சம் நம்மில் ஊடறுத்து நிற்கிறது. ஒரு உள்துறை அமைச்சர் பேசுகிறார்... காங்கிரஸ் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்க முடியும். எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற தாரக மந்திரம் காங்கிரசுக்குத்தான் மிக நன்றாக தெரியும் என்று பேசி இருக்கிறார். அவருடைய பேச்சிலேயே காங்கிரசின் மானம் அவிழ்ந்து கிடப்பதை பாருங்கள்.

இங்கே சாதாரண மனித வாழ்க்கைக்கு தேவையான "வெங்காயம்" ஆப்பிளுக்கு மேலே போய் விலை விற்கிறது. இதையெலாம் இங்கு கவனிக்க ஒருத்தர் கூடவா இல்லை. உணவுத்துறை அமைச்சர் பேசுகிறார். இன்னும் மூன்று வாரம் போனால் வெங்காயம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது, மக்கள் காத்திருக்க வேண்டும் என்று... இப்படி பேச என்ன துணிச்சல் இருக்க வேண்டும்..? இதற்குத்தானே மக்கள் உனக்கு ஓட்டு போட்டார்கள். உனக்கு அமைச்சர் பதவி வேறு...? மரத்தடி சோதிடன் சொல்லும் பதில் சொல்ல எதற்கு உணவுத்துறை உனக்கு..?

இந்த ஐந்தாண்டுகளில் நடந்த கொடுமைகளைப் பாருங்கள். இந்தியா இதுவரைக் கண்டிராத பணவீக்கம். அதன் காரணமாய் தொடர்ந்து பொருட்களின் விலை ஏற்றம்...?! அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் திறந்து விட்டு நம்முடைய வாழ்வியல் ஆதாரங்களை எவனோ உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். நாம் சூம்பிப் போய் நிற்கிறோம். இதையெல்லாம் செய்துவிட்டு கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசையும் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சியில் மகத்துவங்கள் பாருங்கள்.

உலகப் பொருளாதார மயமாக்கல் என்பது இங்கே தவறான அணுகுமுறையாய் போய்விட்டது. தவறான கொள்கைகளில் நம்மை மீள முடியாத் துயரத்தில் இந்த ஆட்சி கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. இந்திய குடிமகன்களின் நலனை விட வெளி நாட்டானின் முதலீடு முக்கியமாய் போய் விட்டது. அப்படிப் பார்த்தால் நமது அண்டை நாடான சீனாவின் பொருட்களை உள்ளே விடவேண்டியதுதானே..., அதில் ஏன் முட்டுக் கட்டைப் போட வேண்டும்...? ஏனென்றால் இந்திய தொழில் முதலைகளான ரத்தன் டாடா, டி.வி.எஸ், அசோக் லேலாண்ட் போன்றவர்களின் வழி காட்டுதலில் ஒரு கட்சி தன் கொள்கைகளை வகுக்கிறது. பணக்காரர்களுக்கான ஆட்சியாக காங்கிரஸ் தன்னை மிக அதிக வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்கிறது. 

இவர்களின் வாகனங்கள் இங்கே அரை இலட்சத்துக்கு விற்கப் படுகிறது. சீனா தன் வாகனங்களை வெறும் இருபதாயிரங்களுக்கு தர சம்மதித்தது. இது யாருக்கு இழப்பு....? பணம் போட்ட முதலைகளுக்கு தானே..? எங்கே தன் வியாபாரம் படுத்து விடுமோ என பயந்து முன் கூட்டியே தடுத்து விட்டன இந்த முதலைகள். இப்படி இந்த தேசத்தை குதறி கொண்டிருக்கும் அரசியலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட வேண்டும்.

நம்முடைய தேர்தல் முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும். நம்முடைய நடைமுறைக்கு ஏற்றார் போல் சட்டம் மொத்தமும் மாற்றி எழுதப்பட வேண்டும். அதுவரை நம்முடைய நாடு காங்கிரசின் அடிமை. காங்கிரசு பண முதலைகளுக்கும், வெளி நாட்டானுக்கும் அடிமை. முதுகெலும்பில்லாத கிருமி.

"இந்தியா என்பது காங்கிரசு அல்ல. காங்கிரசு என்பது இந்தியா அல்ல".

இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யார் ?



இசை ஞானி இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யாரும் இல்லை ..
வீட்டுக்கு போன தனக்கு தண்ணீர் தரவில்லை என அதைக்கூட பிரச்சினையாக்கினார் இயக்குனர் மிஷ்கின் ..
இதை கூட பிரச்சினை ஆக்குபவர்கள் , இலக்கிய விவகாரம் கிடைத்தால் விட்டு விடுவார்களா? 
தாகூர் எழுதிய பிரபல கவிதைகளில் ஒன்று mind without fear 


அதை இளையராஜா மொழி பெயர்த்தது தவறு என்பதே இப்போது பஞ்சாயத்து..
தாகூர் கவிதைகளில் ஆய்வுகள் செய்துள்ள திரு ஆர் நடராஜன் , யுகமாயினி இதழில் இசைஞானி மேல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்..
தாகூரை ராஜா அவமானப்படுத்தி விட்டார்.. 
மைண்ட் என்றால் மனம்..அதை இதயம் என மொழி பெயர்த்தது தவ்று..
மனிதன் தலை நிமிர்ந்து நிற்பதாக தாகூர் சொல்வதை இதயம் தலை நிமிர்ந்து இருப்பதாக குழப்புகிறார்..



Where knowledge is free என்ற வரியை “  சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ..” என நீட்டுகிறார்..








Where words come out from the depth of truth என்பதை ,வாய்சொற்கள் எங்கே மெய் நெறிகளின் அடிப்படையிலிருந்து .. என கூடுதல் வார்த்தைகள் சேர்க்கிறார்..





tireless striving என்ப்தை விடாமுயற்சி என மொழி பெயர்த்தது தவறு,,, 
இது போல பல தவறுகள் இருக்கின்றன,,,
பிளேட்டோவின் படைப்பை மொழி பெயர்க்கும்போது அளவு கடந்த சுதந்திரம் எடுத்து கொண்டதால் Etienme Dolet என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
அதுதான் என் நினைவுக்கு வருகிறது என்று பாய்கிறார் அவர்..

ஆனால் நான் இளையராஜாவின் மொழி பெயர்ப்பை படித்தபோது, அவர் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்காமல் , தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல வந்தது தெரிந்தது…

இளையராஜா இதயம் என சொல்வது பிசிக்கல் இதயம் அல்ல… மனம் என்பதைதானே சொல்கிறார் ? இது சிறுபிள்ளைக்கும் தெரியுமே?
“ அறிவை சிறைப்படுத்த முடியாது… எனவே விடுதலை என்ற பேச்சு அர்த்தம் அற்றது “ என்பதுதானே கவிதையின் உட்கருத்து..இதை சொல்வதில் என்ன தவறு..
“ வெளிப்படையாக காண்பது வாய்சொற்கள்..இவை மெய்யின் பூரணத்துவத்தை உணர்த்த முடியாது “ என்பது தாகூருக்கு உடன்பாடான கருத்துதான்..

தியானம், முக்தி என நாம் சொல்வது எல்லாமே மனதின் விளையாட்டுதான்… 
போலி சாமியார்கள் உருவாக இது போன்ற ஆசைகள்தான் காரணம் .. 
இதைத்தான் தாகூர் சொல்கிறார்.. அதை சரியாக இளையராஜா விளக்குகிறார்.
“ விடாமுயற்சியும் தளர்ச்சியும் மனதின் கற்பனையே.. ஆனால் அதுவும் பூரணத்துக்குள் உள்ளதுதான் .. அதை நோக்கி கை நீட்ட அது தனி பொருள் அல்ல “
நாம் கற்ற விஷ்யத்தை வைத்து , இன்னொன்றை ஆராய்ந்தால் புதிதாக அதையும் கற்க முடியாது… 
சாய்ஸ்லெஸ் அவேர்னஸ் என்பார் ஜெகே..
அந்த அடிப்படையில் அறிவு பாகுபாடு பார்க்காது என இளையராஜா சொலவ்து மிகவும் சரியான ஒன்றுதான்..
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் தேட ஆரம்பித்தால் கடவுள் என எதையாவது பார்க்க முடியும்..
கடவுள் இல்லை என்ற நம்பிக்கையுடன் தேடினால் , கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் கிடைக்கும்… 
விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்வை பார்க்க வேண்டும்..
நோக்கம் அற்ற நிலைதான் விரிந்த நிலை என இளையராஜா சொல்வதும் சரியானதே..
என்னை பொறுத்தவரை இளையராஜாவின் விளக்கமே சரியானதாக தோன்றுகிறது ..
மூலத்தையும் மொழி பெயர்ப்பையும் பாருங்கள்…உங்கள் கருத்தை கூறுங்கள்..
கவிதை உங்கள் பார்வைக்கு, இதோ…. 

*******************************************************************
Mind without fear 



WHERE the mind is without fear and the head is held high






Where knowledge is free






Where the world has not been broken up into fragments






By narrow domestic walls






Where words come out from the depth of truth






Where tireless striving stretches its arms towards perfection






Where the clear stream of reason has not lost its way






Into the dreary desert sand of dead habit






Where the mind is led forward by thee






Into ever-widening thought and action






Into that heaven of freedom, my Father, let my country awake.






-Rabindranath Tagore



இசைஞானி இளையராஜா மொழிபெயர்ப்பு
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ..
சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ..
குடும்பத்தின் குறிகிய தடைப்பாடுகளால் வெளிஉலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு துண்டுகளாக போய்விட வில்லையோ.
வாய்சொற்கள் எங்கே மெய் நெறிகளின் அடிப்படையிலிருந்து 
வெளிப்படையாய் வருகின்றனவோ 
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி 
தனது கரங்களை நீட்டுகிறதோ 
அடிப்படைதேடி செல்லும் தெளிந்த நீரோட்டம் 
எங்கே பாழடைந்த பழக்கம் எனும் பாலை மணலில் 
வழிதவறிப் போய்விடவில்லையோ
நோக்கம் விரியவும் ஆக்க வினை புரியவும் இதயத்தை
எங்கே வழி நடத்தி செல்கிறாயோ
அந்த விடுதலை சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே
விழித்தெழுக என் தேசம் !


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு ( திரு நடராஜன் ) 
எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம் 
எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ தலை 
எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ அறிவு
எங்கே குறுகிய தேச சுவர்களால் 
கூறுபட விடவில்லையோ உலகம்
எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து 
வருகின்றனவோ சொற்கள்
எங்கே செம்மைக்கு செல்கிறதோ 
அயர்விலா உழைப்பு
மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில் 
தெளிந்த பகுத்தறிவு ஓடை 
எங்கே பாதை தவறாமலிருக்கிறதோ 
எப்போதும் விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும் 
எங்கே நீ மனதை செலுத்துகிறாயோ 
என் தந்தையே , அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில் 
விழிக்கட்டும் என் தேசம்

பாட்டு கேட்க்க ஒரு இணைய தளம்


                  பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட  சிறந்த பழைய பாடல்கள் கேட்க்க சிறந்த தளம் இது 


அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ்  எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே  போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாகா ,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்

 அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு  அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற  இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்


 மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம் 
    
    அதிலும்  இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது  

                      இணையதளத்தில் நமக்கு பிடித்த  பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது

இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும்



இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.






அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் "நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன" என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.




ஜூலியன் தற்போது வசிக்கும் பண்ணை வீடு


இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் 'உள்ளேன் ஐயா' சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.




லண்டன் காவல்துறை வாகனத்துக்குள் இருந்து ஜூலியன்


ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.






இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.




கையில் பிணைக்கான ஆணையுடன்


மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.


நன்றியுரை:








"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்"

உலகத்தை துகிலுரிக்கும் இணையம் விக்கிலீக்ஸ் மர்மங்கள்-13


இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.


அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் "நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன" என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.

ஜூலியன் தற்போது வசிக்கும் பண்ணை வீடு

இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் 'உள்ளேன் ஐயா' சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.

லண்டன் காவல்துறை வாகனத்துக்குள் இருந்து ஜூலியன்

ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.


இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.

கையில் பிணைக்கான ஆணையுடன்

மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.

நன்றியுரை:



"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" 

உலகத்தை துகிலுரிக்கும் இணையம் விக்கிலீக்ஸ் மர்மங்கள்-12

Mirrored site என்பது ஏற்கனவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் ஒரு இணையத்தளத்தை பெயருக்கேற்றாற் போல் அப்படியே கண்ணாடியாய் பிரதிபலிப்பது தான். ஏன் கண்ணாடி போல என்று விளக்கப்படுகிறதென்றால் அசலான இணையத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ அடுத்த நிமிடம், அப்படியே நகலில் பிரதிபலிக்கப்படும் (relative link). இதைச் சாத்தியப்படுத்துவதற்கு வழக்கம் போல் இணையமெங்கும் மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன, வழக்கம் போல் கூகுளாடி பெற்றுக்கொள்ளலாம். (உதா: HTTrack ). இவ்வாறு பிரதிபலிக்கும் தளங்களைத் (mirrored sites) தயார் செய்வதற்குத் தேவையானப் பொருட்கள் பிரதிபலிக்கச் செய்யும் மென்பொருள், உங்களுக்குச் சொந்தமாக இணைய வழங்கியில் கோப்புகளைச் சேமிக்க இடம், மற்றும் அசல் இணையதளத்தின் இணைய வழங்கியின் விவரங்கள் (hosting servers).

மேற்சொன்ன விவரங்களை, பிரதிபலிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு இயங்க விட்டுவிட்டால், அதன் பின்னர் நம் மற்ற வேலைகளை கவனிக்கப் போய்விடலாம். அந்த மென்பொருள் என்ன தான் செய்யும்?. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அசல் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும், பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அசல் தளத்தில் ஏதேனும் புதிய கோப்புகள் வலையேற்றப்பட்டிருந்தாலோ அல்லது இருந்த கோப்புகள் நீக்கப்பட்டிருந்தாலோ அதே மாற்றங்களை பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் செயல்படுத்தும்(Sync.). விக்கிலீக்ஸ் ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பதும், அவர்களுக்கும் இணைய வழங்கிகள் கோப்புகளைச் சேமிக்க இடம் வைத்திருப்பதென்பது நம்மூரில் கேபிள் இணைப்பைப் போல, சகலரும் வைத்திருப்பார்கள்.


விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்கி விட்டோம் என்று அமெரிக்கா ஊடகங்களில் உரத்துக் கூவிக் கொண்டிருந்த பொழுதுகளில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலர்கள் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் விக்கிலீக்ஸ் தளத்தின் நகல்கள் நூற்றுக்கணக்கில் தயாராகிக் கொண்டிருந்தன. இவ்வாறு பிரதிபலிக்கப்படும் தளங்கள் யாவும் உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ள நாடுகளின் வழங்கியில் சேமிக்கப் பட்டதென்பதும், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டத்தின் படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதென்பது மிகக் குஷ்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றளவும் பல நாடுகளில் இணையத்தொடர்புகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போதிய சட்டங்கள் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இவையனைத்தும் நடந்து கொண்டிருந்த வேளைகளில் ஜூலியனைக் கைது செய்ய லண்டன் மாநகரக் காவல்துறை முயற்சி செய்ததும், ஒவ்வொரு நாளும் புதிதாகச் சில ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தின் மூலமாக வெளியிடப்படுவதும் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்தன. தளத்தையும் முடக்க முடியவில்லை, ஆளையும் பிடிக்க வைக்க முடியவில்லை என்று குமுறிய அமெரிக்காவிற்குத் தினமும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த ஆவணங்களின் கொசுத் தொல்லையும் சேர்ந்து தாங்கொனாத் துயரமடைந்து, ஜூலியனை நோக்கித் தன் இறுதி தாக்குதலை நடத்தியது.

ஜூலியன் பயன்படுத்தும் விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், Paypal தளத்தின் கணக்குகள், VISA மற்றும் MasterCard கடன் அட்டைகள் என சகலமும் முடக்கப்பட்டன. விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகளுக்கும், ஜூலியன் இணையத்தில் ஆடும் கண்ணாமூச்சிகளுக்கு பணம் ரொம்ப, ரொம்ப அவசியம். விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் அவர்களுடன் சேர்ந்து வெளியிடும் அமெரிக்க, ஐரோப்பிய அச்சு ஊடகங்கள் மூலம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு நிதி அளிக்கப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டாலும்,ஜூலியனின் முக்கிய நிதி ஆதாரம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு, Paypal மூலம் நன்கொடை வழங்குபவர்கள் தான். தனது ஜீவநாடியான நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டதும், இனி மறைந்திருந்தும் உபயோகமில்லை என்பதை உணர்ந்த ஜூலியன், தனது வழக்கறிஞர்கள் துணையுடன் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நிகழ்ந்தது. ஊரையே உலையில் போட்டு விட்டு மலர்ந்த முகத்துடன், பூரித்துப் போய் சிறை செல்லும் இக்காலத்தில், எந்தவித உணர்வையும் காட்டாமல் சரணடைந்த ஜூலியன், சிறைக்குச் செல்வதற்கு முன்பு விக்கிலீக்ஸ் வழக்கம் போல் செயல்படும் என்று சொல்லிச் செல்ல ஜூலியன் மறக்கவில்லை. அதுவரை ஜூலியனால் எதுவும் சாத்தியம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் ஆர்வலர்களுக்கு இச்சம்பவம் மிகுந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது.


இக்கோபத்தின் வெப்பம் அப்படியே ஜூலியனை முடக்கியவர்களிலேயே முக்கியமானவர்களான VISA மற்றும் MasterCard பக்கம் திரும்பியது. வெறும் கணினியும், இணைய இணைப்பும் வைத்துக் கொண்டு சிறிய அறைக்குள் செயல்படும் இவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தவர்கள் அனைவரையும் வாய்பிளக்கும் வகையிலான இணையப்போர் நடந்தது. பெயரிலிகள் இணைய நற்பணி மன்றம் (anonymous) என்று தங்களை அழைத்துக் கொண்ட குழு ஒன்று, "Operation Payback" என்ற தாக்குதல் திட்டத்தினை அறிவித்தது. DDoS attack என்ற இணையக் குட்டிச்சாத்தான், VISA மற்றும் MasterCard இணையத் தளங்களின் மேல் ஏவி விடப்பட்டது. DDoS (Distributed Denial of Service) தாக்குதல் என்பது அரசியல் கட்சிகள் ஊர்வலம் சென்று சாலைகளை முடக்குவதைப் போலத் தான். சும்மா இருக்கும் இணையத்தளத்தினை நோக்கி பல்வேறு கணினிகளில் இருந்து ஏகப்பட்ட தகவல் இணைப்புகளை அனுப்பி போலியான இணையப் போக்குவரத்தினை அளவுக்கு மீறி ஏற்படுத்துவதன் கொடுமை தாங்காமல், தாக்குதலுக்கு உள்ளாகும் இணைய தளத்தின் வழங்கிக் குப்புறப் படுத்துக் கொள்ளும். இத்தாக்குதலை தொடுப்பதற்கென சிறப்பு மென்பொருட்கள் உள்ளன.

இந்த தாக்குதலில் (operation payback), Visa மற்றும் Mastercard தளங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டாலும், இலவச இணைப்பாக amazon நிறுவனத்தின் இணையத்தளத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அத்தளம் வெற்றிகரமாக சமாளித்தது. இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், சந்தடி சாக்கில் விக்கிலீக்ஸ் தளத்தின் மீதும் DDoS தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அத்தாக்குதல் சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் சார்பானவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது :).


ஜூலியனின் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், கைது செய்யப்பட்ட ஜூலியனுக்கு நடந்தவை, விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்...

"விக்கிலீக்ஸ் உலகின் தனித்துவமான வெளியீட்டு நிறுவனம்" -

உலகத்தை துகிலுரிக்கும் இணையம் விக்கிலீக்ஸ் மர்மங்கள்-11


அமெரிக்காவின் துரத்தல், ஸ்விடன் மோகினிகளின் சட்டச்சிக்கல்கள் என்று கடும் நெருக்கடியில் ஜூலியன் இங்கிலாந்து வந்திறங்கியதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள், விரைவில் இணையத் தொழில்நுட்பத்தின் பாடங்களாக்கப் பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எத்தனை, எத்தனையோ போர்களையும், போராட்டங்களையும் கடந்து வந்த வரலாற்றின் பக்கங்களுக்கு முதல் முறையாக, புத்தம் புது ஈஸ்ட்மென் கலரில் கிடைத்த விஷயம் தான் ஜூலியனுக்கும், அமெரிக்காவிற்கும் நடந்த இணைய யுத்தம் (Cyber War). இந்த இணைய யுத்தத்தின் பார்வையாளர்களான பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இது ஒரு விநோதமான அனுபவம். Encryption, Mirrored Sites, DDos, DNS Servers, Web Hosting போன்ற தொழிநுட்ப வார்த்தைகள் வெகுஜன ஊடகங்களில் சரளமாகப் புழங்கத் தொடங்கின.


ஒரு ஆதிக்கம் மிகுந்த நாட்டின் அரசாங்கம் நினைத்தால் சரியோ, தவறோ என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்தான செயல்முறை விளக்கமும், இணையத் தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்கள் நினைத்தால் ஒரு கணிணியையும், இணைய இணைப்பையும் வைத்துக் கொண்டு யாரையும் அலறியடித்து ஓட வைக்க முடியுமென்பதும் சிறப்புற நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஜூலியன் இங்கிலாந்திற்கு ஆறு மாத விசாவில் வருகை தந்திருக்கிறார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு பக்கம் புதிது, புதிதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்கள் அனுதினமும் அம்பலமாகிக் கொண்டே இருந்தன. மறுபக்கம் ஸ்விடன் அரசு இண்டர்போல் அமைப்பை அணுகி தங்களிடம் ஒரு பிராது இருக்கிறதென்றும், அது குறித்தான பஞ்சாயத்துக்கு உடனே ஜூலியனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுத்தது. இண்டர்போல் ஜூலியனைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து அரசை அணுகிய போது, ஆவணங்களில் ஜூலியனின் பெயர்க்குறிப்பில் எழுத்துப்பிழை இருப்பதைக் கண்டுபிடித்து சிலிர்த்துக் கொண்டு நிராகரித்து விட்டது. ஆவணங்களைத் திருப்பி ஸ்விடனிடம் கொண்டு போய் திருத்தி எழுதிக் கொண்டு வர இண்டர்பொல் அமைப்பிற்கு இரண்டு நாட்கள் பிடித்தன. இப்போது எல்லாம் இருக்கிறது ஆனால், ஜூலியனை எங்கே போய் பிடிப்பதென குழம்பினர். இந்த இடைவெளியை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா 'நாந்தான் இருக்கேன்ல' என்று களத்தில் குதித்தது.


பொதுவாக ஒரு இணையதளத்தின் பெயர் என்பது தனி விஷயம் (domain name), அந்த இணையத்தளத்திற்கானக் கோப்புகளை அல்லது தகவல்களை வைத்திருக்கும் கணிணி/வழங்கி என்பது தனி விஷயம் (hosting server). இந்த இரண்டையும் கோர்த்து விடும்போது தான் நீங்கள் உங்கள் உலாவியில்(browser) இணையதளத்தின் பெயரை உள்ளிட்டதும் அத்தளத்தின் தகவல்களைப் பார்க்க முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இணையதளத்தின் பெயரும் அதன் கோப்புகளைக் கொண்ட வழங்கி பற்றிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் தான் இணையதளப் பெயர் வழங்கி (DNS - Domain Name Servers). இந்த DNS வழங்கிகள் செயல்படும் விதம் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். கடந்த மூன்று வருடங்களாக ஜூலியன் அமைத்திருந்த உலகளாவிய விக்கிலீக்ஸ் ஆர்வலர்களின் வலையமைப்பினையும், அவர்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு, எல்லாமே ஜூலியன் ஒரு ஆள் தான் என்று நினைத்த அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக நேரிடையாக, உலக மக்கள் அனைவரையும் சாட்சியாக வைத்துக் கொண்டு தனது அதிகாரங்களை ஜூலியனை நோக்கி பிரயோகித்து, விக்கிலீக்ஸ் எனும் தேன்கூட்டில் கை வைத்தது.

விக்கிலீக்ஸ் தளத்திற்கென்று உலகெங்கும் பல நிறுவனங்களிடமும் கோப்புகளை சேமித்து வைத்து தங்கள் இணைய தளத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக வழங்கி சேவைகளை (hosting servers) பெற்றிருந்தார்கள். அதன் மூலம் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டிலுள்ள வழங்கிகள் மூலமே விக்கிலீக்ஸ் தளத்தினை எளிதாக, விரைவாக பார்வையிட முடியும். விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய ஆவணங்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் இது போன்ற சில ஏற்பாடுகள் செய்து வைக்கப்படும். முதல் காரணம், ஒரு இடத்தில் தளம் முடக்கப்பட்டால் மறு இடத்தில் வேலை செய்யும். இரண்டாவது, கூட்டம் கும்மும்போது இணையப் போக்குவரத்து அதிகமாகி தளம் செயல்பட முடியாமல் போக வாய்ப்பிருப்பதால் இணையப்போக்குவரத்தினை பல்வேறு கோப்பு வழங்கிகளுக்கும் பிரித்தனுப்பி சமாளிக்க முடியும்.


இதற்குள் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸ் தளத்தினை அல்-குவைதா, பின் லேடன் அளவிற்கு அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல், அமெரிக்காவின் மீதான இணையத் தாக்குதல் என்றெல்லாம் குரலெழுப்பி கிட்டத்தட்ட விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்காமலும், ஆதரிக்காமலும் இருப்பது தான் தேசபக்தியின் அடையாளம் என்கிற அளவுக்கு பிரச்சாரம் செய்து தங்கள் முகங்களை ஊடகங்களில் காண்பித்து மகிழ்ந்தார்கள். இதையே வாதமாக வைத்து அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடியால் விக்கிலீக்ஸ் தள்த்திற்கான அனைத்து DNS சேவைகளும் முடக்கப்பட்டன, உலகப் புகழ்பெற்ற அமேசான் (Amazon.com) நிறுவனம் விக்கிலீக்ஸ் தளத்திற்காக தாங்கள் வழங்கி வந்த கோப்பு வழங்கிகளுக்கான(hosting server) சேவையினை நிறுத்தியது. இனி யாரும் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்க முடியாது என்று நினைத்து சரக்கடித்து கொண்டாட எத்தனிக்கும் முன்னரே தங்கள் தளத்தினை 30க்கும் மேற்பட்ட வெவ்வெறு புதிய இணையதள முகவரிகள் மூலம் பார்க்கலாம் என்று விக்கிலீக்ஸ் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப் பட்டது. 30 முகவரிகள், நூறாகி, நானூறாகி, இன்றைய தேதியில் ஐநூறுக்கும் மேலான இணைய தள முகவரிகளின் மூலம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் களைகட்டிய வேகத்தினைப் பார்த்து அமெரிக்கா திகைத்துப் போனது.

ஊரெல்லாம் ஊடக சுதந்திரத்திற்கு ஊர்வலம் போகும் அமெரிக்காவில் ஒரு ஊடக நிறுவனம் (அமேசான்) எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தப்படலாம் என்பதை உலகுக்குக் காட்டவே அந்நிறுவனத்திடம் வழங்கிச் சேவையினைப் பெற்றிருந்தோம் என்று ஜூலியன் அலட்சியமாக சொல்லி வைக்க, அமெரிக்காவின் இரத்த அழுத்தம் மேலும் எகிறியது.

ஒரே நேரத்தில் இத்தனை முகவரிகளில்(mirrored sites) எப்படி விக்கிலீக்ஸ் தளம் விரைவாக செயல்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஜூலியனின் கைது, கைதுக்கு எதிரான போராட்டங்கள், பின் பிணையில் வெளிவந்தது ஆகியவை அடுத்தப் பகுதியில்.

எங்கெல்லாம் ஆவணங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டு, மாற்றங்கள் தடுக்கப்படுகின்றன -

புகழின் உச்சாணிக் கொம்பில் ஊஞ்சல் கட்டி, ஆனந்தமாக ஆடியபடியே உலக நாடுகள் மத்தியில் தங்களை அலங்கோலமாக்கிய ஜூலியனுக்கு அமெரிக்கா கொடுத்த பதிலடி தான் ஸ்விடனைச் சேர்ந்த அன்னாவின் வழக்கு என்று பெரிதும் நம்பப்படுகிறது. காரணம் அன்னா ஏற்கனவே கியூபாவில் சில வருடங்கள் வசித்தவர். அங்கு பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பிற்கு உதவியதற்காக, கியூபாவை விட்டு துரத்தியடிக்கப்பட்டவர். அன்னா உதவிய அந்த அமைப்பிற்கான பொருளாதார வாய்க்கால் சி.ஐ.ஏ வின் பணப்பெட்டியில் சென்று முடிவது உபரித் தகவல். மேலும் வழக்குத் தொடர்ந்த சில மணி நேரங்களில் அன்னாவும், சோபியாவும் தாங்கள் ஜூலியனைச் சந்தித்து, உறவாடிய பொழுதுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட இணையப்பதிவுகள்( Facebook, twitter etc) அழித்து விட்டனர். 'அவர்கள் ஆட்சியில் திருடினார்களே, நாங்கள் என்றாவது கேட்டதுண்டா.. இன்று எங்களை மட்டும்.." என்று கலங்கியதும், இவனைக் குற்றம் சொல்வதற்கு அவன் யோக்கியமா என்ற நோக்கில் சிந்திக்க வைத்து, குற்றத்தை மறக்கடிக்கும் அதே காளிமார்க் பவண்டோ காலத்து தொழில்நுட்பம். ஜூலியனின் படுக்கையறைக்குள் மறைந்து கொள்ளப் பார்த்த அமெரிக்காவின் முயற்சி சிறிதளவுக்கே வெற்றி பெற்றது.

உலகத்தை துகிலுரிக்கும் இணையம் விக்கிலீக்ஸ் மர்மங்கள்-10

'நான்கு மாதங்களுக்கு முன்பு' என்று திரைப்படப் பாணியில் அறிவிப்புப் போட்டால் அடுத்த காட்சியில் ஸ்விடன் விமான நிலையத்தில் ஜூலியன் இறங்கி வரும் காட்சியினைக் கண்டு இன்புறலாம். சுமார் ஒரு வார காலம் தங்க வேண்டிய பயணம், பயணத்தின் நோக்கத்தினை "போரும், ஊடகங்களின் பங்கும்" என்ற தலைப்பில் இணையத்தின் போர்வாள் ஜூலியன் சிறப்புரையாற்றுகிறார், அலைகடலென வாரீர் என்று ஸ்விடன் முழுக்க விளம்பரப்படுத்தியாகி விட்டது. இப்பயணத்திற்காக ஜூலியனிடம் ஸ்விடனைச் சேர்ந்த ஒரு தேவலாயக் குழுமத்தின் ( Sweden association of Christian social democrats) செயலாளரும், ஊடகத் தொடர்பாளாருமான அன்னா (anna ardin, age: "31" ) தொடர்பு கொண்ட பொழுது ஜூலியனின் ஒரே நிபந்தனை, தனக்கு தங்குவதற்கு ரகசியமான இடம் வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியான நேரமது என்பதால் ஜூலியனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அந்நேரத்தில் ஜூலியன் என்ன கேட்டாலும் செய்து கொடுத்து தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதற்கு பலரும் வரிசை கட்டி நிற்கும் காலமது என்பதால், தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி நாட்களில் தனக்கு வேறொரு முக்கிய வேலை காரணமாக, தான் வெளியூர் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்றே திரும்புவதால் தனக்கு எந்த வித தொந்திரவும் இல்லை என்றும் தயங்காமல் சொல்ல, ஜூலியனும் சம்மதித்தார். ஸ்விடன் சென்றதும் அனைத்தும் சொன்னபடி நடக்க நிதானமாக இருந்த ஜூலியன் எனும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்பாராதவிதமாக (?) சென்ற வேலை முடிந்த காரணத்தால் நிகழ்ச்சிக்கு முதல் நாளே திரும்பி வந்த அன்னாவைக் கண்டதும் கரையைக் கடந்தது :). இருவரும் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை குறித்து சிறு விவாதத்திற்குப் பிறகு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.


அன்னா

இன்றையத் தேதிக்கு உலகிமே அண்ணாந்து பாக்கும் ஒரு நபர், இணையத்தின் புரட்சி நாயகன், அட்டகாசமான தோற்றமும், தொழிநுட்ப அறிவும் கொண்ட ஒருவருடன் தனியே தங்கும் வாய்ப்பு. செல்லுமிடமெல்லாம் ஜூலியனின் வலையில் சிக்குவதற்காக பெண்கள் தாங்களே கையில் வலையுடன் காத்திருந்த தருணத்தில், ஜூலியன் அன்னாவை நோக்க, அன்னா ஜூலியனை நோக்க..மேற்கத்தியக் கலாச்சாரத்தின் சம்பிரதாய வைபவங்கள் இருமன விருப்பத்துடன் இனிதே அரங்கேறின. இடையில் ஜூலியன் பயன்படுத்திய ஆணுறை கிழிந்து போனதும், சற்றேத் தயங்கிய அன்னா பின் உணர்ச்சி வேகத்தில் தொடர்ந்ததும் சரித்திர நிகழ்வுகள். மறுநாள் ஜூலியன் உரையாற்றும் நிகழ்ச்சி நன்றாகவே நடந்தது. நிகழ்ச்சியின் போது எல்லாரும் ஜூலியனைப் பார்க்க, ஜூலியன் மட்டும் முதல் வரிசையில் இருந்த ஒரு பிங்க் ஸ்வெட்டரையே அவ்வப்போது கவனிக்க, அங்கு ஒரு பூந்தோட்டமே பூத்துக்குலுங்கியது. பிங்க் ஸ்வெட்டரின் பெயர் சோபியா, வயது 26. நல்ல நேரத்திலும் :D ஒரு கெட்ட நேரமாக, ஒரே நேரத்தில் பல மைதானத்தில் விளையாட ஆசைப்பட்ட ஜூலியன், நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தின் போது சோபியாவின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டார்.


சோபியா

அன்றிரவு ஜூலியனுக்கு தனது வீட்டில் சிறப்பு விருந்தளித்த அன்னா, அதனை மகிழ்ச்சியோடு ட்விட்டரில் "உலகின் மிகச்சிறந்த, புத்திசாலியோடு இருக்கிறேன்" என்று பதிவு செய்தார். விருந்தோடு விருந்தாக சோபியாவிடம் தொலைபேசிய ஜூலியன், மறுநாள் அன்னாவிற்கு போக்குக் காட்டி விட்டு, மல்லிகைப்பூ, அல்வா சகிதம் சோபியாவை சந்திக்கச் சென்றார். அங்கும் இரவும் மறுநாள் காலையும் உணவோடு, உறவும் பரிமாறப்பட்டது. இரவுச் சாப்பாட்டுக்கு ஆணுறை பயன்படுத்திய ஜூலியன், காலை சிற்றுண்டிக்கு எதுவும் பயன்படுத்தவில்லை. முதலில் தயங்கிய சோபியா, பின்னர் தடுக்கவில்லை. அன்னாவின் வீட்டிற்குத் திரும்பிய ஜூலியன், பின்னர் ஸ்விடனை விட்டு வெளியேறி, விக்கிலீக்ஸ் தளத்தின் அடுத்த வெளியீட்டுக்கான (cable gates) வேலைகளில் ஆழ்ந்தார். இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. சோபியாவிற்கு மட்டும் ஜூலியனுடனான தனது காலைச் சிற்றுண்டி குறித்து மனக்கவலை(STD) இருந்து கொண்டே இருந்தது, அன்னாவுடன் தானே தங்கியிருந்தார் ஜூலியன், அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர, அதுவரை தனக்கு மட்டும் தான் கிடைத்தது என்ற கர்வம் கலகலக்க, கலவரம் பிறந்தது. ஸ்விடன் நாட்டு சட்டத்தின் படி அன்னா வழக்குத் தொடர்ந்தார், முதலில் விசாரித்த நீதிபதி வழக்கினைத் தள்ளுபடி செய்ய, பின்னர் மேல்முறையீட்டின் படி வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கும், ஜூலியனின் கைதுக்கும் உத்தரவிடப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் தகவல் வந்த தருணத்தில், ஒட்டு மொத்த இணைய உலகமும் அந்த பெண்களின் புகைப்படங்களைத் தேடித் தேடி ஓய்ந்தது உபதகவல் :).

இனி நடந்தவைகளின் சிக்கலான பக்கங்களைப் பார்ப்போம். ஸ்விடன் பெண்ணுரிமைக்குக் கட்டற்ற சுதந்திரமும், செல்லமும் கொடுக்கும் இடமென்பதால் இயற்கையாகவே 'பம்மல் K. சம்பந்தம்' சிம்ரன்கள் நிறைந்த நாடு. ஆணுறை இல்லாமல் உறவு கொண்டாலோ அல்லது உணர்ச்சி வேகத்தில் தடுக்க முடியாமல் போனாலோ, அடுத்த வாரம் ஆற,அமர வழக்குத் தொடுக்கலாம் (ஸ்விடன் செல்லும் அன்பர்கள், கவனம் :D ). மேற்சொன்ன இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலுமே தங்கள் சம்மதத்துடன் தான் அனைத்துமே நடந்த்துள்ளதென்பதை இருதரப்பினருமே மறுக்கவில்லை. ஆணுறை உபயோகிக்காமல் சோபியாவிடமும், கிழிந்து போனதாக அன்னாவிடமும் நிகழ்ந்தது இரண்டும், ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இல்லை அதெல்லாம் எதேச்சையாக நிகழ்ந்தது, இந்த வழக்கே அரசியல் பின்ணணி வாய்ந்தது என்பது ஜூலியனின் வாதம்.


இந்த வழக்குப் பிரச்சினை உச்சத்திற்கு வருவதற்குள் 'Cable gates' எனப்படும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். அனைத்து ஆவணங்களும் இரண்டு விஷயங்களை அம்பலப்படுத்தி அமெரிக்காவை நிலைகுலையச் செய்தது. ஒன்று அமெரிக்காவின் அனைத்து தூதரகங்களும் தாங்கள் செயல்படும் நாடுகளை வேவு பார்க்கின்றன. இரண்டு அந்தந்த நாட்டுத் தலைவர்களை முள்ளம்பன்னித் தலையா, டப்பாத் தலையா என்று கவுண்டமணியே கூசும் அளவுக்கு தனிப்பட்ட முறையில் விளித்திருந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளின் ஒற்றுமையின் மீதானத் தாக்குதல் என்றெல்லாம் ஹிலாரி ஊடகங்களில் ஒருபுறம் கபடியாடிக் கொண்டே, மறுபுறம் ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து 'அதெல்லாம் டூப்ளிக்கேட்டு.. ஏமாத்துறான்..நம்பாதீங்க" என்றெல்லாம் கெஞ்சிக் கொண்டிருந்தார். முதல் முறையாக வரலாற்றில் அமெரிக்காவை சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்த ஜூலியனை, ஸ்விடனின் சிற்றின்ப வழக்கு விவகாரங்கள் துரத்த, விக்கிலீக்ஸ் குழுவின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி ஜூலியன் இங்கிலாந்து பறந்தார். விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க தனது சகல அதிகாரங்களயும் பிர்யோகிக்க ஆரம்பித்திருந்தது அமெரிக்கா.


அமெரிக்காவின் முயற்சிகளை மீறி விக்கிலீக்ஸ் தளம் எவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறது, ஜூலியன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்ணணி என்ன? இது சம்பந்தப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டா அல்லது அமெரிக்காவின் அரசியல் சதியா?, அதற்கான தொடர்புகள் குறித்த அலசல்கள், இங்கிலாந்து சென்ற பின் ஜூலியனுக்கு நடந்தவை ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.


"உண்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் உலகெங்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமே விக்கிலீக்ஸ் தளத்தின் குறிக்கோள்"