திங்கள், 20 டிசம்பர், 2010

இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் எழுச்சி

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் அபாரமான வளர்ச்சி கண்டு வருவது நாம் அறிந்தததுதான்.
இந்த வளர்ச்சியைப் போன்றே இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தையும் அபாரமான வளர்ச்சி கண்டு வருவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலைமை டிசம்பர் மாதம் வரையிலான 3வது காலாண்டிலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட 52 நாடுகளின் 9 ஆயிரத்து நூற்றுப் பதினேழு நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் இந்தியாவிலுள்ள 76 சதவிகிதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் 3வது காலாண்டில் அதிக அளவிலான பணி நியமனங்களைச் செய்ததது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பணி நியமன விகிதம் 5 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக' ஆன்டல் இண்டர்நேஷனல்' என்ற சர்வதேச பணி நியமன நிறுவனம் குறிப்பிடுகிறது. அடுத்த 3 மாதங்களுக்கும் இதே நிலைமையே நீடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும், பணி
நியமனங்களைப் பொறுத்த வரை 81 சதவிகித நிறுவனங்கள் தீவிரமாக இறங்கும் என்றும், ஹெல்த்கேர், உற்பத்தி, ரியல் எஸ்டேட், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., போன்ற துறைகளில் நான்காவது காலாண்டில் அதிகப் பணி நியமனங்கள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: