செவ்வாய், 28 டிசம்பர், 2010

நாளை செய்ய வேண்டிய வேலையை நிர்வகிக்க உதவும் Effective Task Reminder.

நாளை செய்ய வேண்டிய வேலையை குறித்து வைத்துக்கொள்ள
நமக்கு உதவுவது Remainder Note தான் என்றாலும் பல நேரங்களில்
எழுதி வைக்க நேரமில்லை , சில நேரங்களில் எழுதிவைத்ததை
படிக்க நேரமில்லை என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அந்த
வேலையை பற்றிய விபரங்களை அந்தந்த நாளில் நமக்கு இமெயிலில்
தெரிவிக்க ஒருத்தர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://pleasenotify.me


” தயவு செய்து எனக்கு ஞாபகப்படுத்து “ இது தான் இணையதளத்தின்
பெயர். இந்ததளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியினை
கொடுத்து என்ன வேலை எந்த நாள் செய்ய வேண்டும் என்பதையும்
வேலை பற்றிய விபரங்களையும் தட்டச்சு செய்து  எந்த இமெயில்
முகவரிக்கு ஞாபகப்படுத்த வேண்டுமோ அந்த இமெயில் முகவரியும்
கொடுத்து Send என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அருகிலே
Email -லில் எப்படி வரும் என்பதற்கான Preview -ம் கொடுக்கின்றனர்
எளிமையான முகப்பு பக்கத்தை கொண்டு வலம் வருகிறது.
இப்போது நாம் யாரிடம் பேசினாலும் எனக்கு இமெயிலில் ஒருமுறை
ஞாபகப்படுத்து என்று கூறும் அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.

0 கருத்துகள்: