மொபைல் போன் மூலம் பார்க்கப்படும் ஆபாச இணையதளங்களைத் தடை செய்ய கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மொபைல் போன் நிறுவனங்களுடன் பேசி தடை ஏற்படுத்த வேண்டுமென்று மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றொர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தனை தொடர்ந்து இலங்கையிலும் இணையதளங்களுக்கு தடை?
சென்ற வாரத்தில் 450 இணையதளங்களை பாகிஸ்தான் தடை செய்தது.இஸ்லாமிய விரோத கருத்துக்கள் அதில் இடம் பெற்றதாலேயே இத்தடை என சொல்லப்பட்டாலும், பாகிஸ்தான் நலனுக்கு ஏதிரான கருத்துக்களை அந்த தளங்களில் தரவிறக்கப்பட்டிருந்ததாவும் கருத்து நிலவுகிறது.
அதை போல் இலங்கையிலும், ”இலங்கையின் நலனை பாதிக்கும் வகையில் செயல்படும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாவும், அப்படிப்பட்ட இணையதளங்கள் கண்டறியப்பட்டு வருவதாவும் இந்த தடை நீதிமன்றம் மூலமோ அல்லது சம்மந்தப்பட்ட துறையிலிருந்தோ விரைவில் வரலாம்” என்று கொழும்பு ஊடகவியளாலர்கள் நான்கு நாட்களாகவே ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியாக சொல்லிவருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக