பெங்களூரு : கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட மொபைல் போன்களுக்கான மொபைல் பிரவுசரை மோசில்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மோசில்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் என்900 மாடல் போன்களுக்காக, மோசில்லா நிறுவனம் ஆல்பா பதிப்பிலான பென்னக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மொபைல் பிரவுசரை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இந்த புதிய பிரவுசர் எலெக்ட்ரோ லைசிஸ் மற்றும் லேயர்ஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரவுசரில் ஆட் ஆன்ஸ், பார் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, புக்மார்க்ஸ், பாஸ்வேர்ட்ஸ், பார்ம் பில் டேட்டா உள்ளிட் சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக