திங்கள், 20 டிசம்பர், 2010

தோஷிபாவின் புதிய டேப்ளட் பிசிக்கள்

வரும் 2011 ஆம் ஆண்டில், தோஷிபா நிறுவனம் மூன்று புதிய டேப்ளட் பிசிக்களை அறிமுகப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது. தைவான் நாட்டில் உள்ள நிறுவனங் களிடமிருந்து இவற்றைப் பெறுகிறது. இந்த மூன்று டேப்ளட் பிசிக்களும், மூன்று வெவ்வேறான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் கொண்டிருக்கும். விண்டோஸ் 7, கூகுளின் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இரண்டு மாடல்களில் 10.1 அங்குல திரையும், மற்றதில் 11.6 அங்குல திரையும் தரப்படும்.   ஏழு அங்குலத் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களையும் தோஷிபா நிறுவனம் வெளியிட உள்ளது. இவை இந்நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற் சாலையிலேயே தயாரிக்கப்படும். இதிலிருந்து இவை தோஷிபாவின் ஸ்மார்ட் போனைக் காட்டிலும் சற்று மேம்படுத்தப் பட்டவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

0 கருத்துகள்: