சனி, 18 டிசம்பர், 2010

வேர்டில் ஸ்லைட் ரெபரன்ஸ்

வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளீர்கள்.  குறிப்பிட்ட இடம் ஒன்றில், நீங்கள் இந்த டாகுமெண்ட்டில் உள்ள தகவல்களைக் காட்டும் வகையில் பிரசன்டேஷன் பைல் ஸ்லைட் காட்டப்பட்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறீர்கள். அப்படியானல் அதற்கான லிங்க்கினை, இந்த வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்க வேண்டும். முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு அமைப்பது, இங்கு பார்க்கலாம்.
இந்த வகையான செயல்பாடு மூலம் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளுக்கிடையே ஒரு நல்ல இணைப்பு உருவாக்கப்படுகிறது.
1. வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள, எந்த டெக்ஸ்ட்டுடன் ஸ்லைடுக்கான ஹைப்பர் லிங்க் ஏற்படுத்த விரும்புகிறீர்களோ, அதனை ஹை லைட் செய்திடவும்.
2. அடுத்து,  Insert   மெனுவில் Hyperlink   என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Insert Hyperlink   டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3 .Link to File அல்லது   URL field   என்பதில், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலின் முழு பாத் அமைக்கவும். விருப்பப்பட்டால், பிரவுஸ் என்பதில் கிளிக் செய்து, அந்த பைலைத் தேர்ந்தெடுக்கலாம். பைலுக்கான வழிக்கான குறியீடு தானாக அமைக்கப்படும். இந்த குறியீடு எடுத்துக் காட்டாக, C:\My Documents\ Presentations\sample.ppt.  என அமையலாம்.
4. இந்த பைல் பெயரின் இறுதியில், ஒரு அடையாளத்தை அமைத்து, அதனைத்தொடர்ந்து ஸ்பேஸ் எதுவும் விடாமல்   அந்த ஸ்லைடின் எண்ணை அமைக்கவும். எனவே இந்த ஹைப்பர் லிங்க்கிற்கான முழு முகவரி  C:\My Documents\Presentations\sample.ppt#42   என அமையலாம்.
5.அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

வேர்ட் 2000 ,வேர்ட் 2002 மற்றும் பின்னர் வந்த தொகுப்புகளில் அமைக்க:
1. ஹைப்பர் லிங்க் இணைக்க விரும்பும் டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து, Insert மெனுவில் Hyperlink   என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Insert Hyperlink   டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. பின்னர், இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள, Existing Fileஅல்லது வெப் பேஜ் (Web Page)  பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. இனி,  Type the File  அல்லது    Web Page Name  பைல் பெயரினை மேலே கூறியவாறு அமைக்கவும்.
5. அதே போல ஸ்லைடின் எண்ணையும் அமைக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

ஸ்லைட் எண் தெரியாவிட்டால் என்ன செய்வது? கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலைத் திறந்து இயக்கவும்.
2. வேர்ட் டாகுமென்ட்டில் ஹைப்பர் லிங்க்காக இணைக்க விரும்பும் ஸ்லைடுக்குச் செல்லவும். அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3.அடுத்து கண்ட்ரோல்+சி அழுத்தி அதனைக் காப்பி செய்திடவும்.
4.இப்போது வேர்ட் சென்று டாகுமெண்ட்டினைத் திறக்கவும்.
5. எங்கு ஹைப்பர் லிங்க்கினை இடம் பார்த்து வைக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.
6. அடுத்து, எடிட் மெனு திறந்து, அதில்  Paste as Hyperlink  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
7. இந்த ஹைப்பர் லிங்க்கினை நீங்கள் விரும்பும் வகையில் எடிட் செய்து கொள்ளலாம்.

0 கருத்துகள்: