மெதுவாக மக்களிடையே புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும், ஆபீஸ் 2010க்கும் மாற வேண்டும் என்கிற ஆசை வளர்ந்து வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற விரும்புகிறவர்கள் முன் உள்ள கேள்வி, இந்த புதிய சிஸ்டம் 32 பிட் ஆக இருக்க வேண்டுமா? அல்லது 64 பிட்டாக இருக்கலாமா? என்பதுதான். இது குறித்து பல வாசகர்கள் நமக்கும் கடிதங்கள் எழுதி உள்ளனர். இந்த பிரச்னை குறித்து இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டம் மாற விரும்புபவர்கள், முதலில் எந்த எடிஷனுக்கு மாறப் போகிறார்கள் என்பதனை முடிவு செய்திட வேண்டும். குறைந்தது மூன்று வகையான பிரிவுகள் உள்ளன. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இந்த மூன்றில் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சற்று விலை குறைந்தது. அல்டிமேட் விலை அதிகம். விலைக்கேற்ற வகையில் கூடுதல் வசதிகள் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
தனி நபர் பயன்பாட்டிற்கு, விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனே போதுமானது. மற்ற இரண்டும் பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கம்ப்யூட்டர் வல்லுநர்கள் பயன்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதனை முடிவு செய்த பின்னரே, 32 அல்லது 64 பிட் சிஸ்டம் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு? கீழே காணலாம்.
1. உங்கள் கம்ப்யூட்டரில், 64 பிட் இணையான சிபியு ப்ராசசர் இருப்பின், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷன் பதிய வேண்டும். இதற்கு கம்ப்யூட்டருடன் வந்த குறிப்புரையில் சிபியு குறித்த தகவல்களைப் பார்க்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவரிடம், 64 பிட் செக்கர் போன்ற புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.
2. 32 பிட் சிஸ்டத்தில் ராம் மெமரி யூனிட் 4 கிகா பைட் வரையறையுடன் கிடைக்கிறது. அதாவது, இன்னும் கூடுதலாக ராம் மெமரியை நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும், 4 கிகா பைட் மெமரி மட்டுமே செயல்படும். இதனை விலக்கி, கூடுதலாகச் செயல்பட வைக்க, நிறைய செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாகப் பயன்படுத்துவோருக்கு அது இயலாது. இந்த 4 கிகா பைட் ராம் மெமரியும் முழுமையாக விண்டோஸ் இயக்கத்திற்குக் கிடைக்காது. வீடியோ கார்ட் போன்ற சாதனங்கள் இந்த ராம் மெமரி இடத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றன. மைக்ரோசாப்ட், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷனில், ராம் மெமரியில் பயன்பாட்டிற்குக் கிடைப்பதனைத் தானாக வரையறை செய்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனுக்கு 16 ஜிபி, அல்டிமேட் மற்றும் புரபஷனல் எடிஷனுக்கு 192 ஜிபி என வரையறுத்துள்ளது.
3. 64 பிட் எடிஷனில் பல கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. டேட்டா எக்ஸிகியூஷன் பாதுகாப்பு மற்றும் கெர்னல் பாதுகாப்பு ஆகியன தரப்பட்டுள்ளன. இதனால் நம் பயன்பாட்டின் போது என்ன தடை ஏற்பட்டாலும், இழப்பு எதுவும் நேராது.
4. சில தடைகளும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குவதில் உள்ளன. இது சில பயனாளர்களுக்கு அதிகச் சிக்கலைக் கொடுக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டத்தின், 64 பிட் எடிஷனில், 16 பிட் அப்ளிகேஷன்கள் இனி இயங்கவே இயங்காது. எனவே பல ட்ரைவர் அப்ளிகேஷன்கள் மாற்றப்பட வேண்டும். சில ஹார்ட்வேர் சாதனங்களும் இதனுடன் இணைந்து இயங்காத நிலை ஏற்படும்.
5. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான 32 பிட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் தொடர்ந்து இயங்கும். ஆனால் சில அப்ளிகேஷன்கள் இயங்கா நிலை அல்லது (32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வேகத்தைக் காட்டிலும் ) மிக மிக மெதுவாக இயங்கும் நிலை ஏற்படும்.
6. விண்டோஸ் 64 பிட் எடிஷன்களில், விண்டோஸ் 7 இன்ஸ்டலேஷன் ஹார்ட் டிரைவில் சற்றுப் பெரிய அளவில் அமையும். விண்டோஸ் 7, 32 பிட் எடிஷன்களுக்கு, மைக்ரோசாப்ட் 16 கிகா பைட் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது. 64 பிட் எடிஷன்களுக்கு 20 கிகா பைட் இடம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
மேலே கூறியுள்ள தகவல்கள் இன்னும் உங்களுக்கு ஒரு தெளிவைத் தரவில்லை என்றால், உங்களிடம் உள்ள, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும், கட்டாயமாக நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களின் தன்மைகளைக் குறித்துக் கொண்டு, பின் மேலே கூறப்பட்டுள்ளவற்றை இணைத்துப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.
இருப்பினும் சுருக்கமாக ஒரு முடிவிற்கு வரலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிபியு, விண்டோஸ் 64 பிட் எடிஷனுக்கு இணைவாக இயங்குவதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியை 4 கிகாபைட் அல்லது கூடுதலான அளவிற்கு உயர்த்துவதாக இருந்தால், 64 பிட் விண்டோஸ் எடிஷன் இன்ஸ்டால் செய்திடலாம்.
ஆனால், நீங்கள் இன்னும் பழைய 16 பிட் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அல்லது அந்தக் காலத்து கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் இருந்தால், விண்டோஸ் 32 பிட் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னும் தெளிவு வேண்டும் என்றால், கீழ்க் காணும் தலைப்புகளில் இணையத்தில், மைக்ரோசாப்ட் தளங்களில் கிடைக்கும் குறிப்புகளைப் படிக்கலாம்.
தலைப்புகள்:
Windows 7 Upgrade Advisor
Windows 7 Compatibility Center
Windows 7 Application Compatibility List

0 கருத்துகள்:
கருத்துரையிடுக