மல்ட்டி டச் ஸ்கிரீன் டேப்ளட் பிசி விற்பனச் சந்தையில் தற்போது சூடு பறக்கத் தொடங்கி உள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தன் காலக்ஸி டேப் என்னும் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்திய பின்னர், ஆப்பிள் நிறுவனம் தன் புதிய ஐ-பேட் சாதனத்தை, கொரியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன மனிதனின் டிஜிட்டல் வாழ்க்கையில் இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தும் என கே.டி. நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் கொரியாவில் ஆப்பிள் சாதனங்களை விற்பனை செய்திடும் உரிமையைப் பெற்றுள்ளது. புதிய ஐ-பேட் சாதனத்தை வாங்கிட, மக்கள் காலை 4 மணியிலிருந்து காத்திருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கே.டி. நிறுவனம் ஐ-பேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என பல மின் நூல்கள், சிறுவர்களுக்கான காமிக்ஸ், ஆறு செய்தித் தாட்கள், நூறு வார மாத இதழ்கள் ஆகியவற்றை இணைத்துத் தந்துள்ளது. இத்துடன் நிதி நிர்வாகம், கல்வி மற்றும் இசை சார்ந்த பல புரோகிராம்களும் தரப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி டேப் டேப்ளட் பிசி இதுவரை தன் விற்பனையில் 7 லட்சம் என்ற இலக்கினைத் தாண்டியுள்ளது. ஐ-பாட் விற்பனை 40 லட்சத்தினைத் தாண்டியுள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டில் டேப்ளட் பிசி மார்க்கட், ஆறு மடங்கு உயர இருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் 76 லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனையாகிய நிலையில், 2014ல் இது 4 கோடியே 60 லட்சத்தினை எட்டும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அறிந்தே, எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், மோட்டாரோலா, லெனோவா போன்ற நிறுவனங்கள், டேப்ளட் பிசிக்களைத் தயாரித்து விற்பனைக்கு வழங்க திட்டங்களை அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக