வெள்ளி, 24 டிசம்பர், 2010

சீன வானொலியின் இணையப்பக்கம் - தமிழில்

சீன வானொலியின் இணையப்பக்கம் தமிழில்

இன்று எதோ ஒன்றை கூகுலில் தேடிக்கொண்டிருந்த போது (எப்போதுமே அது தானே வேலை) ஒரு தமிழ் இணையப்பக்கம் கிடைத்தது...

அது சீன வானோலியின் தமிழ்மொழி இணையப்பக்கம். அதில் அவர்கள் வெறும் வானோலி விசயங்களை மட்டும் தரவில்லை. சீனாவின் செய்திகள், வெளிநாட்டுச்செய்திகள் மற்றும் செய்தி தொகுப்பு ஆகியவைகளை முகப்பில் கொண்டுள்ளது.

இதன் மூலம் சீனப்பார்வையில் உலகத்தினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டும் வருகிறது.

மற்றும் வானோலியின் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவாக இணைப்பாக கொண்டுள்ளது. ஆனால் என்ன கஷ்டம் அது rm பைல் பார்மட்டில் உள்ளது. ரியல் பிளேயர் இருந்தால் இயக்கிக்கொள்ளலாம். இல்லையேல் ரியல் பிளேயர் கோல்டுற்க்கான பதிவிறக்க இணைப்பு கொடுக்கபட்டுள்ளது அதில் இறக்கிக்கொள்ளலாம்.

தமிழ் திரைப்பாடல்களின் தொகுப்பும் அதில் உள்ளது. அவற்றையும் தளமிறக்கிக்கொள்ளலாம்.

மேலும் ஒரு முக்கியமான விசயம் சீன மொழியை கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களூக்கு தமிழ் மூலமாக கற்றுக்கொள்ள அதில் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடங்கள் ஒலிப்பதிவாகவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்பபயணக்கட்டுரைகள், பண்பாடும் கதையும்,சமுக வாழ்வு,அறிவியல் உலகம், சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வு பாதுகாப்பு, விளையாட்டுச்செய்திகள் எனவும் மற்றும் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய விசயங்களையும் உள்ளடக்கி ஒரு முழு போர்டலாகவே இயங்கி வருகிறது.

உண்மையில் சீனத்தைப்பற்றி அறிந்து கொள்ள முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

இதோ அதற்கான லின்க் இங்கே.

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்

0 கருத்துகள்: