சென்ற ஆண்டில் இணையத் தேடல்களில் இந்தியாவில், பன்னாட்டளவில் எது மிகவும் பிரபலமாய் இருந்தது என்ற தகவல் வெளிவந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பான செய்திகளைத் தந்த ஆண்டாகவே இருந்தது. இதனால், இணையத் தேடல்களும் அதிகமாகவே இருந்தன. நிறுவனத் தரகர் ராடியாவின் உரையாடல் டேப், ஆண்டு இறுதியில் ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தாலும், தொடர்ந்து இந்திய ரயில்வே தளம் தான் மிக அதிக எண்ணிக்கையில் தேடப்பட்ட, நாடப்பட்ட தளமாக இருந்தது.
இணையப் பயன்பாட்டில், இந்தியா 2010 ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருந்தது. இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் பயனாளர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி, ஏறத்தாழ 6 கோடி பேர் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். 74 லட்சம் பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்தி வந்தனர். இந்த ஆண்டின் பெரும்பாலான வளர்ச்சி கிராமப் புறங்களிலேயே இருந்தது. இந்த வேகத்தில் சென்றால், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளும் வயர்லெஸ் இணைப்பில் இருக்கும் என்று பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. சரி, இந்தியர்கள் இணையத்தில் எதனை விரும்பிப் பார்த்தனர்? கூகுள் வெளியிட்ட தகவல் தொகுப்பின்படி, அதிகம் தேடப்பட்டவை பாடல்களே. அடுத்ததாக பேஸ்புக், கூகுள் மற்றும் யு-ட்யூப் தளங்களே. இருப்பினும் இந்த பட்டியலில் முதல் இடத்தை வழக்கம்போல பிடித்திருப்பது இந்திய ரயில்வே டிக்கட் முன்பதிவு செய்திடும் தளமே. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடந்தேறிய அரசியல் பரபரப்புகள் பல இணையம் வழியாகவே மக்களுக்குத் தெரிய வந்தன. குறிப்பாக ராடியா டேப் உரையாடல்கள் பல யு-ட்யூப் தளங்களில் பதியப்பட்டு கேட்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இணையம் தொடர்பாக பெரும் சச்சரவு ஏற்பட்டது. கூகுள் தான் ஒத்துக் கொண்ட ஒப்பந்த வரையறைகளை மீறி விட்டதாக அறிவித்தது. இதனால், தன் சீன தளத்திற்கு வந்தவர்களை, தன்னுடைய ஹாங்காங் தளத்திற்கு கூகுள் திருப்பிவிட, இதனைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சீன அரசு அறிவித்தது. இதனால், இந்தியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்க இணைய தளங்கள் சீனர்களால் கைப்பற்றப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது விக்கிலீக்ஸ், சீன இணைய தேடுதளம் பைடு, இதற்கு ஒத்துழைத்ததாக விக்கிலீக்ஸின் தற்போதைய செய்தி அறிவிக்கிறது. பொதுவாக அமைதியாக இருக்கும் கூகுள் நிறுவனம், தன்னுடைய சீன செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக மிரட்டியது. அதனை ஒரு அளவில் மேற்கொள்ளவும் செய்தது. இன்னும் சீனாவிற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. வரும் ஆண்டு நிச்சயம் இணையத்திற்கு ஓர் உறுதியான வளர்ச்சியைத் தரும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வர்த்தகம் வளர்ந்து மக்கள் வாழ்க்கை வளம் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக