உங்கள் விட்டில் கணினி மற்றும் இண்டெர்நெட் வசதி இருப்பின், அதை குழந்தைகள் பயன்படுத்தும் போதும் உங்கள் மனதில் ஒருவித அச்சம் ஏற்படலாம். அது நாம் வைத்திருக்கும் கோப்புகள் பற்றியது அல்லது இணையத்தில் அவர்கள் முறையற்ற மற்றும் அவர்கள் வயதிற்கு மீறிய இணையதளங்களை பார்த்துவிடுவார்களோ என்பதாக தான் இருக்கும். உங்கள் பயம் தவறான இணையதளங்களை பற்றியதாக இருப்பின், உங்களுக்கான சரியான தீர்வு தான் இந்த பதிவு.
பெரும்பாலும் குழந்தைகள் இனையத்தில் டிவி பார்ப்பதற்காக மற்றும் விளையாடுவதற்காகவும் தான் முயற்சிகின்றனர்.
ஆனால் நாம் சதராணமாக வைத்திருக்கும் IE, Chrome, Mozila போன்ற மேலோடிகள் (Browsers) அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்துவதாகவும், பாதுகாப்பில்லாததாகவும் இருக்கின்றன. இதற்கு தீர்வாக கிடைப்பது தான் Kidoz மேலோடி.
kidoz மேலோடி குழந்தைகளுக்கு, அவர்கள் இனையத்தில் விடியோ பார்க்கும் போதோ அல்லது விளையாடும் போதோ மிகவும் பாதுகாப்பானதாக மேலோடியாக இருக்கிறது. இந்த மேலோடி குறிப்பாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலோடியில் நீங்கள் இனையத்தில் வரும் தகவல்களை பற்றி பயப்பட தேவையில்லை. இதில் எங்த இனையதளங்களை குழந்தைகள் பார்க்கலாம் என நீங்கள் தீர்மானிக்கலாம் மேலும் உங்களுக்கான கணக்கை இதில் துவங்கி உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் இணையதளங்களின் விவரங்களை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
Kidoz பயன்படுத்துவதன் முக்கிய நேக்கங்கள் :-
•பாதுகாப்பான மற்றும் இலவச இணைய மேலோடி(browser).
•பயன்படுத்த எளிதானது.
•குறிப்பாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
•நேரடியாக சிறந்த இனையதளங்கள், விடியோ மற்றும் விளையாட்டு தளங்களை அடையலாம்.
kidoz தரவிறக்கம் செய்ய, கிளிக் செய்யவும்
சனி, 4 டிசம்பர், 2010
குழந்தைகளுக்கான இணைய மேலோடி (browser)
8:42 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக