செவ்வாய், 28 டிசம்பர், 2010

நம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்.

நம் கேள்வியை தேடு பொறியில் சென்று தேடி கிடைக்கும்
இணையதளங்களை விட அந்த கேள்விக்கு சரியான பதில்
கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று என்னும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.


தேடுபொறியில் சாதாரண கேள்வி கேட்டால் கூட மிகப்பெரிய
அளவிற்கு பதிலும் விளம்பரமும் உள்ள இணையதளங்களை
சேர்த்தே கொடுக்கிறது எந்த பதில் சரியாக இருக்கும் என்று
தேடக்கூட நாம் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது
இந்த சுமையை குறைப்பதற்காகக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.snappyfingers.com

இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்குள்
நம் கேள்வியை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் கேட்ட கேள்விக்கான பதில் கிடைக்கும்
கூடவே பதில் இருக்கும் இணையதளமும் சேர்த்தே கிடைக்கும்.
பதிலுடன் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
அந்த தளத்தைச் சொடுக்கி மேலும் பல விபரங்கள் தெரிந்து
கொள்ளலாம். அடிக்கடி நமக்கு எழும் பல கேள்விகளுக்கான
விடை முதலில் தெரிவதும் இத்தளத்தின் சிறப்பு. கண்டிப்பாக
ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.

0 கருத்துகள்: