பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம்களில் ஒரு சில செயல்பாடுகளை மேற்கொள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட கீ தொகுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், அதன் தொகுப்புகளில், எழுத்தின் அளவைப் பெரிதாக் கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கீ தொகுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை
Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + < என ஒரு வகை. Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. மற்ற கட்டளைகள் போல் இல்லாமல் இந்த இரண்டில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. பாண்ட் மெனு செல்லுங்கள். அருகே எண்கள் கொண்ட ஒரு சிறிய விண்டோ இருக்கும். இதனை விரித்தால், எழுத்தின் அளவு எவ்வளவு என்பதைக் காட்டும். இதில் எண்கள் 8 முதல் 12 வரையில் வரிசையாக இருக்கும். அதாவது 8,9,10,11 மற்றும் 12 எனத் தரப்பட்டிருக்கும். பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படி யானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? முதலில் கூறப்பட்ட இருவித கீ தொகுப்புகள் செயல்பாட்டில் இதற்கான விடை உள்ளது. முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும். எடுத்துக் காட்டாக இந்த கட்டளையைப் பயன்படுத்து கையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும். 14ல் இருந்தால் குறைக்கும்போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளையைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன்றாகக் குறைக்கும், கூட்டும். அதாவது 12லிருந்து 13 செல்லும். 20லிருந்து குறைக்கும் போது 19 செல்லும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக