ராமநாதபுரம்: "கருஞ்சேற்றின் நடுவில் நின்று, பச்சை நாற்றெடுத்து, கூந்தலை கொய்து கட்டி, வாயாலே வரும் ஓசை, நெல் மூலம் தரும் காசை,' இது தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்மாவட்டத்தின் நிலைமை. ஆட்கள் பற்றாக்குறை, இயந்திரங்களின் ஆளுமை, இயற்கையின் இடர்பாடு போன்றவற்றால் நடவுப்பணிக்கு மானாவாரிகள் விடைகொடுத்துவிட்டன. விதைப்பு பணி விவசாய நிலங்களை ஆக்கிரமித்துவிட்டன. "எது எப்படியிருந்தால் என்ன,நமக்கு தேவை உணவு தானே,' என, நம்முள் கேள்விகள் எழலாம். நடவு என்பது விவசாயத்தை மட்டும் சார்ந்ததல்ல, நட்புக்கும், ஒற்றுமைக்கும் களமாய் திகழ்ந்ததை பலரும் அறிந்திருக்க வா#ப்பில்லை. கஞ்சி களையத்துடன், காலில் செருப்பின்றி, எறும்பின் வரிசையாய் நகர்ந்து வரும் கிராமத்து பெண்களை தீண்டாத கவிஞனின் பேனா நிச்சயம் பாவம் செய்ததே. அந்த அளவுக்கு நாட்டுப் புறப்பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் உயிர் கொடுத்தது நடவுப்பணி தான்.
வாய் நிறைய பேச்சுடன்,வரிசையாய் நிற்கும் இவர்களது கூட்டணி ஆட்சியில் பங்கத்திற்கு வாய்ப்பில்லை. பிள்ளைக்கு கொடுத்த உணவால், கொண்டு செல்ல ஏதுமின்றி வெறும் கையுடன் நடவுக்கு வரும் பெண்ணுக்கு, சகதோழிகள் தரும் கவளம், வயிரை மட்டுமல்ல மனதையும் நிரப்பியது. இவர்களது பணியின் நடுவே யாரேனும் வெள்ளை சட்டையுடன் வயலை கடந்தால், குலவை போட்டு அவர்களிடம் காசு பறிப்பதை நாம் அறிந்திருப்போம்.
இதற்கு பேர் வழிப்பறியல்ல, உயர்ரக ஆடை அணிந்து உழவுக்கு வந்தால், மனம் ஒத்துழைக்காது என்பதை புரியவைக்கவே இந்த ஓலம்(குலவை). முத்தாய்ப்பாக நடவுப்பணியில் தனிநபர் கூலி கிடையாது. மொத்தமாக பெறப்படும் பணத்தில் வருபவர்கள், செலவுகள் போக சமமாக பிரிக்கும் வழக்கம் இருந்தது. இன்று சீருடை புடவைகளுடன் வரும் சுயஉதவிக்குழுக்களுக்கு அன்றே முன்னோடியாக இருந்ததும், நடவுப்பணியே. உழுது செல்லும் டிராக்டரை பின் தொடர்ந்து விதை தூவும் முறைக்கு விவசாயிகள் தாவிய நாள் முதல், கூடி குலவையிட்ட குரல்கள் மறைந்து போனது. பெரிசுகள் மட்டும் இன்னும் நடுவுமுறையை பின்பற்றி வரும் நிலையில், நட்பையும், பரஸ்பரம் அன்பையும் பகிர்ந்தளித்த பாத்திரமாய் திகழ்ந்த, இம்முறை இன்னும் ஐந்து ஆண்டுகளில் பார்க்க முடியாத பொக்கிஷமாய் மறையப்போகிறது. காலத்தின் கட்டாயத்தில் இதை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.

2 கருத்துகள்:
in west bengal,during marriage ceremony,ladies make " KULAVAI " sound.
the "KULAVAI" sound prevail all over the world,including africa also.
but in tamil nadu , KULAVAI sound not make by ladies during marriage ceremony.

கருத்துரையிடுக