குவெர்ட்டி கீ போர்ட் மற்றும் தொடுதிரையுடன், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் முதல் மொபைல் போனாக மோட்டாரோலா நிறுவனத்தின் சார்ம் போன் வந்துள்ளது. குவெர்ட்டி கீ போர்டு உள்ளதால், மிக அகலமாக, ஆனால் 11.4 மிமீ தடிமனில், இந்த போன் 110 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.2.8 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ப்ராசசர் வேகமான இயக்கத்தினைத் தருகிறது. 3 எம்.பி. கேமரா, நெட்வொர்க் இணைப்பிற்கு 3.5 ஜி, புளுடூத், வை-பி மற்றும் ஜி.பி.எஸ்., ஆகியவை இதில் உள்ளன. வெப் மெயில் வசதியுடன் நிறுவனங்களுக்கான புஷ் மெயில் வசதியும் தரப்பட்டுள்ளது. மோட்டாரோலா தரும் கிறிஸ்டல் கிளியர் டாக் தொழில் நுட்பம் உள்ளதால், ஒலி வெளிப்பாடு வழக்கம் போல மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. தேவையற்ற சத்தத்தினை விலக்குவதற்கென தனி மைக் தரப்பட்டுள்ளது. 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. ரூ.13,990 அதிகபட்ச விலையிடப்பட்டுள்ள இந்த போன், இந்த அளவிலான விலையில் சிறந்த போனாகக் கருதப்படுகிறது
திங்கள், 20 டிசம்பர், 2010
மோட்டோரோலா சார்ம்
4:35 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக