செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.

ஆங்கிலக்கோப்பில் இருக்கும் Upper Case ( பெரிய எழுத்து) மற்றும்
Lower Case ( சிறிய எழுத்து ) – க்களை எளிதாக மாற்றலாம்.
மைக்ரோசாப்ட் வேர்டு இதே செயலை செய்தாலும் Proper Case
மற்றும் Sentence Case போன்ற வேலைகளையும் எளிதாக செய்ய
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


படம் 1
ஆங்கிலத்தில் பெரிய கோப்பு தட்டச்சு செய்து முடித்ததும் அதில்
சரியான இடத்தில் Upper case  மற்றும் Lower Case எழுத்துக்கள்
இருக்கிறதா என்று பார்ப்பது ஒரு பெரிய வேலை தான் ஆனாலும்
பல நேரங்களில் சரியான இடங்களில் எழுத்துக்கள் வருவதில்லை
இந்த எழுத்துப்பிரச்சினையை சரி செய்ய நமக்கு ஆன்லைன் -ல்
Case Converter உதவுகிறது.

இணையதள முகவரி : http://caseconverter.com

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கில
எழுத்துக்களை (Paste) கொடுத்து அதன் பின் Upper case , Lower Case
அல்லது Proper Case , Sentence Case வேண்டுமோ அதை
சொடுக்கினால் போது உடனடியாக் நாம் மாற்ற சொன்னதற்கு
மாறி நம் நேரத்தை மிச்சப்படுத்தும். அலுவலகத்தில் வேலை
செய்யும் நபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

0 கருத்துகள்: