திங்கள், 27 டிசம்பர், 2010

தியானம் செய்ய குடும்பம் தடையா...?

   ல நேரங்களில் தொலைபேசியில் என்னுடன் உரையாடும் அன்பர்கள் குடும்ப வாழ்வில் இருப்பவர்கள் தியானம் செய்யலாமா? யோகம்பழகலாமா? என்றெல்லாம் கேட்கிறார்கள் வேறுசிலரோ இல்லறத்தார்கள் தியானம் பண்ணினால் பைத்தியம் பிடித்துவிடுமாமே? என்று அச்சத்தோடு கேட்கிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கான எனது பதிலே இன்றைய பதிவு


    தியானம் என்பது பற்றி தொன்றுதொட்டே பலர் பலவிதமாகக் கூறிவருகிறார்கள், தியானத்திலும் பலவகைகள் உண்டு, கல்யாணம் முடிந்து குழந்தைகளுடன் வாழ்ந்த பல ரிஷிகளைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்,


   அவர்களும் சக்தி மிகுந்தவர்களாகவே புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, இல்லறவாழ்வில் இருந்தே இறையருளைப் பெற்ற எத்தனையோ ஞானிகளை இன்றும் நாம் பார்த்து வருகிறோம்,


  குடும்ப வாழ்வில் இருப்பவர்கள் தியானம் செய்யக்கூடாது என்றால் இத்தகையவர்களை எதில் சேர்த்துக் கொள்வது?


    குடும்ப வாழ்க்கை என்பது முதலைகள் நிறைந்த குளத்தைப் போன்றது, முதலைகள் நம்மைக் கடிக்கக் கூடாது எனில் உடல் எங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு குளத்தில் இறங்க வேண்டும்,


   அதுபோல் குடும்ப வாழ்வில் பந்தபாச முதலைகள் நம் தியானத்தைக் கடிக்காமல் இருக்க இறை பக்தி என்ற மஞ்சள் பூசிக்கொண்டால் தியானத்திற்கும் யோகத்திற்கும் எந்த பங்கமும் ஏற்படாது,


   ஆனால் குண்டலினி போன்ற பயிற்சியில் ஈடுபடும்போது குடும்பத்தில் இருந்தாலும் பிரம்மச்சரியத்தை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்,

0 கருத்துகள்: