ஏறத்தாழ ஒரு கோடி இந்திய கிராம மாணவர்கள் வசிக்கும், படிக்கும் இடங்களில் மின்சாரம் இல்லை. அதாவது அவர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது என்னவென்று தெரியாது என்று இந்த செய்தி நமக்கு அறிவிக்கிறது.
ஆனால், ஹைதராபாத் அருகே உள்ள கிராமங்களில் படிக்கும் மாணவர்கள், ஐ-ஸ்லேட் எனப்படும் ஸ்லேட் பிசியைச் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்துள்ளனர். இவர்களுக்கு மின்சார வசதி அளிக்கப்படாத சூழ்நிலையில் எப்படி பயன் படுத்தினார்கள் என்ற கேள்வி எழலாம். இந்த டேப்ளட் பிசிக்கள், சூரிய ஒளியில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் பிசிக்கள். இந்த சோலார் டேப்ளட் பிசியினை, ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா பாலம் என்பவர் உருவாக்கி யுள்ளார். இவரின் உருவாக்கத்திற்குப் பின், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், கிராமங்களுக்கான வளர்ச்சி மற்றும் கற்றல் குறித்த பவுண்டேஷன் அமைப்பு மற்றும் ஸ்விட்சர்லாந்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோ டெக்னாலஜி மையம் இணைந்து இந்த சோலார் டேப்ளட் பிசிக்கு வடிவம் கொடுத்து, சோதனை செய்வதற்காக, இந்திய கிராம மாணவர்களுக்கு அதனைப் பயன் படுத்தும் முறைகளைக் கற்றுக் கொடுத் துள்ளது. 10 லிருந்து 13 வரையிலான வயதுள்ள மாணவர்கள் இதனை ஆர்வத் துடன் கற்றுப் பயன்படுத்தி யுள்ளனர். இதற்கு முன் இவர்கள் கம்ப்யூட்ட ரையோ, வீடியோ கேம் சாதனத் தினையோ பார்த்தது கூடக் கிடையாது. இந்த திட்டம் வெற்றி அடைந்ததனால், மத்திய அரசு குறைந்த விலையில் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தில் சுறுசுறுப்பாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக