திங்கள், 20 டிசம்பர், 2010

புல்லட் லிஸ்ட்டில் புதிய நம்பர் தொடங்கிட

எண்களைக் கொண்டு வரிசையாக லிஸ்ட் ஒன்றை வேர்டில் தயாரிக்கிறோம். பின் அதில் லைன் பிரேக் கொண்டு வந்து மீண்டும் நார்மல் ஸ்டைலுக்கு வருகிறோம். ஆனால் இதன் பின் மீண்டும் லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்கையில் எண்கள் முந்தைய லிஸ்ட்டின் இறுதி எண்ணைத் தொடர்ந்து வரும். நாமே அப்படி இருக்க வேண்டும் என விரும்பினால் இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் லிஸ்ட் புதியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் என்ன செய்வது? இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும்  மிக மிக எளிமையான வழி  ஒன்று உள்ளது. 
எந்த இடத்தில் புதிய லிஸ்ட் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்தில் ஒரு ரைட் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும்  மெனுவில் இரண்டாவதாக உள்ள  Restart Numbering  என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி லிஸ்ட் புதிய எண்களுடன் தொடங்கும். ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் இந்த ஆப்ஷன் பிரிவு இல்லை என்றால் என்ன செய்வது?  கிடைக்கும்  மெனுவில் Bulletes and Numbering  என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். அதில்  Numbered  என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Restart Numbering  என்ற பட்டன் அருகே கிளிக் செய்து அதனைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி புதிய லிஸ்ட்டில் புதிய எண்கள் தொடக்கத் திலிருந்து தோன்றும். 

0 கருத்துகள்: