புதிதாக இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பெருகியுள்ள அகதிகளின் எண்ணிக்கை காரணமாக இவ்வருட மத்தியிலேயே உலகம் முழுதும் உள்ள மொத்த அகதிகளின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட அதிகரிக்கும் வாய்ப்பு பெருகி விட்டது என்றும்
இதுவே முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாகவும் ஐ.நாவின் அகதிகள் முகவர் பிரிவு தெரிவித்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா இன் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் செய்தி வெளியிடுகையில் இன்று சற்றும் தளர்வில்லாத உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே என்று கூறுகிறார்.
2008ம் ஆண்டு வீடிழந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 42 மில்லியன் எனவும் இது 2007ம் ஆண்டை விட 700,000 குறைவு என்றும் ஐ.நாவின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரைக்கும் முறையான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படாத 2009 ஆண்டின் கணக்கெடுப்பு இலங்கை,பாகிஸ்தான்,சோமாலியா ஆகிய நாடுகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களால் நிச்சயம் தலையெடுக்கும் என கட்டெரிஸ் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டின் கணிப்பின் சில குறிப்புக்கள் -
வீடிழந்த மக்களின் எண்ணிக்கையில் (42 மில்லியன்) 15.2 மில்லியன் பேர் அகதிகள், 26 மில்லியன் பேர் உள்நாட்டில்
இடம்பெயர்ந்தவர்கள்,827 000 பேர் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள்
மொத்த வீடிழந்தோர் எண்ணிக்கையில் (42 மில்லியன்) வீடு திரும்பியவர்கள் வெறும் 2 மில்லியன் மக்கள் (2007ஐ விட 1.4 மில்லியன்
குறைவு) - ஆகவே 2007 ஐ விட சென்ற வருடமே அதிக எண்ணிக்கை அகதிகள் எஞ்சியுள்ளனர்.
அகதிகள் எண்ணிக்கையில் 5 இல் 1 பங்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு சொந்தம்
இவ்வெண்ணிக்கையில் 47 வீதம் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்
ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கவிருந்ததால் 2008 செப்டம்பரில் இருந்து இடம்பெயர ஆரம்பித்த மக்கள் தொகை காரணமாக பாகிஸ்தானே வளர்ச்சியுறும் நாடுகளில் அதிக எண்ணிக்கை அகதிகளைக் கொண்டிருந்தது. (1.8 மில்லியன்)
ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் அரைப்பங்கைக் கொண்டிருந்தன.
2009 ஆண்டு இதுவரை மேற் கொள்ளப்பட்ட உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் -
2004இல் சுனாமி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் சிறிலங்காவில் இடம்பெயர்ந்தோர் 5 இலட்சத்திற்கும் அதிகம். இதில் ஐ.நா அறிக்கைப் படி 2009 இன் முதல் 3 மாதங்களில் மட்டும் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகம்.
பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான யுத்தத்தால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 30 இலட்சம்.
சோமாலியாவில் 17 வருடங்களுக்கு முன் உடைந்த மத்திய அரசாங்கத்தால் அங்கு இரு தலைமுறைகளாக அகதி முகாமிலேயே வசித்து வரும் மக்கள் தொகை தற்போது 13 இலட்சம். மேலும் 4 இலட்சம் சோமாலியர்கள் கென்யா யேமென் போன்ற அயல் நாடுகளில் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக