வரும் 2011 ஆம் ஆண்டில், டேப்ளட் பிசி விற்பனைச் சந்தையில், பன்னாட்டளவில் 15% இடத்தைப் பிடிக்க ஏசர் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஐ.எம். மற்றும் சாம்சங் நிறுவனங்களைப் போட்டிக்கு இழுத்துள்ளது. இவை இரண்டும் இரண்டாவது இடத்தில் தற்போது, ஆப்பிள் நிறுவனத்திற்கு, அடுத்தபடியாக இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஐ-பேட் தான் தற்போது அதிகம் விற்பனையாகும் டேப்ளட் பிசி என்ற இடத்தைக் கொண்டுள்ளது. ஏசர் நிறுவனம் தொடக்க நிலை லேப் டாப் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்குவதில் தற்போது முன்னணியில் உள்ளது. இதே போல், டேப்ளட் பிசி விற்பனையிலும் இடம் பிடிக்க ஏசர் திட்டமிடுகிறது. சென்ற மாதம் ஏசர், மூன்று டேப்ளட் பிசி மாடல்களை வெளியிட்டது. இவற்றில் இரண்டு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திலும், ஒன்று விண்டோஸ் சிஸ்டத்திலும் இயங்குபவை ஆகும். திரை அகலம் மற்றும் ஹார்ட்வேர் பொறுத்து, இவற்றின் விலை 300 டாலர் முதல் 600 டாலர் வரையில் விலையிடப்படலாம். ஐ-பேட் தற்போது 500 டாலர் முதல் 800 டாலர் வரையில் விலையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 95% சந்தை இடத்தை ஆப்பிள் கொண்டுள்ளது. இந்த சந்தையில், ஐ-பேட் அடுத்து, சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி டேப்ளட் பிசி இடத்தைப் பிடித்தது. ஆர்.ஐ.எம். நிறுவன டேப்ளட் வர இருக்கிறது. ஆப்பிள் ஐ-பேட் அடுத்த ஆண்டில், இப்போதைய சந்தைப் பங்கினைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதலாகக் கை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.55 கோடி ஐ-பேட் விற்பனையாகலாம். ஏசர் சீனாவில் ஆண்டுக்கு 4 கோடி நோட்புக் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையினை இயக்கி வருகிறது. இங்கு டேப்ளட் பிசிக்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
திங்கள், 20 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக