திங்கள், 20 டிசம்பர், 2010

சச்சின் ஒரு சாகப்தம்

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.

50 சதம் வந்த பாதை
சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம்    அணி    இடம்    ஆண்டு
1. முதல் சதம்    இங்கிலாந்து    மான்செஸ்டர்    1990
2. 5வது சதம்    இங்கிலாந்து    சென்னை    1993
3. 10வது சதம்    இங்கிலாந்து    நாட்டிங்காம்    1996
4. 15வது சதம்    ஆஸ்திரேலியா    சென்னை    1998
5. 20வது சதம்    நியூசிலாந்து    மொகாலி    1999
6. 25வது சதம்    ஆஸ்திரேலியா    சென்னை    2001
7. 30வது சதம்    இங்கிலாந்து    லீட்ஸ்    2002
8. 35வது சதம்    இலங்கை    டில்லி    2005
9. 40வது சதம்    ஆஸ்திரேலியா    நாக்பூர்    2008
10. 45வது சதம்    வங்கதேசம்    மிர்பூர்    2010
11. 50வது சதம்    தென் ஆப்ரிக்கா    செஞ்சுரியன்    2010
ஆஸி.,க்கு எதிராக அதிகம்

தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:

அணி    சதங்கள்

1. ஆஸ்திரேலியா    11

2. இலங்கை    9

3. இங்கிலாந்து    7

4. தென் ஆப்ரிக்கா    6

5. வங்கதேசம்    5

6. நியூசிலாந்து    4

7. வெஸ்ட் இண்டீஸ்    3

8. ஜிம்பாப்வே    3

9. பாகிஸ்தான்    2

0 கருத்துகள்: