திங்கள், 20 டிசம்பர், 2010

சந்தையில் புதிய போன்கள்



எல்.ஜி.ஜி.எஸ்.108
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய வரவாக எல்.ஜி. ஜி.எஸ். 108 மொபைல் போன் வந்துள்ளது. இது ஒரு பட்ஜெட் விலை போன். அதிகபட்ச விலை ரூ. 1,298. இரண்டு அலை வரிசைகளில் இயங்கும் இந்த ஜி.எஸ்.எம்.  வகை போனில் 32 எம்பி மெமரி உள்ளது. கருப்பு வண்ணத்தில் பார்  வடிவில் உள்ளது. இதன் பரிமாணம் 103.9MM x 43.5MM x 12.9  மிமீ கேமரா, மெமரி ஸ்லாட் இல்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். எம்பி3 பிளேயர், வயர்லெஸ் ஸ்பீக்கர் போன் எப்.எம். ரேடியோ, பாலிபோனிக் ரிங் டோன்,1.5 அங்குல வண்ணத் திரை, டார்ச் லைட் ஆகியவை கிடைக்கின்றன. இணைக்கப்பட்டுள்ள  950mAh  பேட்டரி 20 மணி நேரம் தொடர்ந்து பேச திறன் அளிக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 48 நாட்கள் மின்சக்தி தங்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் காலக்ஸி  ஐ-5503
3ஜி போன் விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு காலக்ஸி ஐ-5503  மொபைல் போனை சாம்சங் இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது சாம்சங்  ஐ 5500 கார்பி எனவும் அழைக்கப்படுகிறது.  இதன் பரிமாணம் 108 x 56 x 12.3 மிமீ. எடை 102 கிராம். 2.8 கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.  யூசர்  இன்டர்பேஸ் பயன்படுத்துதலில் ஆக்ஸிலரோ மீட்டர் சென்சார், டச்விஸ் தொழில் நுட்பம், ஸ்பீக்கர் போன், எத்தனை முகவரிகளும் கொள்ளும் போன் புக், 170 எம்பி நினைவகம், டேட்டா பரிமாற்றத்திற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யூ லேன், புளுடூத், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை உள்ளன. 2 எம்பி கேமரா, ஸ்மைல் ஷாட் தொழில் நுட்பத்துடனும், ஜியோ டேக்கிங் வசதியுடனும் தரப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ,  அஎககு சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ். வசதி,கூகுள் சர்ச், மேப்ஸ், யு-ட்யூப் தள வசதிகள் என பலமுனை வசதிகள் கொண்டதாய் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் 1200 mAh  பேட்டரி 3ஜி பயன் பாட்டில் இருக்கையில் 375 மணி நேரமும்,  2ஜி பயன்பாட்டில் 521 மணி நேரமும் மின்சக்தியை தக்க வைக்கிறது.  தொடர்ந்து பேசுகையில் முறையே 9.5 மணி மற்றும் 6.5 மணி நேரம் கிடைக்கிறது.  இதன் அதிக பட்ச விலை ரூ. 8,846.

0 கருத்துகள்: