திங்கள், 27 டிசம்பர், 2010

பெரியாரிடம் இதுமட்டும் கேட்டால் போதுமா?

      வெங்காய விலை உயர்வை பற்றி பெரியாரிடம் கேட்கச் சொல்லி முதல்வர் கிண்டலடித்துள்ளார்



  பெரியாரிடம் இதுமட்டும் கேட்டால் போதுமா? இன்னும் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு குடும்பத்திலுள்ள மகன் மகள் மனைவி என அனைவரும் சொத்து சேர்த்த விதத்தைப்பற்றி கேட்க வேண்டாமா?



   தனக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி கட்சியும் அதிகாரப்பதவிகளும் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமே வரவேண்டும் என்று திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதை கேட்க வேண்டாமா?



  பகுத்தறிவு பாசறையில் புடம்போட்ட சிங்கம் எனக்கூறிக் கொண்டு மஞ்சள் துண்டு ராசிக்கல் மோதிரம் அணிந்து மகிழ்ந்திருப்பதை கேட்க வேண்டாமா?



   இலவசங்களை வாரி இறைத்து ஓட்டுக்களை பணங்கொடுத்து அறுவடை செய்யும் ராஜ தந்திரங்களை பற்றி கேட்க வேண்டாமா?



   என்றெல்லாம் மக்கள் நினைக்கிறார்கள் மக்களையும் அவர்களின் எதிர்பார்புகளையும் வேடிக்கையாகவே எப்போதும் கருதும் முதல்வர் அவர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்

0 கருத்துகள்: