புதன், 18 ஆகஸ்ட், 2010

புதிய இலவச தமிழ் அகராதி

தமிழர்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் இலவச தமிழ் அகராதியை அண்ணா பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.




அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், மதன் கார்க்கி (கவிஞர் வைரமுத்துவின் மகன்), ஆசிரியர்கள் கீதா, ஷோபா, ரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளனர். இதன் முகவரி www.agaraadhi.com



ஏற்கனவே, இணையதளத்தில் பல தமிழ் அகராதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அளித்திடாத 20 சேவைகளை இந்த புதிய அகராதி அளிக்கிறது. தமிழ்ச் சொல் உருவாக்கம், பிழைத்திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்கள் பயன்பாடு, தொடர் சொற்கள், திருக்குறள் பயன்பாடு, பாரதியார் மற்றும் ஔவையார் பாடல்களில் உள்ள சொற்களின் பயன்பாடு உள்ளிட்ட பல பயன்பாடுகள் இதில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சில சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வரிகளையும் இதனுடன் இணைத்துள்ளது வித்தியாசமாக உள்ளது.

1 கருத்துகள்:

sariya Chandrasekaran சொன்னது…

இந்திய வரலாறு ஓர் அறிமுகம் தமிழ் மொழிபெயர்ப்பு-பக்-156ல் டி.டி.கோசாம்பி: ரிக்வேதப்பாடல்களில் செயர்ஸ்(Sears) என்பது ஒரு பிராமண-பார்ப்பன இனத்தரரைக் குறிக்கிறது என்கிறர்; தமிழில் சேயர் என ஒரு சொல் உள்ளது: அகம் 83:
"வலம்புரி அராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளத்தலை பொலியச் சூடி
கறையடி மடப்பிடி கானத்து அலறக்
களிற்றுக்கன்று ஒளித்த உவகையர்; கலிசிறந்து
கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து
பெரும்பொழி வெண்தார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்;
நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்
சேயர் என்னாது அன்புமிகக் கடைஇ
எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே" என கரவேலன்; (கறையடி) கரிகால் பிறக்கும்வரை பாதுகாத்த நிலையில்; வசிட்ட பிராமணர் வேங்கடத்தைக் கைப்பற்றிய போதிலும் சேயர் என ஒதுக்காமல் அன்புமிகக் கொண்டு தனது நெய்தல்நாட்டைக் கருதினான் எனக்காண்கிறோம். யானை, பிடி, களிறு, கன்றுகளும் விலங்குகளைக்குறித்தனவல்ல; மகதத்தின் வாரிசுகளையும், களிற்றுக்கன்று - கரிகால் துயரங்களையும் குறிப்பன. 'கலிசிறந்து' எதைக்குறிக்கிறது? புறம் 178:
"கந்துமுனிந் துயிர்க்கும் யானையடு பணைமுனிந்து
கால்இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் . ."கரவேல் குறித்த பல அடிகள் நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காஞ்சிப்புராணம்: கருக்காமக் கோள்நிமிர வினையனைத்தும்
ஒருங்கெய்திக் கலகஞ்செய்யும்
தருக்காமக் கோட்டியெலாம் அறவெறிந்தாம்
இனியென்னும் தகைசாலன்பு
கருக்காமக் கோட்டினார் சேயரை.. .." எனக் குறிப்பிடுகிறது; மேலும் பல தமிழ்ப் பாடல்களில் உள்ள இச்சொல்லுக்கான பொருள் என்ன? Contact e mail: sariya.aivumaiyam@gmail.com