`பிளாக்பெர்ரி’ செல் போன்களில், தகவல் சேவை மூலம் பெறப்படும் மற்றும் அனுப்பப்படும் தகவல்கள், சங்கேத குறியீடுகளாக இருப்பதால், அவற்றை உளவுத்துறை இடைமறித்து படிக்க முடியவில்லை.
இது தீவிரவாதிகளுக்கு வசதியாக அமைந்துவிடும் என்பதால், இந்த தொழில் நுட்பத்தை மாற்ற ஆகஸ்டு 31ஆம் தேதி வரை, `பிளாக்பெர்ரி’ செல்போன்களை தயாரிக்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு `கெடு’ விதித்திருந்தது. அப்படி மாற்றாவிட்டால், `பிளாக்பெர்ரி’ செல்போன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இந்த நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள், தகவல்களை உளவுத் துறை படிக்கும் வகை யில் தொழில் நுட் பத்தை ஓரளவு மாற்று வதாக ரிசர்ச் இன் மோஷன் நேற்று அறி வித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில் நுட்பத்தை முற்றிலும் மாற்றுவதாக உறுதி அளித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக