அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் செயல்படும் ஒன்ரூஃப் சாஃப்ட்வேர் நிறுவனம் “சைபர்கேஃபுரோ 6.0′ என்ற பெயரிலான புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளம் சார்ந்த இந்த சாஃப்ட்வேர் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியது.
சேவை மையங்கள், டெலி சென்டர்கள், நூலகம், பள்ளி, கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். மையங்களை செயல்படுத்துவது, வருமானம் கணக்கிடுவது, இணையதளத்தில் நகல் எடுப்பது போன்ற தகவல்கள், ஊழியர்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்வது, விற்பனை மற்றும் பில் போடுவது, கணக்கெடுப்பு உள்ளிட்ட பல பணிகளுக்கும் இந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்த முடியும்.
http://www.oneroof.com இணையதளம் மூலமான இந்த சாஃப்ட்வேரை சோதனை அடிப்படையில் பயன்படுத்திப் பார்ப்பதற்கான வசதியையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இப்புதிய சாஃப்ட்வேரை ஒரு மாதத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக