செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நினைவகம் வினாடி-வினா

கம்ப்யூட்டர், நினைவகம் இல்லாமல் செயல்பட முடியாது. இதில் உள்ள நினைவக வகைகளை எல்லாரும் அறிந்திருப்பதில்லை. ஆனால் அறிந்து கொள்வது, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தினை விடுவித்து, சிறப்பாக அதனைப் பயன்படுத்த வழி வகுக்கும். நினைவகம் குறித்த தகவல்களை நாம் எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறோம் என அறிய இந்த வினாடிவினா தரப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் தரப்படும் விளக்கம் நம் நினைவக அறிவை வளர்க்கும்.


1. எந்த வகை கம்ப்யூட்டர் மெமரி நிலையானதும், மாறா நிலை கொண்டதுமான தன்மையுடையது?

அ. RAM,, ஆ.ROM, இ.Cache

ஆ. ROM எனப்படும் Read Only Memory . . இதனைப் படிக்கத்தான் முடியும். இந்த நினைவகத்தில் உள்ள தகவல்களை மாற்றி எழுத முடியாது. இது ஒரு புரோகிராம் செய்யப்பட்ட மின் சுற்று. மின் சக்தி இந்த சுற்றுக்குச் செல்வதை நிறுத்தினாலும், புரோகிராம் மூலம் பதியப்பட்ட தகவல்கள் மாறா நிலையில் இருக்கும்.

2. கம்ப்யூட்டரின் நினைவகங்களின் அடுக்கில், டேட்டா முதலில் எந்த நினைவகத்திற்குச் செல்லும்?

அ.RAM, ஆ.ROM, இ. BIOS

அ. RAM.. மவுஸ் அல்லது கீ போர்டாக வெளி சாதனமாக இருந்தாலும், அல்லது கம்ப்யூட்டரின் உள்ளிடத்திலிருந்து வரும் டேட்டாவாக இருந்தாலும், அவை RAM ஐத்தான் முதலில் அடையும்.

3. BIOS என்பது எதனைக் குறிக்கிறது?

அ. Biological Internet Operating System

ஆ. Binary Inner/Outer Stages

இ. Basic Input Output System.

இ. Basic Input Output System கம்ப்யூட்டருக்கான அடிப்படைத் தகவல்களை இது முதலில் கம்ப்யூட்டரின் சிபியுவிற்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டரில் எங்கு டேட்டா ஸ்டோர் செய்யப்படுகிறது, எந்த வரிசையில் கம்ப்யூட்டர் பூட் ஆகிறது, சிஸ்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் சில அடிப்படைத் தகவல்களை இது அனுப்பும்.

4. ஒரு கம்ப்யூட்டரின் செயல் வேகம் குறையும் போது, மெமரியின் எந்த பகுதி அதிக வேலையைப் பெறுகிறது?

அ. RAM, ஆ.ROM, இ. Flash Memory

அ. RAM. கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் RAM மெமரியில் தான் லோட் செய்யப்படுகின்றன. எனவே ஒரே நேரத்தில், பல புரோகிராம்களின் செயல்பாடுகள் மேற்கொள்ளப் பட்டால், ராம் நினைவகம் அதிக வேலைப் பளுவினைப் பெறுகிறது. இதனால் கம்ப்யூட்டரின் செயல் வேகம் குறையும். சில வேளைகளில் தவறான செயல்பாடு கூட ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

5. Clock Cycle என்பது என்ன?

அ. கம்ப்யூட்டரின் கடிகாரத்தின் துல்லிய தன்மை

ஆ. சிபியுவின் செயலாற்றும் வேகம்

இ. பூட் செய்த பின்னர், மெமரியில் இருந்து சிலவற்றைப் பெற்று, கம்ப்யூட்டர் தன் செயல்பாட்டினை மீளப் பெற எடுக்கும் கால அவகாசம்.

ஆ. சிபியுவின் செயலாற்றும் வேகம். இது hertz என்ற அலகினால் அளக்கப்படுகிறது. இப்போதைய ப்ராசசர்கள் கிகா ஹெர்ட்ஸ் என்ற அதிவேக அளவில் செயல்படுகின்றன.

6. Memory Cache என்பது என்ன?

அ. ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள கம்ப்யூட்டருக்கு ஒதுக்கப்பட்ட நினைவக இடம்.

ஆ. இப்போது பயனற்ற நிலையில் உள்ள மெமரி சாதனம்

இ. தற்காலிக நினைவக இடம். உடனடியாகச் செயலாற்ற சில டேட்டாக்கள் இங்கு தங்கவைக்கப்படும்.

இ. இது டேட்டா தருவதற்கான ஒரு தற்காலிக நினைவக இடம். சிபியுவின் செயல் வேகம் மிக அதிகமாக இருக்கையில், RAM மெமரியிலிருந்து வழங்கப்படும் டேட்டா பற்றாக்குறையாக ஆகிவிடும். இந்நிலையில் Cache Memory உதவுகிறது. இதில் தற்காலிகமாகத் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. இதனால், RAM மெமரி செல்லாமல், சிபியு கேஷ் மெமரியிலிருந்தே தனக்கு வேண்டிய தகவல்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் RAM மெமரியிலிருந்து டேட்டா எடுக்கப்படும் நேரம் மிச்சமாகிறது. கம்ப்யூட்டரின் சிபியு வேகமாகச் செயல்பட முடிகிறது.

7. கம்ப்யூட்டர் உலகில் Bus Width என்பது எதனைக் குறிக்கிறது?

அ. கம்ப்யூட்டரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்கையில் பயன்படுத்தும் வாகனத்தின் அளவு.

ஆ. கம்ப்யூட்டர் போர்ட்டில் உள்ள பின்களின் எண்ணிக்கை

இ. சிபியுவிற்கு ஒரே நேரத்தில் அனுப்பப்படும் தகவல் பிட்(Bit)களின் எண்ணிக்கை

இ. கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் ராம் மெமரியின் வேகம் இரண்டு செயல்பாடுகளில் அடிப்படையில் உள்ளது. அவை Bus Width மற்றும் Bus Speed. . இதில் Bus Width என்பது சிபியுவிற்கு RAM எந்த அளவில் தகவல்களை அனுப்ப முடியும் திறன் கொண்டதாய் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

8. கம்ப்யூட்டர் ஒன்று தன் பணியினைத் தொடங்குகையில் எந்த மெமரி முதலில் இயங்கத் தொடங்குகிறது?

அ. RAM, ஆ .ROM, இ. BIOS

இ. BIOS கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதே, BIOS தான் முதலில் இயங்கி கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைத் தகவல்களைத் தருகிறது.

0 கருத்துகள்: