செவ்வாய், 28 டிசம்பர், 2010

நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்.

இணையதளம் ஒன்று தொடங்கினால் மட்டும் போதுமா அதில்
எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்வதும் நம் கடமை தான் ,
ஆங்கில இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழைகளை எளிதாக
சுட்டிக்காட்டி சரி செய்ய ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

மைக்ரோசாப்ட் வேர்டுல் கூட Spell check என்று சொல்லக்கூடிய பிழை
திருத்தி வந்துவிட்டது இந்த் இணையதளம் அப்படி என்ன புதிதாக
திருத்திவிடப்போகிறது என்று சொல்லும் அனைவரும் பயன்படுத்திப்
பார்க்க வேண்டிய தளம்.
இணையதள முகவரி : http://orangoo.com/spellcheck
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்
காட்டியபடி இடது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின்
ஆங்கில வார்த்தைகளை காப்பி செய்து Spell check your text now என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக நாம் கொடுத்த
வார்த்தையில் பிழை இருக்குமானால் அதை சுட்டிக்காட்டி அதுவே
திருத்தவும் செய்கிறது. வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் நம்
இணையதள முகவரியையும் நம் இமெயில் முகவரியும் கொடுத்து
Spell Check your website now என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
வரும் திரையில் அடுத்த சில நிமிடங்களில் நம் தளத்தில் இருக்கும்
பிழைகளை சுட்டிக்காட்டி நமக்கு இமெயில் வருகிறது. இணையத்தில்
பெரும்பாலும் பயன்படுத்தும் வார்த்தையை கொண்டு Spell Check
செய்வதால் இது மற்ற Spell Checker ஐ விட சற்று உபயோகமாகவே
உள்ளது.இனி ஆங்கிலத்தில் இணையதளம் ஆரம்பிக்க ஆங்கில
இலக்கணம் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லை இதன் மூலம் எளிதாக பிழைகளை திருத்திக்கொள்ளலாம்.

0 கருத்துகள்: